குடும்பனின் வரலாற்றில்

 பாண்டிய வேந்தன் முது குடுமி வம்சாவழியினரே இன்றைய குடும்பர் / குடுமி இனக்குழுவினர்.  


இரு கயலும்,செண்டும் மருத நில மள்ளர்களான பண்டைய ஆயர் மரபு யாதவர் வம்சாவழி முது குடும்பர்களின் பண்பாட்டு அடையாளம் ஆகும்.


குறிப்பு 


"கன்னித் தென்கரைக் கடற்பழந் தீபம் கொல்லங் கூபகஞ் சிங்கள மென்னும் எல்லையின் புறத்தவும் கன்னடம் வடுகம் கலிங்கந் தெலிங்கம் கொங்கணம் துளுவம் குடகம் குன்றகம் என்பன குட்பா

விருபுறச் சையத் துடனுறைய புகூறு தமிழ்திரி நிலங்களும்

முடிநிலை மூவர் இடுநில வாட்சியின் அரசுமேம்பட்ட குறுநிலக் குடுமிகள்

பதின்மரு முடனிருப்பிருவரும் படைத்த

பன்னிரு திசையில் சொன்னய முடையவும்"


(அகத்தியச் சூத்திரம்: தொல்காப்பியம் : சொல் எச்சம். 4ஆம் சூத்திர உறை : தெய்வச்சிலையார்)


அதாவது,


தமிழ்நாட்டின் எல்லைகள்:


“கன்னித் தென்கரைக் கட்றபழந் தீபம்

கொல்லங் கூபகஞ் சிங்கள மென்னும்

எல்லையின் புறத்தவும்…”


கன்னித் தென்கரை – கன்னியாகுமரி (தெற்கு எல்லை)


கட்ற்பழந் தீபம் – பழமையான இலங்கைத் தீவு


கொல்லம் – இன்றைய கேரளப் பகுதி


கூபகம் – கடற்கரைப் பகுதிகள்


சிங்களம் – இலங்கை (சிங்கள தேசம்)


இவை தமிழ்நாட்டின் தெற்கிலும் கடற்கரையிலும் அமைந்த பகுதிகள் என்று கூறப்படுகிறது.


அண்டை நாடுகள்:


“கன்னடம் வடுகம் கலிங்கந் தெலிங்கம்

கொங்கணம் துளுவம் குடகம் குன்றகம் என்பன…”


இங்கு தமிழகம் சுற்றியிருந்த தமிழ் திரிந்த பிற மொழி நாடுகள் குறிப்பிடப்படுகின்றன:


கன்னடம் – இன்றைய கர்நாடகம்


வடுகம் – ஆந்திரப் பகுதி


கலிங்கம் – ஒடிசா பகுதி


தெலிங்கம் – தெலுங்கு நாடு


கொங்கணம் – மேற்கு கடற்கரை (மகாராஷ்டிரா பகுதி)


துளுவம் – துளு நாடு (கர்நாடக கடற்கரை)


குடகம் – கூர்க் (Kodagu)


குன்றகம் – மலைப்பகுதிகள்


தமிழகம் இந்நாடுகளுடன் தொடர்புடையதாக இருந்தது என்று கூறுகிறது.


வளமான நிலங்கள்:


“விருபுறச் சையத் துடனுறைய புகூறு

தமிழ்திரி நிலங்களும்”


தமிழகம் இருபுறமும் கடலால் சூழப்பட்டு,


வளமான, தமிழ் திரிந்த நிலங்களைக் கொண்டது.


அரசியல் அமைப்பு:


“முடிநிலை மூவர் இடுநில வாட்சியின்

அரசுமேம்பட்ட குறுநிலக் குடுமிகள்”


முடிநிலை மூவர் – மூவேந்தர்கள்:


சேரர்


சோழர்


பாண்டியர்


தமிழகம் மூன்று பெரிய அரசர்களால் ஆளப்பட்டது.


குறுநிலக் குடுமிகள் – சிறு அரசர்கள் (மண்டல மன்னர்கள்), அவர்கள் மூவேந்தர்களுக்குக் கீழ்ப்படிந்தவர்கள்,குடுமிகள் மூவேந்தர்களின் மரபினர் ஆவார்கள்.


 இராணுவ வலிமை:


“பதின்மரு முடனிருப்பிருவரும் படைத்த

பன்னிரு திசையில் சொன்னய முடையவும்”


பத்து அல்லது பன்னிரு திசைகளிலும்


படை வலிமை கொண்டவர்கள்


எல்லாத் திசைகளிலும் புகழ் பெற்றவர்கள்


தமிழகம் அரசியல், இராணுவ மற்றும் கலாச்சார ரீதியாக வலிமைமிக்க நாடாக இருந்தது.


பண்டைய ஆயர்களில் கோவினத்து ஆயர் மற்றும் கோட்டினத்து ஆயர்களான குடுமிகள் நிலையான வேளாண்மை குடியிருப்பில் குடும்பர் என்று அறியப்படுகின்றனர்.இத்தகைய குடுமிகளான குடும்பர்கள் மருத நிலத்தில் மள்ளர் என்று தமிழ் இலக்கியங்களிலும், செப்பேடுகளிலும் அறியப்படுகின்றனர்.


பண்டைய காலத்திலிருந்தே குடுமி எனப்படும் குடும்பர்கள் தமிழ் நிலப்பரப்பில் மேம்பட்ட அரசாட்சி செய்துள்ளனர் என்பதற்கு மேற்கண்ட செய்தியும் ஓர் சான்றாகும். 


இராமமூர்த்தி குடும்பன்


#Mallar = #Kudumbar #Kudumi #Kurmi #Kunbi #Maratha #Yadu #Yadavar

Comments

Popular posts from this blog

குடும்பனின் வரலாற்று புரிதல்

திருநெல்வேலி இரயில் நிலைய நிலைய மேம்பாட்டு பணிகள்

திருநெல்வேலி யின் இலக்கியத்தில்