குடும்பனின் புரிதலில்
*திரிகடுகம் . மருந்து - கொஞ்சம் கசக்க தான் செய்யும்*- ராஜேந்திர திலகர்
*பெறுதிக்கண் பொச்சாந் துரைத்தல் உயிரை*
*இறுதிக்கண் யாமிழந்தோம் என்றல் – மறுவந்து*
*தன்னுடம்பு கன்றுங்கால் நாணுதல் இம்மூன்றும்*
*மன்னா உடம்பின் குறி.*
*விளக்கம்:*
* வசதி வந்த காலத்தில் ஆணவத்தினால் வாய்க்கு வந்ததைப் பேசுவது.*
* கடைசி காலத்தில் வாழ்க்கையை சரியாக வாழாமல் வீண்டித்து விட்டோமே என்று புலம்புவது. *
* உடல் மீது உள்ள ஆசையில் சீக்கு வந்து உடல் அழியும் போது வருந்துவது.*
*இந்த மூன்று செயல்களும், நிலையற்ற உடம்பை நம்பி வாழும் மூடர்களின் இயல்பு.*
மள்ளர்/பள்ளர்/தேவேந்திரர் என்னும் மூடர் கூடம்.
கொஞ்சம் கோவப்படாம கேளுங்க சகோ.
இந்த பதிவு நீண்ட நாள் ....யோசித்து... வேதனையில் வெம்பி... பகிர்கிறேன். புரிந்து கொண்ட உறவுகள் பகிருங்கள்.
புரியாதோர் - தொடர்ந்து தங்கள் அட்டை கத்தியை புலன குழுக்களில் வீசி கொண்டே இருங்கள் - மேலே கூறிய விளக்கத்தை போல.
பட்டியல் வெளியேற்றம் பேசும் தேவேந்திர குல வேளாளர்கள்/ வேண்டாம் என தரவுகளுடன் பேசி கொண்டு இருக்கும் பள்ளர்கள்... இவர்களுக்கு பொது மேடை அமைத்து கொடுத்த மூவேந்தர் மீடியாவுக்கு வாழ்த்துகள் - எனக்கு தெரிந்து சமூகத்தில் உருப்படியாக நடந்த ஒரே நிகழ்வு இது தான். ஆனால் அதன் முடிவை நான் அறிய இயலவில்லை.
எனது பார்வையில் பட்டியல் வெளியேற்றம் நிச்சயமாக வேண்டும் - உளவியல் ரீதியாகவாவது நம் சமூகம் உயர்வதற்கு.
காவலர் காவலில் கொலை செய்ய பட்ட சிங்காரம் சகோதரர் கொலையின் தீர்வு என்ன?
சிறைக்குள்ளயே வைத்து கொல்ல பட்ட முத்து மனோ கொலைக்கு நீதி எங்கே?
சும்மா படுத்திருந்தவரை வெட்டி கொன்ற நாயை பழி தீர்த்து இருக்கிறோமா? இல்லை காதல் செய்த காரணத்திற்காக கொல்ல பட்ட கவினை கொன்றவர்களை சிறையில் அடைக்க முடிந்ததா... நம்மால்?. இது போக ஒட்டு மொத்த பழி வாங்கலாக - மதுரை - சின்ன உடைப்பு மக்கள் பிரச்சினை, இப்போது ஆரோக்கியநாதபுர மக்களுக்கு பிரச்சினை... பட்டியலில் இருந்து விட்டதால் மட்டும் தீர்வு கிடைத்து விட்டதா???
பலியாடுகளா.. என்ன நாம்!!!
பட்டியலை விட்டால் எங்கு செல்வீர்கள்?
EWS என்னும் அரிய வகை ஏழைகள் கூடாரத்தில் இணைவோம். எதுவாகினும் பார்த்து விடலாம். எதற்கு மீண்டும், மீண்டும் அடிமை தளை தனிலே?!?!?
ஏழாம் அறிவு சூர்யா போல... மீண்டும் ஜனனிக்கட்டும் - மன்னர் பரம்பரை ஜீன்கள்.
வடிவேலுவை திரை படத்தில் கூறுவதை போல... இவன் அதுக்கெல்லாம் சரி பட மாட்டான்... என்ற கதையாக தான் உள்ளது - தேவேந்திரர்களின் நிகழ கால/ கடந்த 20 ஆண்டு கால அரசியல் வாழ்வு.
மங்குனி அமைச்சர்களா... என்றே அழைக்க தோன்றுகிறது - நம் ஒவ்வொருவரின் செயல்பாட்டையும் பார்த்து.
எல்லாவற்றிற்கும் உணர்ச்சி வசப்படும் நோய்....
ஏதேனும் ஒரு கட்சி - ஆதரவாக பேசி விட்டாலே போதும்... படுத்தே விட்டார்கள் நிலை தான் - தேவேந்திரர்களுக்கு. அப்புறம் எப்படி உன்னை அரசியல்ல மதிப்பான... காலம் பூரா - மாவட்ட செயலாளர் கொடுக்கல... வட்டம் கொடுக்கல்... MLA சீட்டு கொடுக்க மாட்டேன்கிறான்... MP kku சம்பந்தமே இல்லாத தொகுதியில கொடுக்கிறான்னு. அடே... அப்பரசிண்டீஷ்களா ... மரியாத... மரியாத... அரசியல் ஆபிஸரஸ்...
ஒருத்தங்க உங்களை பத்தி பேசுனா... அவனுக்கு என்ன ஆதாயம்... நமக்கு என்ன பலன் கிடைக்கும் அப்படிங்கிறது தான் அரசியல்.
அதை விட்டுட்டு அவர் வீட்டுக்கு கூப்பிட்டு சாப்பாடு போட்டாரு...
எங்க வீட்டுல வந்து கை நினைச்சுட்டு போனாரு... அப்படின்னா... அதுவே போதும்கிறது தான் அரசியலியாதி பார்வை...
முதல்ல சாதி கட்சின்னா என்ன? சமூக கட்சின்னா என்ன? கட்சி ஏன் அடுத்த கட்டத்திற்கு நகரவில்லை என ஆராய வேண்டும்...
சாதிக்குஎன்ன கிடைக்கும் என்கிற பொதுவான பார்வை வேண்டும். இருக்கிற எந்த கட்சியா இருந்தாலும், சாதியை முன் நிறுத்தாமல் தமிழ் நாட்டில் அரசியல் இல்லை.
எம்மாடி... 51 கும் மேற்பட்ட சமூகம் சார்ந்த புலன குழுக்களில் பயணிக்கிறேன்... புலன குழுக்கள் ஆரம்பித்த புதிதில், ஒவ்வொரு குழுவிலும் அட்டை கத்தியை சுற்றி... சுற்றி அயர்ந்த போய்... இப்போதெல்லாம்.... Select all - clear chat.
ஏனிந்த மாற்றம்... ஒரு பேராசிரியர்கள் மட்டுமே பயணிக்கும் குழுவில்... அறிவாளி ஒருத்தன் வந்து... அவரின் மகள் நடிகையானால்... என பதிவிட்டார்.... மக்கா... நீ பதிவிட்டதுக்கும் இந்த குழுவுக்கும் என்னடா சபாந்தம்.. ன்னு கேட்டதுக்கு வெக்கமே இல்லாமல் பதில் வேற சொல்லிட்டு போறான்... இவனுகளெல்லாம் வச்சிகிட்டு.... சரி போவோம்... அப்படின்னு...
பத்தாம் வகுப்பு/ +2 மாணவர்களுக்கு "பொது தேர்வுக்கு தயார் ஆவது எப்படி" ஒரு இணைய வழி காட்டி நிகழ்வு நடத்துனா... வேடிக்கை பாக்க ஒரு பத்து பேரு வாராங்க... என்ன ஒரு சமூக மாற்றம். வியந்துட்டேன்...
அட பரிதாப பள்ளனே...
இன்னும் 20/30 வருசம் ஆனாலும் இந்த சமூகம் இப்படி தான் இருக்கும். போய் உன் வேலைய பாருன்னு...
உள் மனசு அடிச்சுகிட்டாலும்... சமூகத்துக்குன்னு நாலு நல்ல சனம் நாயா உழைக்குதே.... அவங்களுக்காவது உதவியா இருக்கட்டுமென்னு தான் இவளோ நீள பதிவு...
அப்புறம் இந்த மானம்/ ரோசம் எல்லாம் இருக்கு அப்படின்னு சண்டைக்கு வரணும்...நா வாங்க. நம்ம அண்ணா ஒருத்தர் அரசியல் கட்சியில பதவி எல்லாம் வாங்கிட்டு... MLA சீட்டுக்கும் எதிர் பார்த்து காத்திட்டு இருக்கார்... அப்பிடியே போய் அவருக்கு ஆதரவா நாலு வார்த்தை பேசிட்டு, அப்புடியாக்க திட்ட வாங்க...
காத்துகிட்டு இருக்கேன்.
Comments
Post a Comment