குடும்பர்களின் வாழ்வியலில்


 குடும்பு முறையை தோற்றுவித்து உலகாண்ட பாண்டிய மரபுக் குடியான குடும்பர்கள்(பள்ளர்கள்) மற்றும் இதன் கிளை மரபுக் குடியினர்களின் இறப்பு சடங்கு முறை நிகழ்வுகளை படித்து பண்பாட்டை காக்க முற்படவும்!!!


    குடும்பர்கள் (பள்ளர்கள்) இனத்தில் வயது முதிர்ந்த இயற்கை மரணம் அடைந்த தெய்வங்களுக்கு  பண்பாட்டு ரீதியாக குடும்பர்கள் செய்யும் சடங்கு முறைகள்


♦இறந்தவரை வடக்கு நோக்கி உரல் அல்லது மரச் சேரில் உக்கார வைத்து வௌ்ளைத் துணியை நாடியோடு சேர்த்து கட்டி நெற்றியில் சந்தனம் இட்டு நாணயத்தை ஓட்ட வைப்பர்.


♦இறந்தவரின் அருகில் வெண்கல நாழியில் நெல் இட்டு, அதன் மேல் ஈசன் (சிவ) மற்றும் பெருமாள் அடையாளத்துடன் கூடிய சிறு விளக்கை ஏற்றுவார்கள்.


♦குத்து விளக்கையும் ஏற்றி வைப்பார்கள்.


தேர் செய்தல்:


 ♥இறந்தவரை சுடுகாட்டிற்கு கொண்டு செல்ல தேர் செய்வார்கள்..


♥ 3 முகம், 5 முகம் மற்றும் 7 முகத் தேர்கள் செய்வார்கள்.


♥இந்த தேரில் 8 பேர் தூக்கும் வடிவில் செய்யப்பட்டிருக்கும், 


♥தேரில் இறந்தவரை இராஜா போல் உட்கார வைக்கும் படியாக கட்டப்பட்டிருக்கும், 


♥தேர் சுற்றிலும் சீலைகள் மற்றும் வண்ண பட்டுத்  துணிகளால் அலங்கரிக்கப் பட்டு இருக்கும்.


♥தேரின் உச்சியில் செம்பு என அழைக்கப்படும் கலசம் போன்ற கும்பா கவுத்தப் பட்டிருக்கும்.


♥தேரின் மேல் மேலும் ஓருவர் அமரும்படி வடிவமைக்கப் பட்டிருக்கும்...


நீர் மாலைக்கு செல்லுதல்(தண்ணீர் எடுத்தல்)::


♪இறந்தவரின் மகன்கள் மற்றும் மைத்துன மார்கள் ஓர் சேலையின் விரிப்பிற்குள் நின்று கொண்டு அந்த ஊரில் இருக்கும் கிணற்றிற்கு செல்வார்கள்


♪ஊர் கிணற்றில் இருந்து நீர் இரைத்து நீராட்டி , கிணற்றிற்கு அருகில் கலயங்களில் பூநூல் அணிவித்து மாவிலை சொருவி தேங்காய் பழம் வெத்தளை பாக்கு வைத்து பள்ளு வை வணங்குவார்கள்.


♪இறந்தவரின் மகன்களுக்கு திருநீரால் பட்டை(ஈசன்/சிவ அடையாளம்) அடித்து , பூஜை செய்து "பூநூல்" அணிந்து விடுவார்கள்.


♪கலயத்தில் கொண்டு வரும் நீரை வீட்டில் இறந்தவரின் பாதங்களில் ஊற்றி, பூநூலையும் அறுத்து இறந்தவரின் பாதங்களில் இடுவர்...


இறந்தவரை குளிப்பாட்டுதல்:


    உரல் அல்லது வீட்டு கதவுகளில் கிழக்கு நோக்கி  அமர வைத்து இறந்தவரை குளிப்பாட்டுவார்கள்...


தாலி அகற்றுதல்:::


 *இறந்தவரின்  மனைவியை அம்மிக் கல்லில் நிற்க வைத்து தாலிக் கயிரை அறுத்து இறந்தவரின் பாதங்களில் இட்டு, குங்குமத்தை அழிப்பர்.


*பிறகு வௌ்ளை நிறப் புடவையை உடுத்துவர்.


இறந்தவரோடு பவனி வரும் தேர்::


    ♥இறந்தவரை தேரில் அமர வைத்து ஊர்வலம் வரும் பொழுது சின்ன குழந்தைகளுக்கு தண்ணீர் அடித்து வணங்குவர்...


♥ இறந்தவரின் மகன்கள் தேரின்  முன் கொள்ளி வைக்கும் நெருப்புடன் நடந்து வருவர்.


கொள்ளிக் குடம் உடைத்தல்:::


   ♪  இடுகாடு என அழைக்கப்படும்  இடத்தில் கொள்ளி குடத்தை இறந்தவரின் மகள்கள் உடைப்பர்..


♪மகள்களின் தலையில் மண் குடத்தை சுமந்த படி  தேரை மூன்று முறை சுற்றிய பின் பானையை உடைத்து, எல்லோரும் கட்டி பிடித்தவாரு அழுவர் ..


இறந்தவரை புதைத்தல்::


  மற்ற இனத்திற்கு இல்லாத சிறப்பு குடும்பர்களுக்கு உண்டு, அது


♦6 அடி நீளம்,3 அடி அகலம் என்ற முறையி்ல் குழி வெட்டப்பட்டிருக்கும்.


♦குழிக்குள் இறந்தவரை வடக்கு நோக்கி உட்கார வைப்பர்(மன்னர் போல் அமர்ந்து இருக்கும் தோரணையில் புதைப்பர்)


♦குழிக்குள் தலையை வைப்பதற்கு விளக்கு சாவடி போன்று மண்ணை குடைவர்...


♦மகன்களுக்கு மொட்டை அடிப்பார்கள்


♦குழியை மூடிய பின் வீட்டிற்கு திரும்புவர்...


பால் ஊற்றும் நிகழ்வு:::


  இறந்த 2 மற்றும் 3 ம் நாளில் இறந்தவரை புதைத்த இடத்திற்குச் சென்று பால் ஊற்றி அந்த குழியை முழுவி நவ தானியங்களை குழிக்கு மேல் தூவி, புதைக்கப்பட்டவரின் தலைப் பகுதியில் கலயம் வைத்து, தென்னம் பூ மற்றும் இதர மலர்களை தூவி வணங்கி வருவர்....


இதுபோன்று  பாண்டிய குடும்ப பேரரசர்கள் வீர மரணம் மற்றும் இயற்கை மரணம் அடையும் போது இறப்பு சடங்கு முறைகளை மேற்கொண்டு வந்துள்ளனர், அதன் எச்சங்கள் தான் இன்று ஈசன் ( சிவ ) மற்றும் பெருமாள் ( வைணவ) ஆலயங்களில் தேர் இழுக்கும் திருவிழாவாக  கொண்டாடி வருகிறோம்...


கோயில்களில் இழுக்கப்படும் தேரும், குடும்பர்களில் இறந்தவரை சுடுகாட்டிற்கு கொண்டு செல்லும் ஓன்றாகவே இருக்கும்...


குறிப்பு:::


1.ஈசன் (சிவ) மற்றும் பெருமாள் (வைணவ) ஆலயங்கள் நம் முன்னோர்களை புதைத்த இடமே!!!


2.இறந்து புதைக்கப்பட்ட நம் முன்னோர்களின் வம்சத்தை குறிக்க  பள்ளு (லிங்கம் ) அங்கு நடப்பட்டது. இதுபோன்று  குடும்பர்களின் அனைத்து புதைவிடங்களிலும் காணப்படுகின்றன. (மதுரை கோவலன் பொட்டல் சுடுகாட்டில் இதன் எச்சங்கள் உண்டு).


3.குடும்பர்கள் வந்து தடிப் போட்டால் தான் கோயில் தேர் நகரும் என்பது மரபு (குடும்பர்களில் இறந்தவர்களை தேரில் சுமந்து செல்ல மற்ற இனத்தாரை அனுமதிக்கமாட்டார்கள்)


இது போன்ற பல மரபு சார்ந்த வழக்கங்கள் இன்று வரை காணப்படுகிறது.


குறிப்பு:


இன்னும் அதிகமான தகவல்களை நான் எழுதி வரும் "பள்ளர்களின் வாழ்வியல் சடங்கு முறைகள்(பிறப்பு, முன்னோர் வழிபாட்டு சடங்கு, திருமண சடங்கு, புனித நீராட்டு சடங்கு, இறப்புச் சடங்கு போன்ற பல)" என்ற நூலில் தெரிந்து கொள்ளலாம்!

Comments

Popular posts from this blog

குடும்பனின் வரலாற்று புரிதல்

திருநெல்வேலி இரயில் நிலைய நிலைய மேம்பாட்டு பணிகள்

திருநெல்வேலி யின் இலக்கியத்தில்