குடும்பனின் வாழ்வியலில்
மூன்றாவது முறையாக வீட்டிலேயே பெண் குழந்தை பிறந்தது.
#திணை: புறவு, இதயவனம், இரும்பொறை
#சிறுபொழுது: 12.10 யாமம், பத்தாம் வளர்பிறை மதி பூரம் நல்சித்திரத்தில், செவ்வாய்
#பெரும்பொழுது: வைகாசி-17 இளவேனில், 5126
#காட்சி: வீட்டிலேயே தாய் குழந்தையை பெற்றெடுத்தல்
#குழந்தை_பிறப்புக்கு_முன் :
மாலை உணவிற்குப்பின் வானில் மதியை கண்ட மனைவி இன்று மதி எந்த நல்சித்திரத்தில் பயணிக்கிறது என கேட்க தற்போது மகம் நல்சித்திரத்தில் பயணிக்கிறது என கூறினேன்.
ஏன் கேட்கிறாய் என நான் வினவிய போது பிள்ளைப்பேறு வலி தொடங்கிவிட்டது என மனைவி கூறினார். பிறகு சீரக நீர் காய்ச்சி கொடுத்தேன்.
#குழந்தை_பிறப்பு:
இரவில் வீட்டின் விளக்கெண்ணெய் தீப ஒளி, தேன் வண்ணத்தில் நிறைந்திருந்த போது, பூரம் நல்சித்திரத்தில் பயணித்து கொண்டிருந்த வான் மதி வெளிச்சம் பசும்பால் வண்ணத்தில் கூரையின் ஓட்டை வழியாக வானிலிருந்து விழுந்திருந்த போது ....
நானும் எனது தாயும் எனது மனைவிக்கு பின்னிருக்க...
மகள் நிலா மனைவிக்கு முன்னிருக்க...
பெண் எனும் பேராற்றல் படைப்பை செய்தது.
ஆம் செல்வ மகள் #பிறந்தாள்
#பெயர்_சூட்டும்_விழா:
மகள் வான் மதி வெளிச்சத்தில் பிறந்ததாலும்,
இதயவனத்தின் இரண்டாவது நிலா என்பதாலும்,
”#மதி” என பிறந்தவுடன் பெயர் சூட்டப்பட்டது.
மூத்த மகள் நிலா இளைய மகளை “மதி” “மதி” “மதி” என அழைத்து பெயர் சூட்டும் விழா கொண்டாடப்பட்டது.
#பேரன்பு:
கோழிக்குஞ்சு ஆட்டுக்குட்டி கண்ணுகுட்டி ஆகியன பிறந்த போது செலுத்திய அதே பேரன்பை மகள் நிலா தனது தங்கை மதிக்கும் காட்டினாள்.
#காப்புப்பை :
சிறிது நேரத்தில் நஞ்சுப்பை (placenta) எனும் காப்புப்பை வெளிவந்தது அதை தேக்கு மர முக்காலி தாங்கிக்கொண்டது மதி பிறந்தவுடன் ஒருமுறை அழுதுட்டு மீண்டும் தூங்கிவிட்டாள் . பால் குடிக்காமல் அவ்வப்போது ஆரோகியமாக கைகால் அசைத்து விட்டு தூங்கி கொண்டிருந்தாள். குழந்தைக்கு முதன் முதலாக ஆகாரமாக மழை நீர் தரப்பட்டது. தேவையின் குறிப்பறிந்து குளிக்க அப்பா சுடு நீர் காய்ச்சி கொடுத்தார்.
#மீண்டும்_கருவறை:
கூரை வீடும் கோரை பாயும் மண் தரையும் காப்புப்பையும் பிறந்த குழந்தைக்கு மீண்டும் கருவறை சூழலையே தந்தது. காப்புப்பை முக்காலியில் அமர்ந்துகொண்டு குழந்தைக்கான ஆற்றலை தந்துகொண்டிருந்தது.
#விடியும்வரை விசிறி:
குழந்தையை பெற்றெடுத்த மனைவி காயத்திரி கொஞ்ச நேரத்திலேயே அலைப்பேசியில் தனது தாய் மற்றும் உறவினர்களுக்கு பெண் குழந்தை பிறந்த செய்தியை மகிழ்ச்சியாக தெரிவித்துக்கொண்டிருந்தார். எனது தாய் மற்றும் நிலா குழந்தைக்கும் மனைவிக்கும் தேவையான பணிவிடைகளை செய்துவிட்டு அனைவரும் உறங்கிவிட்டனர். விடியும்வரை குழந்தைக்கு விசிறி ஆட்டி கவனித்துக்கொண்டிருந்தேன்.
#விளக்கெண்ணை / #கதிரவன் :
காலையில் மாமியார் மாமனார் மற்றும் மகன் ஆலன் ஆகியோர் வந்து சேர்ந்தனர். மாமியார் சுண்டுக்கார பண்ட இரசம் வைத்து மனைவிக்கு கொடுத்தார். மனைவிக்கு கழிவுகள் நன்றாக வெளியேறியது. காலையில் கதிரவன் மதியை காண வந்தது. ஏற்கனவே வறுத்து இடித்து வேய்த்த விளக்கெண்ணையை அம்மா குழந்தையின் கண்கள் மற்றும் காதுகளில் ஊற்றி இளங்கதிரவனை காண வைத்தனர்.
#குளிப்பாட்டுதல்:
குழந்தையின் தலைக்கு அருகிலுள்ள தாவரங்கள் மூலம் செய்யப்பட்ட அரப்பு பொடியும் குழந்தையின் மேனிக்கு ஆவாரம் பூ மற்றும் காட்டில் விளைந்த பச்சைபயிரையும் இடித்து குழந்தையை குளிப்பாட்டினோம் பிறகு காட்டிலிருந்து சேமித்த யானை லத்தியும் விசதேள் கொடுக்குகளையும் போட்டு குழந்தைக்கு புகை போட்டோம்
#காப்புப்பை_வளர்த்தெடுக்கும்_கனிமரம்:
குழந்தை நான்காவது நாளில் தான் பாலூட்ட ஆரம்பித்தது. ஆறாவது நாளில் தொப்புள் கொடி தானாக விழுந்தது. காப்புப்பை குழந்தையிடம் விடைபெற்று பலா மரக்கன்றை வளர்த்தெடுக்க ஆரம்பித்துவிட்டது.ஆம் குழி தோண்டி காப்புப்பை வைத்து பலா மரக்கன்றை நட்டுவிட்டோம். அப்போது மழையும் வந்துவிட்டது . மதி வளரும்போது பினியுறும்போதும் மகிழ்வுறும்போதும் பலா மரத்தின் மூலம் காப்புப்பை அவளை காத்தருளட்டும்
நன்றி
இளங்கோ
இதயவனம்
Comments
Post a Comment