குடும்பர்களின் வரலாற்றில்

 புத்தக புரட்சியாளன் தீபக் பாண்டியனுக்கு வீரவணக்கம் 

நிலம், பொருளாதாரம், அரசியல், ஆட்சி, அதிகாரம் என அனைத்து நிலைகளிலும் வீழ்த்தப்பட்டிருக்கும் பூர்வகுடிகளின் விடுதலைக்காகப் போராடிய - போராடிக் கொண்டிருக்கிற நம்முடைய வீரஞ்செறிந்த மனிதர்களை திட்டமிட்டு இருட்டடிப்பு செய்து வருவதை நாமறிவோம். 


அவ்வகையில் 20.05.2024 அன்று சாதிய பயங்கரவாதிகளால் வீழ்த்தப்பட்ட தீபக்பாண்டியனை வன்முறையாளனாக கட்டமைத்து இருட்டடிப்புச் செய்ய பலரும் கச்சை கட்டுவதையும் நாமறிவோம். 


"சமூக விடுதலைக்கான பயணத்தில் ஆயுதம் ஏந்திய போராட்டம் தீர்வாகாது என உணர்ந்தேன்"  என்று 30.04.2023 அன்று தனது முகநூலில் எழுதிய

 சட்டக் கல்லூரி மாணவர் தீபக் பாண்டியன் திருமணம் உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் 20.05.2024 அன்று சாதிய பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டார். 

கல்வியும்; அதிகார அரசியலும்தான் பூர்வகுடிகளை/மண்ணின் மைந்தர்களை விடுதலை செய்யும் என்பதை உணர்ந்து செயல்படத் தொடங்கி மாணவர்கள் இளைஞர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து எழுச்சியை உருவாக்கி வந்த சூழலில்தான் தீபக் பாண்டியன் படுகொலை அரங்கேற்றப்பட்டது. 


அறிவுத்தளச் செயல்பாடுகளையும் அதிகார அரசியலையும் பூர்வ குடிகளின் விடுதலைக்கான பாதையாக தேர்ந்தெடுத்து ஓர் உயர்ந்த நோக்கத்திற்காக தன் வாழ்வின் இறுதி நாட்களை அர்ப்பணித்துக் கொண்ட 

தீபக்பாண்டியனுக்கு 

நினைவேந்தல் நிகழ்வு நடத்துவதையும்; 

வீரவணக்கம் செலுத்துவதையும்

 அதிகாரத்தில்இருப்பவர்கள் எப்படியாவது தடுத்து விட வேண்டுமென நினைக்கிறார்கள். 

முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் அறுபதுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பொய் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் சொந்த ஊருக்குள் நுழைய முடியாத நெருக்கடி, குடும்பங்கள் அலைக்கழிக்கப்படுகிற அவலம். இத்தகைய சமூகத்தின் மீதான நெருக்கடிகளுக்கு, அடக்குமுறைகளுக்கு தீர்வுகாண வேண்டிய தலைமைகள், அமைப்புகள், கட்சிகள் அமைதிகாப்பது ஆபத்தானது. 


இவையனைத்திற்கும் தீர்வு காண வேண்டுமெனில் அமைப்பு கடந்து, கட்சி கடந்து, அரசியல் கடந்து நாம் சமூகமாக ஒன்றிணைய வேண்டும்.

சமூக ஒற்றுமையை கட்டியெழுப்ப வேண்டும்.

பூர்வ குடிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் நாம் சொல்லிக் கொள்வது... 


தீபக்பாண்டியனை 

நினைவு கூர்வதன் மூலம் ஒன்றிணைய வேண்டும்.

அநீதிகளை எதிர்க்க வேண்டும்.

அறிவாயுதம் ஏந்த வேண்டும்.

அதிகார அரசியலை உயர்த்திப் பிடிக்க வேண்டும் .

வரலாறு நம்மை விடுதலை செய்யும். 


⚫

Comments

Popular posts from this blog

குடும்பனின் வரலாற்று புரிதல்

திருநெல்வேலி இரயில் நிலைய நிலைய மேம்பாட்டு பணிகள்

திருநெல்வேலி யின் இலக்கியத்தில்