குடும்பனின் வரலாற்றில்

 [27/05, 09:47] மூத்தவர்: 

பொருளாதார பலமும் , அரசியல் அதிகாரமும் இருப்பதால் தங்களுக்கான தொன்மை வரலாற்றைக் கட்டமைப்பதில் பல இனங்கள் மூர்க்கமாகப் களமாடுகின்றன. 

அவர்களின் பின்னால் ஒரு இயங்கு ஆற்றல் அவ்ர்களைத் தூண்டிக் கொண்டிருக்கிறது. 

அவர்கள் என்னதான் பெரிய பொருளாதார, அரசியல் சக்திகளாக இன்று வலம் வந்தாலும் , பழைய வரலாறு அவர்களை அமுக்குப் பேய் போல வந்து அவர்களின் பழைய வரலாற்றை நினைவூட்டிக் கொண்டே இருப்பதால், செய்வதறியாது திகைக்கிறார்கள்.

அந்த சூழ்நிலையிலிருந்து தப்பிக்கும் மனநிலையில் தவிக்கிறார்கள்.

 போலியானதை வைத்து புது வரலாறைப் படைக்க முனைகிறார்கள்.

 அவர்களின் குழம்பிய மனநிலையை பயன்படுத்திக் கொண்டு இது போன்ற போலி வரலாற்று பொய்யாளர்கள் புதுக் கதைகளை கையில் எடுத்துக் கொண்டு சவால் விடுகிறார்கள். 

ஒற்றைக் கண் கொண்டு குறுகிய துவாரத்தின் வழியே வரலாறைப் பார்க்கிறார்கள். புளங்காகிதம் பெறுகிறார்கள். 

அவர்களின் வரலாற்றின் சக்கரங்களை உந்தித் தள்ளினாலும் ஒரு மில்லி அளவு கூட நகர்த்த முடியாது என்பது அவர்களுக்குத் தெரியவில்லை.

 அவ்வளவு வரலாற்றுச் சொந்தக்கார்ர்கள் மேற்கு வாயிலைத் திறந்து வழிபட வேண்டியதுதானே?.

 அல்லது குடும்பர்கள் போன்று கோட்டை நெல் அளக்கிறார்களா?. 

அல்லது 

தங்கள் உரிமையை நிலைநாட்டவாவது மேற்கு வாயிலில் பூசைகள் நடத்துகிறார்களா? 

ஒரு மடம் கூட கட்ட இயலாதவர்கள் உதய மார்த்தாண்டனை உதவிக்கு அழைக்கிறார்கள்!. 

சிவந்தி நாட்டாரை தனது என்கிறார்கள்.

 நாடன் வேறு, நாட்டார்வேறு 

நாங்கள் உயர்வு பட்டயம் எழுதியிருக்கிறோம் பாருங்கள் என்கிறார்கள். 

என்னதான் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் வரலாறு இந்தக் குப்பைகளை வங்கக் கடலின் அடி ஆழத்தில் அமிழ்த்தி விடும்.

[27/05, 10:44] மூத்தவர்:

 சைவ மடங்கள் வடுக ஆட்சிக் காலத்தில் உருவாகின. 

சோழர்கள்/ பாண்டியர்கள் ஆட்சி காலத்தில் கோவில்களே தலைமை பீடமாக இருந்து ஏராளமான கோவில் நிலங்கள், அங்காடிகள், ஏரிகள் கோவில் நிர்வாகத்தில் இருந்த குடும்பர்களின் கட்டுப் பாட்டில் இருந்தன. 

ஏராளமான சொத்துடைமைகளைப் பார்த்த வடுகர்கள் கன்னட/ தெலுங்குப் பகுதிகளில் இருந்து வந்த ஒரு கூட்டத்தை மடங்கள் நிறுவத் தூண்டியது. 

கோவில்கள் மடங்களின் கட்டுப் பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.

 கோவில் நிர்வாக அமைப்பு கலைக்கப்பட்டு, பூசை செய்த பண்டாரங்கள் விரட்டப்பட்டு பார்ப்பனர்கள் வசம் ஒப்படைக்கப் பட்டது. 

குடும்பர்கள் நிர்வகித்த கோவில் சொத்துக்கள் அனைத்தும் மடங்களின் கீழ் சென்றது. 

கோவில் நிலங்கள் மடங்களின் சொத்தாக மாற்றப்பட்டது. 

இதை எதிர்த்த குடும்பர்களை மூர்க்கமாக ஒடுக்கினர் ஆட்சியாளர்கள்.

 குடும்பர்களின் வேளாளர் பட்டம் சைவ மடத் தலைவர்களுக்கு கொடுக்கப்பட்டது. 

இப்படித்தான் வந்தேறி வடுக கூட்டத்தின் ஒரு பிரிவினர் வேளாளர் என்ற புதிய சாதியாக தோற்றம் கண்டனர்.

 குடும்பர்களை மடத்துப் புலவர்களால் பள்ளர்கள் என்று பள்ளுப்பாடல்களால் ஒடுக்கப் பட்டனர். 

வேளாளர் பட்டம் குடும்பர்களிடமிருந்து பிடுங்கப் பட்ட வரலாறு இதுதான்

[27/05, 10:57] மூத்தவர்:

 பள்ளுப்பாடல்களில் வரும் பண்ணை இ‌‌ந்த கோவில் நிலத்தை இலவசமாகப் பெற்ற வெள்ளாளன் தான். 

குடும்பர்கள் கலகம் செய்த இடங்களில் பறையர்கள், சக்கிலியர்கள், வன்னியர்கள் வேளாண் தொழிலில் ஈடுபடுத்தப் பட்டனர். 

இப்படித்தான் சாகுபடிக்குள் பறையர்களும் சக்கிலியர்களும் உள் நுழைக்கப்பட்டனர்.

Comments

Popular posts from this blog

குடும்பனின் வரலாற்று புரிதல்

திருநெல்வேலி இரயில் நிலைய நிலைய மேம்பாட்டு பணிகள்

திருநெல்வேலி யின் இலக்கியத்தில்