குடும்பனின் பார்வையில்

 கன்னடம் செம்மொழியானதெங்ஙனே?


2004 இல்  (செப்/அக்)  தமிழ் ஒரு செம்மொழி என்று அறிவிக்கப்பட்டதும், செம்மொழி என்பதற்கான விதிகளில்  திருத்தம் என்ற பெயரில்  ஒரு சிதைப்பு நிகழ்ந்தது. 


"செம்மொழி என்று சொல்லப்படும் ஒரு மொழிக்கும் அதன் பழமைக்கும் தொடர்பு அறுந்திருக்கலாம்; 

அல்லது

பழைய வடிவத்தில் இருந்து தற்கால வடிவம் முழுமையாக மாறுபட்டிருக்கலாம்; அல்லது பழமை உருவாக்கிய புதிய மொழியாகக் (offshoots) கூட இருக்கலாம்."  

இதான் மாற்றம். கூர்ந்து கவனிக்க.


2ம் நூற்றாண்டில் எழுத்து வடிவம் பெற்ற சங்கதமும் அதன் பழைய வடிவம் என்று சங்கதப் பற்றாளர் சொல்கின்ற வேதமொழியும் வெவ்வேறு. அதனால் விதியை மாற்றித்தான் சங்கதமே 2005 நவம்பரில் செம்மொழி ஆயிற்று.


சங்கதத்தையாவது பொ.பி 2 நூற்றாண்டு வடிவம் என்று சொல்லமுடிகிறது. 

ஆனால் கன்னடத்தின் முதல் இலக்கியமே பொ.பி 850 இல் உருவான கவிராசமார்க்கம் என்ற செயின இலக்கிய நூல்தான். 

இலக்கணமோ 12நூற்றாண்டில் சங்கதத்தில் உருவான "கருநாடக பாசை பூசனா".


குறைந்தது 1500-2000 ஆண்டுகள் ஆன பழம் இலக்கியங்களின் குவியல் இருக்க வேண்டும் என்ற விதியே, செம்மொழித் தகுதி கொடுத்தவர்களின் கண்களில் படவில்லை என்பதைக் காணுங்கள்.


 1150 ஆண்டு ஆன இலக்கியத்தை வைத்துக் கொண்டு 1500 ஆண்டை முன்னிய இலக்கியங்கள் வேண்டும் என்ற விதியை எப்படி உடைத்தார்கள்?


அதுதான் அந்த விதித் திருத்தம். 


".... பழைய மொழி உருவாக்கிய புதியமொழியாக இருக்கலாம்" என்ற விதியில் பழைய மொழியாகத் தமிழ் கருதப்பட்டது. புதிய மொழியாக (offshoot) பொ.பி 850க்குப் பின்னிய கன்னடம் கருதப்பட்டது.


இப்படித்தான் கன்னடத்திற்குச் செம்மொழித் தகுதி வழங்கப் பட்டது.

 தமக்கு வேண்டும்போது கன்னடர்க்கு மூலமொழியாகத் தமிழ் கண்ணில் படும்.

 தேவையில்லாதபோது தமிழர்க்கு எதிரான பகையை அவிழ்த்துவிடும்.


தெலுங்கும், மலையாளமும் இதே கன்னடப் பாதை வழியாகத்தான் செம்மொழித் தகுதியைப் பெற்றன என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?


ஆனால், உலகம் போற்றுகிற  7 செம்மொழிகளான கிரேக்கம், இலத்தீனம், சீனம், அரபி, தமிழ், சங்கதம், ஈபுரு ஆகியவற்றிற்கான செம்மொழித் தகுதியின் வரைவை  உலகம் சிதைக்கவில்லை. சியார்ச் ஆர்ட்டு தந்த அந்த வரைவு சிதையாதுள்ளது.


நிறைகுடமாகத் தமிழ் அன்றும் இன்றும் தொடர்கிறது. 

வயிற்றெரிச்சலில், பன்றி பல குட்டி போட்ட மாதிரி இந்தியா பெற்றுப் போடும் செம்மொழிகளின் எண்ணிக்கைப் பெருகிக் கொண்டே இருக்கிறது.


நன்றி 

நாக.இளங்கோவன்

Comments

Popular posts from this blog

குடும்பனின் வரலாற்று புரிதல்

திருநெல்வேலி இரயில் நிலைய நிலைய மேம்பாட்டு பணிகள்

திருநெல்வேலி யின் இலக்கியத்தில்