குடும்பனின் பார்வையில்
பதநீருக்கும், கள்ளுக்கும் வேறுபாடு தெரியாமல் உளறும் உருட்டுகள்.
பதப்படுத்தப்பட்ட பனை நீர் - பதநீர்
சமீபத்தில் திடீரென கையில் எடுக்கப் பட்டிருக்கும் "கள்" உணவு போராட்டத்தின் எதிர்கால கணக்கு என்னவாக இருக்கும் என்கிற புரிதல் கூட இல்லாமல் ஒரு கூட்டம் சம்பந்தப்பட்ட போராட்ட புகைப்படங்களையும் காணொளியையும் ஆதரித்து பின்னணி பாடல்களோடு பகிர்ந்துகொண்டு கிடக்கிறார்கள், நீங்கள் புத்திசாலியாக இருந்தால் அந்த தியாகிகள் யார் என்பதை நீங்கள் யூகித்திருப்பீர்கள்....😀😀
அதுல அழகியல் என்னான்னா
"பூட்டன் புஞ்சைய தொலைச்சான்
பாட்டன் நஞ்சைய தொலைச்சான்
கல்லா கடவுளும் கெடக்க
காடானோம் கூலிகுடியானோம்"
ன்னு கர்ணன் திரைபட பாடல் ஒன்றை உருட்டி விட்டிருக்கிறார்கள், நஞ்சையையும் புஞ்சையையும் எப்படி தொலைத்தார்கள் என்று நம்ம தியாகிகள் சிந்தித்திருந்தால் நாம் சிரிக்க வேண்டிய தேவை இருந்திருக்காது, படம் எடுத்த மாரிக்கே தலீத்தியத்தில் டஃப் கொடுப்பார்கள் போல நம்ம #தியாகிகள்....😀😀
2014 காலகட்டத்தில் இப்படித்தான் திடீரென டாஸ்மாக் க்கு எதிராக ஆங்காங்கே போராட்டம் நடந்தது, நமது #திராவிடம் 2.0 இளைஞர்கள் பலர் அதன் பின்னணி தெரியாமலே போராடி வழக்கு வாங்கி இன்றுவரை அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள், அதே காலத்தில் மக்கள் தன்னெழுச்சியாக போராடினாலும், ஏனைய பல்வேறு கட்சிகள் போராட்டம் நடத்தினாலும் ஊடகங்கள் மொத்தமும் புரமோட் செய்தது நமது திராவிட தலிவா பதாகையுடன் குடும்ப கும்பல் சகிதமாக போராடியதை தான், விளைவு என்னவானது.....???
திராவிட குடும்பத்தினர் போகிற வருகிற இடங்களில் எல்லாம் இளம் விதவைகளை கண்டு பரிதாப பட்டார்கள், ஆட்சிக்கு வந்ததும் டாஸ்மாக்கை மூடுவோம் என்றார்கள், திராவிடம் 2.0 வின் தீவிரமான டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டத்தின் விளைவாக திராவிட தாய் கழகம் அதிகாரத்தை கைபற்றினார்கள், இப்போது இளம் விதவைகளும் இல்லை, டாஸ்மாக்கையும் மூடவில்லை, திராவிடத்திற்கு அஞ்சு வருசம் லாபம், ஆயிர வருசம் ஆசை.....!!!
நன்றாக புரிந்துகொள்ளுங்கள் தியாகிகளே! புரச்சியாளர்களே! நாம் பனையை வைத்து பிழைப்பு நடத்தும் எந்த சமூகத்திற்கும் மக்களுக்கும் எதிராக இதை சொல்லவில்லை, பனையிலிருந்து பல்வேறு விளை பொருட்கள் வருகிறது, #பதநீர், #கருப்பட்டி, #கல்கண்டு, #கிழங்கு என்று எவ்வளவோ வாய்ப்புகள் இருக்கிறது, அதற்கான சந்தையும் இருக்கிறது, அதை வைத்து நன்றாகவே வாழ முடியும் என்கிற சூழலில் திராவிட அடியாட்களின் சூழ்ச்சியில் சிக்கி கள் உணவு, கள் மருந்து என்று உருட்டி ஏற்கனவே போதையில் திண்டாடும் தமிழர்களை மேலும் போதைக்கு அடிமையாக்க வேண்டாம் என்றுதான் சொல்கிறோம்.....!!?
டாஸ்மாக் போதையை எதிர்க்கிறோம், கள் போதையை உணவு மருந்து என்று உருட்டுகிறோம், முரணாக இருக்கிறதே, அப்படியானால் நாம் யாருக்காக வேலை பார்க்கிறோம் என்றாவது சிந்தித்திருக்கலாம், ஆனால் வாய்ப்பில்லை. அப்படியெல்லாம் சிந்தித்தால் தியாகம் செய்ய முடியுமா, எங்களை தியாகம் செய்ய விடுங்கய்யா என்று நமது தியாகிகள் கோபத்தில் கொந்தலிப்பது கேட்கிறது, அதற்காக சொல்ல வந்ததை பாதியில் விட முடியுமா, மேலே வாசியுங்கள்.....!
டாஸ்மாக் மது, கள்ள சாராயம், கஞ்சா, திராவிட அறிமுகம் மெத் என்று ஏற்கனவே இந்த தலைமுறை சீரழிந்து கிடக்கிறது, இந்த நிலையில் கள் உணவு என்கிற வாதமெல்லாம் கஞ்சா அருமருந்து என்றும் திராவிட மெத் ஊட்டச்சத்து என்றும் உருட்டுவதற்கு ஒப்பாகிவிடும், அந்த தவற்றை இந்த தமிழ்கூறும் நல்லுலகம் தவிர்க்க வேண்டும் என்றுதான் அறிவுறுத்துகிறோம்......!!?!
இல்லை, அப்படி தான் செய்வோம் என்றால் செய்யுங்கள், மீண்டும் ஒருமுறை தேர்தலுக்கு முந்தய தேவையாக உங்கள் போராட்டம் சிலரால் ஊட்டி வளர்க்கப்படும், தேர்தலுக்கு முன்பு இறுதியாக ஒருநாள் திராவிட குடும்பம் "கள் எமது உணவு" என்கிற பதாகையோடு வருவார்கள், எளிய மக்களின் தாலியை காக்கும் வேலி என்று உருட்டுவார்கள், வாக்குறுதியில் "ஆட்சிக்கு வந்தால் #கள் அனுமதிக்க படும்" என்பார்கள், பிறகு என்ன நடக்கும்? ஏற்கனவே கள் வெறியில் இருக்கும் உங்கள் பேராதரவோடு மீண்டும் ஒருமுறை திராவிட குடும்பம் பதவி ஏற்கும், உங்களை தூண்டிவிட்ட திராவிடம் 2.0 அடுத்த அஜண்டாவை பெற்றுக்கொண்டு தியாகிகளை தேடி கிளம்பிவிடும், உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம்....???
வரலாற்றில் வீழ்த்த முடியாத பல்வேறு தலைவர்களையும், சமூகங்களையும் வீழ்த்திய பெருமை இந்த போதைக்கு உண்டு என்பதை மறந்துவிடாதிர்கள் மக்களே, "#ஒபியம்_வார்" என்கிற தொழில்முறை யுத்தத்தையே கண்ட உலகம் இது, அதனால் போதை பொருளுக்கெல்லாம் முட்டுக் கொடுத்து அடிமையாகி இனத்தையும் அடிமையாக்கி விடாதீர்கள், நீங்கள் தியாகி பட்டம் கட்ட ஒரு இனமே போதைக்கு அடிமையாக வேண்டும் என்பதெல்லாம் கள் வெறியை விட மோசமான போதை என்பதை புரிந்துகொள்ளுங்கள் தியாகிகளே.....!?!!
இல்லை, தியாகம் தான் செய்வோம் என்ற அடம்பிடித்தால் அதற்கு பல்வேறு வாய்ப்புகள் இருக்கிறது, பதிவு செய்துவிட்டு காத்திருங்கள், காலம் வரும்போது அழைத்து விடுகிறோம்.....!?!!
அதான, வரவன் போறவனெல்லாம் தியாகிகளை யூஸ் பன்னுறாங்க, பங்காளி நாங்க #யூஸ் பன்னினா குறைந்தா போயிருவிங்க.....😀😍
Comments
Post a Comment