பாண்டியர்களின் வரலாற்றில்

பாண்டியர்களின் வரலாற்றில் 

 [23/06, 08:48] 

 இங்குள்ள வெள்ளாளர்களும் தங்களைக் கங்கை குலத்தவர் என்று கூறிக் கொள்வதன் காரணம் இதுவே. அதாவது, வடுக ஆட்சியின் போது கன்னட நாட்டிலிருந்து வந்தவர்கள் என்பதை மறைக்க, ஏடுகளில் கங்கை குலத்தவர் என்று எழுதி வைத்துக் கொண்டு ஊரை ஏய்க்கின்றனர்.


 இதில் நகைமுரண் என்னவென்றால் நாடற்ற முக்குலத்தோரான அலைகுடிகள் தங்களுக்கென ஆதாரம் எதுவும் இல்லாத்தால் தாங்கள் அரசமரபினர் எனக் காட்டிக் கொள்வதற்காக மூவேந்தர்களும் தங்களின் முன்னோர்கள் தான் என வாய்கூசாமல் பொய் கூறி வருவதுதான்.

[23/06, 09:30]

 குப்தர்கள் காலம் வரையில் கங்கை ஒரு புனித நதியாக இருந்ததில்லை. குப்தர்கள் காலத்தில் தான் பார்ப்பனர்களின் மேலாதிக்கம் இந்தியவரலாற்றில் நிலைகொண்டது.


 குப்த ஆட்சியின் ஆரம்ப நாட்களில் தான் தென்இந்தியாவில் கன்னடப் பகுதிகளில் அரசாட்சியின் கீழ் மாபாரதம், காளிதாசன், இராமாயணம், வேதங்களின் தொகுப்பு, உபநிடதங்கள், சங்கரனின் தோற்றம்( சிறிது பிற்காலம்) , ஆரண்யங்கள், அர்த்த சாஸ்திரம் போன்ற நூல்கள் படைக்கப்பட்டன .

 இவை பார்ப்பன மேலாதிக்கத்தை நிலை நாட்ட வேண்டி பிற மொழி( குறிப்பாகத் தமிழ்) இலக்கியங்களில் இருந்து களவாடப்பட்டு இயற்றப்பட்டது.

 இந்தக் காலக் கட்டத்தில்தான் “ கங்கை” புனித நதியானது.

 பார்ப்பன மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்ட கன்னட அரசுகள் தங்களைப் புனிதர்களாகக் காட்டிக் கொள்ள கங்கா குலத்தவர் அதாவது புனிதமானவர்கள்/ உயர்வானவர்கள் எனக் காட்டிக் கொள்ள வேண்டி அப்படி ஒரு முன்னுதாரணத்தை வரலாற்றில் ஏற்படுத்தினர்.

பரசு ராமன் சத்திரிய வம்சத்தையே அழித்தவிட்ட காரணத்தினால் , சூத்திரர்கள் தான் எஞ்சி இருந்தனர்.

 கிபி நான்காம் நூற்றாண்டில் பல இடைநிலை சாதிகள் அரசு உரிமை கோரி புதிதாக எழுந்தனர். இவர்களுடன் பார்பனியமும் வீறு கொண்டு எழுந்தது.

 சத்திரியன் தான் ஆள வேண்டும் என்ற புராணப் படி / வர்ணாசிரம தர்மப் படி இந்த சூத்திர சாதியினர் தங்களை கங்கை குலம், தமிழ்நாட்டில் திங்கள் குலம் , ஆதித்த குலம என்றெல்லாம் பார்ப்பனமேலாதிக்கத்தினால் அழைக்கத்தலைப்பட்டனர். 

அப்படி வந்த வரலாற்றுப் பின்னணியைக் கொண்டு மேற்கண்ட கன்னட அரசுகளின் தோற்றத்தை உள்வாங்கிக் கொள்ள வேண்டுகிறேன்.


 தமிழர்களுக்கு என்று தன் வரலாறு உண்டு. 

அது மள்ளர்களின் வரலாறு.

 நிலந்தருதிருவிற் பாண்டியன் காலத்திலிருந்த தொன்மையான அரசமரபினர. மள்ளர்கள். இடையில் அரை அநாகரிக/ அரைப்பழங்குடினரோடு மள்ளர்களை கொண்டு போய் இணைத்து ஏன் நம்மை நாமே தாழ்த்திக் கொள்ள வேண்டும்.

 மள்ளர்களைக்கென்று செம்மாந்த உயர்ந்த வரலாறு உண்டு.


 மற்றவர்களை நம்மோடு இணைக்கத் தேவைஇல்லை. 


இது ஒரே நாடு, ஒரேமொழி ஒரே பண்பு பேசுபவர்களின் சதி என்பதை உணருங்கள். 


இந்த கருதுகோளின் பின்னால் ஆர்எஸ்எஸ் இருப்பதை மறந்து விட வேண்டாம்.


சில கருத்துக்களைத் தெளிவு படுத்த வேண்டி இந்தப் பதில். 


திராவிட என்ற சொல் கால்டு வெல்லுக்குப் பிறகுதான் பிரபலமான சொல்லாக ஆனது. அதற்கு முன்பு குமரிலப் பட்டரின் “ தந்திரவார்த்திகா”, மற்றும் மனுவின் நூலில் இந்தச் சொல் பயன்படுத்தப்பட்டது.


 பாண்டியர்களைத் தோற்கடித்தது கன்னட+ பார்ப்பனியக் கூட்டணி.


 கன்னட/ தெலுங்கர்களுக்கு சமயகுருவாகவும், அரசியல் வழிகாட்டியாகவும் இருந்தது பார்ப்பனியமே. கோவில்களிருந்த குடும்பு முறையை ஒழித்துக் கட்டியது மட்டுமில்லாது, தமிழை கோவிலிலிருந்து அகற்றி சமஸ்கிருத மொழியை திணித்தது கன்னட/ தெலுங்கு பார்ப்பனிய கூட்டணி.


 தமிழை அழித்து மணிப்பிரவாள நடையைப் புகுத்தி தமிழ் மொழியை அழித்தது இந்தக் கும்பல்கள் தான்.


 பார்ப்பனியம் களப்பிரர் காலத்தில் தமிழகத்தில் முதல் தனக்கான உரிமைகளை தமிழகத்தில் நிலைநாட்டியது.


 பௌத்த/ ஜைனத்தில் பார்ப்பனிய தலைமையே கோலோச்சியது.


 பல்லவர் காலத்தில் பார்ப்பனர்கள் உறுதியாக நிலைகொண்டனர்.


 ஞானசம்பந்தன் கொலைதாண்டவமாடினான். சங்கரன் மடங்களை நிறுவினான்.


 இந்த பார்ப்பனர்களின் மேலாதிக்கம் இராசராசன் காலத்தில்தான் கட்டுப்படுத்தப்பட்டது.


 அதனால் “சோழன் பிரமகத்தி” என்ற சொல்லாடல் புகுத்தப் பட்டது. 


மீண்டும் பார்ப்பனியம் மேலாதிக்கம் பெற்றது கன்னட/ தெலுங்கு ஆட்சியில் தான். 


எனவே மள்ளர்களின் பகை ஆற்றல்களாக இருவரையும் (திராவிடம்+ பார்ப்பனியம்) சேர்த்தேதான் வரையறை செய்யவேண்டும்.


 இல்லாவிடில் திசை தவறிச் சென்றுவிடுவோம்.

Comments

Popular posts from this blog

குடும்பனின் வரலாற்று புரிதல்

திருநெல்வேலி இரயில் நிலைய நிலைய மேம்பாட்டு பணிகள்

திருநெல்வேலி யின் இலக்கியத்தில்