குடும்பனின் வரலாற்றில்

 வரலாற்றில் இன்று - 

"உலகத் தமிழ்க் கழகம்" 

என்னும் அமைப்பு தேவநேயப் பாவாணர் தலைமையில்



 திருச்சிராப்பள்ளியில் 1968 ஜூன் 11 இல் அமைக்கப்பட்டது.

 பெருஞ்சித்திரனார் பொதுச் செயலாளராக விளங்கினார்.

 தமிழ்நாட்டின் அனைத்து ஊர்களிலும் பிற மாநிலங்களிலும் கிளைகள் பின்னர் தொடங்கப்பட்டன.

உலகத் தமிழ்க் கழகத்தின் கொள்கையும் செயற்பாடும்:-

பிற மொழி வல்லாண்மையிலிருந்து தமிழை மீட்டெடுப்பது கழகத்தின் முகாமையான கொள்கை ஆகும்.

உலகம் முழுக்கத் தமிழைப் பரப்புதல் வேண்டும்.

உறுப்பினர்கள் அனைவரும் தமிழ்ப் பெயரைச் சூட்டிக் கொள்ளல் வேண்டும்.

குழந்தைகளுக்கும் தமிழ்ப் பெயரைச் சூட்டவேண்டும்.

தமிழர்கள் தம் இல்லங்களுக்கும் நிறுவனங்களுக்கும் தமிழ்ப் பெயர் வைக்க வேண்டும்.

இயன்றவரை அயல் சொற்களைக் கலவாது எழுதவும் பேசவும் வேண்டும்.

இல்லத்தில் நடைபெறும் எல்லாச் சடங்குகளையும் கோவில்களில் நடைபெறும் வழிபாடுகளையும் தமிழில் நிகழ்த்த வேண்டும்.

கல்வி அனைத்து நிலைகளிலும் தமிழில் அமைதல் வேண்டும்.

பாவாணர் மறைவுக்குப் பின்னர் செயல்படாமல் இருந்த உலகத்தமிழ்க்கழகம் அரணமுறுவல், அன்புவாணன், நெடுஞ்சேரலாதன் போன்றோர் முயற்சியால் மீண்டும் செயல்பட்டு வருகிறது. முதன்மொழி இதழும் திங்கள்தோறும் வெளிவந்து கொண்டுள்ளது.

TP Jayaraman

Comments

Popular posts from this blog

குடும்பனின் வரலாற்று புரிதல்

திருநெல்வேலி இரயில் நிலைய நிலைய மேம்பாட்டு பணிகள்

திருநெல்வேலி யின் இலக்கியத்தில்