குடும்பனின் வாழ்வியலில்

 மள்ளர்களின் நம்பிக்கைகளும் பழக்கவழக்கங்களும் :- 



விதை விதைத்தல் & நாற்று நடுதல்


நல்ல சகுனம் பார்த்து விதை விதைத்தல்::


நல்ல நாளில் பொன் ஏர் பூட்டி உழவு செய்த மள்ளர்கள், விதை விதைக்கவும் நல்ல நாள் பார்த்தே விதைக்கின்றனர்..


இதல்லாது நல்ல சகுனம் பார்த்து விதை விதைக்கும் பழக்கம் இருந்ததையும் பள்ளு நூலில் காணமுடிகிறது.


" ஆக்கமாய் குடும்பன் விதையுங் கொண்டு வயல்

       அணுகச் செல்லும் போதில்

ஆவின் பாற்குடமும் நிறைநீர் குடமுங் கொண்டு

      அர்வையர் எதிர் தோன்றக்

காக்கை நாரை வலஞ் செய்யவே உபய

       கருடன் வட்ட மிடவே

கண்ட குடும்பன் நாளேரிட்டு நாள்வித்துங்

        களிப்புடன் பிடித்து வந்தான்"

           ( திருமலைமுரு.பள்ளு-136)


பசும்பால், நிறைகுடத்துடன் பெண்கள் எதிரே வருதலும், காக்கை, நாரைகள் வலமாகச் செல்வதும், கருடன் வட்டமிடுவதும் விதை விதைத்தலுக்கான நல்ல சகுனமாக மள்ளர்கள் கொண்டனர் என்பதைத் திருமலை முருகன் பள்ளு கூறுகின்றது..


குலவையிட்டு நாற்றுநடுதல்::



பள்ளியர்கள் நாற்றுநடவு செய்கையில் விநாயகனை வழிபட்டு, பின்னர் நாற்று முடிகளை தமது தலைக்குமேலே தூக்கி பிடித்து ( நாற்றை வழிபட்டு) குலவையொலி எழுப்பி வழிபடுதல் வழக்கம், இதனை


" பள்ளிய ரெல்லோரும் நாற்றெடுத்துப்

         பாங்காய் முடித்துக்குப் பஞ்சேர்த்துத்

துள்ளுமயிற்பரி யானை வாழ்த்தி

         தோத்திரம் செய்து பணிந்தாரே"


    (வையாபுரிப்பள்ளு-172)


என்றும்


" நாற்றை யெடுத்துங்கள் நெற்றி வைத்து

       நாலுதிசைகளை நோக்கி வாழ்த்திப்

….....................

      வளமாய் நடுங்கடி பள்ளீரே"


(வையாபுரிப்பள்ளு-173)


என்றும்


"    குடி தழைத்திடு குரவை இட்டு எழுகடல் முழங்கிடும் கடைசியர்

     குழையு நாற்றைப் பழைய சேற்றில் அளவில்லாம் நடச்செய்தே"


    (வடகரை பட்பிரபந்தம் -131)


என்று பள்ளு நூல்கள் பதிவு செய்திருப்பதைக் காணலாம். 

நடவு செய்கையில் குரவையொலி எழுப்புதல், நாற்றுமுடிகளை வழிபடுதல், இறைவனை வழிபடுதல் இவையெல்லாம் வேளாண் பயிரை நன்கு வளரச் செய்ய உதவுமென்று மள்ளர்கள் நம்புவதையே காட்டுகின்றன...

Comments

Popular posts from this blog

குடும்பனின் வரலாற்று புரிதல்

திருநெல்வேலி இரயில் நிலைய நிலைய மேம்பாட்டு பணிகள்

திருநெல்வேலி யின் இலக்கியத்தில்