குடும்பனின் பார்வையில்

 ✒️ ஊடுருவல்காரர்கள் தான் பேராபத்தானவர்கள்.


தேவேந்திர குல வேளாளர் என்ற அடையாளத்தைப் பெற உறுதுணையாய் இருந்தது பாசக தான்..


பாராளுமன்ற விவாதத்தைக் கவனித்தவர்களுக்குத் தெரியும்..


வட இந்திய உறுப்பினர்கள் எல்லாம் ஆதரவு தந்து பேசினர்..


தமிழக அரசியல்வாதிகளில் ஒரு சிலர் தவிர மற்ற அனைவரும்,

 ஏன் 

நம் சமூக எம்பி கள் கூட எதிர்ப்புத்தான் தெரிவித்தனர்..


இதையெல்லாம் நம்மில் பலர் மறந்து விட்டு எதிரிகளின் மகுடிகளுக்குத் தலையாட்டுவதுதான் வேதனை..


பாசக மட்டுமல்ல எந்த அரசியல் கட்சியும் தூய்மையானதல்ல..


ஆனால் நமக்கான ஆதாயத்துக்கு யாரைத் தேடுவது என்பது தான் முக்கியம்..


நீங்கள் எந்த மதத்தையும் எந்தக் கருத்து அரசியலையும் சார்ந்து இருங்கள் ஆனால் பட்டியல் வெளியேற்றம் அடைய பாசக ஆதரவு தேவை என்பதை மறந்துவிடாதீர்..


வலைதளங்களில் எதிர்ப்புத் தெரிவிக்கிற பலர் நமது கோரிக்கைக்கு எதிரானவர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.


ஊடுருவல்காரர்கள் தான் பேராபத்துக் காரர்கள் என்பது நாமறிந்து விடயம் தான்..


வலைக்கு முன்னே கல்லெறிந்து விட்டு மீன்படவில்லை என்று பேசுவதும் தந்திரம் தான்.


வரும் சந்ததி உளவியல் ரீதியாக தலை நிமிர்ந்து வாழப் பட்டியல் வெளியேற்றம் அவசியம் என்பது தான் இளைய தலைமுறையினரின் விருப்பம்..


அதனை நிறைவேற்ற யாரோ சொல்லித் தரும் எதிர்ப்பு  அரசியலைக் கைவிடுவோம்..


©️✒️ யாழி .

12.06.2025.

Comments

Popular posts from this blog

குடும்பனின் வரலாற்று புரிதல்

திருநெல்வேலி இரயில் நிலைய நிலைய மேம்பாட்டு பணிகள்

திருநெல்வேலி யின் இலக்கியத்தில்