திராவிட சதிரில்
நாம் தற்போது சீமான்"கள்" கள்ளுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில்,
கீழடி விசயத்தை வைத்து திராவிடக் கூட்டம் அரசியல் செய்யும் வேலையை துவங்கியுள்ளதையும் கருத்தில் கொள்ளவேண்டியுள்ளது
இந்த திராவிட கும்பல்களுக்கு அப்படி என்ன கீழடி மீதும், தமிழர் வரலாறு மீதும் திடீர் பாசம் வந்துவிட்டதோ தெரியவில்லை, அவர்கள் எது பேசினாலும் அரசியல் ஆதாயத்திற்காக அன்றி வேறென்னவாக இருந்துவிடப்போகிறது?
கீழடி ஆய்வு முடிவை மத்திய அரசு அங்கீகரிக்கவில்லை, தமிழர்களை ஏமாற்றப் பார்க்கிறது என்று பேசுபவர்கள் அனைவருமே திராவிடக் குஞ்சுகளாகவே இருக்கிறார்கள்
சரி விசயத்திற்கு வருவோம், நமக்கும் தமிழர் நாகரீகம் அங்கீகரிக்கப் படவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை
ஆனால் கீழடி நாகரீகத்திற்கு சொந்தக்காரர்கள் யார்? யார் அந்த பண்டைய காலத் தமிழர்கள் என்பதையும் சேர்த்து ஏன் இந்த திராவிடக் கூட்டம் பேசுவதே இல்லை?
ஏனெனில் அகழாய்வு நடக்கும் பெரும்பாலான இடங்கள் நதிக்கரை ஓரங்களில் வாழும் தேவேந்திரகுல வேளாளர்களின் ஊர்களை ஒட்டிய இடங்களிலேயே பெரும்பான்மையாக நடக்கிறது
தமிழர் நாகரீகம் என்று பொத்தாம் பொதுவாக பேசாமல் விட்டுவிட்டால் நாளை இந்த தேவேந்திரகுல வேளாளர்கள் இதற்கு உரிமை கொண்டாடி வந்துவிடக் கூடாது என்கிற ஒற்றை அஜெண்டாவாகக் கூட இருக்கலாம் அல்லவா?
கீழடி எந்த மக்கள் வசிக்கும் ஊர், யாருடைய நிலத்தில் அகழாய்வு நடக்கிறது என்பதைப் பற்றி இந்த திடீர் தமிழ் ஆர்வலர்கள் பேச மறுப்பதேன்?
எந்த "வாழை"யை வைத்து தேவேந்திரகுல வேளாளர்களை "கோழை"களாகக் காட்ட திராவிடக் கூட்டம் முற்பட்டதோ அதே ஆதிச்சநல்லூர்- புளியங்குளம் மண்ணில் தானே அகழாய்வின் தொடக்கப்புள்ளியே ஆரம்பித்தது
இன்றளவும் அகழாய்வு நடக்கும் புளியங்குளம் பரம்பில் தேவேந்திரகுல வேளாளர்கள் மட்டும்தானே அடர்த்தியாக வாழ்ந்து வருகிறார்கள்
ஆதிநித்த குடும்பனின் வரலாறு தொட்டே ஆதிச்சநல்லூர்- புளியங்குளம் அகழாய்வு நடைபெறுகிறது என்பதைக் கூட ஏன் இந்த திராவிடக் கூட்டம் பேச மறுக்கிறது?
சாட்சாத் அகழாய்வு நடைபெறும் அதே பரம்பில்தான் புளியங்குளம் மக்கள் வழிபடும் பாண்டியராஜா கோவிலானது தாமிரபரணி நதிக்கரையை ஒட்டியே அமைந்துள்ளது என்பது தனிச்சிறப்பு
இந்த ஒரு அடையாளமே தேவேந்திரகுல வேளாளர்கள்தான் பாண்டியர்கள் என்பதற்கான முதன்மைச் சான்றாகவும் விளங்குகிறது
புளியங்குளம் அகழாய்வை பேசினால் தேவேந்திரகுல வேளாளர்கள்தான் பாண்டியர்கள் என்றும் பேசவேண்டும் என்பதாலேயே இந்த திராவிடக் கூட்டம் மவுனம் காக்கிறது
சில மாதங்களுக்கு முன்பு முதல்வர் ஸ்டாலின் நாட்டுமக்களுக்கு ஒரு அரிதான செய்தியை அறிவிக்கப் போகிறேன் என்று கூறிவிட்டு
இரும்பை கண்டுபிடித்ததே தமிழர்கள்தான், சிவகளை அகழாய்வில் பழங்கால இரும்பு கண்டுபிடிக்கப் பட்டுள்ளது என்றும் பேசினார்
சாட்சாத் இதே சிவகளையிலும் பரம்பு பகுதியில்தான் அகழாய்வு நடைபெறுகிறது, இங்கும் பெரும்பான்மையாக வாழ்வது தேவேந்திர குல வேளாளர்களே
சிவகளை அகழாய்வு தாமிரபரணி நதிநீர் பாசனத்தை உள்ளடக்கிய குளக்கரையின் ஒரு பகுதியில்தான் நடைபெறுகிறது
மறு கரையில் தேவேந்திர குல வேளாளர்கள் வசிக்கும் பராக்கிரம பாண்டி என்கிற ஊர் அமைந்துள்ளது, இதுவும் பாண்டியர்கள் நாமே என்பதற்கான மற்றுமொரு சான்று
தற்போது திராவிடக்கூட்டம் ஆதிச்சநல்லூர், சிவகளை, கீழடி போன்ற அகழாய்வு மூலம் நதிக்கரை நாகரீகத்திற்கு சொந்தக்காரர்களே இந்த தேவேந்திர குல வேளாளர்களாகிய பாண்டியர்கள்தான் என்பதை பேச மறுத்துவிட்டு, மறைத்துவிட்டு
ஏதோ கீழடி அகழாய்வை மத்திய அரசு தடுக்கிறது என்று ஓட்டு அரசியலை செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்
தேவேந்திர குல வேளாளர்களாகிய நாம் விழிப்புடனும், ஒற்றுமையுடனும் இருந்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினால் மட்டுமே
கீழடி, ஆதிச்சநல்லூர், சிவகளை உள்ளிட்ட தொன்மையான நாகரீகத்தை நம் வரலாறுக்கானதாக பறைசாற்ற முடியும்
எனவே ஒன்றுபட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி,
நமக்கான ஆட்சியை நாமே படைப்போம்,
வரலாற்றை மீட்போம்
🇧🇾🇧🇾🇧🇾🙏
Comments
Post a Comment