குடும்பனின் பார்வையில்

 குடும்பனின் பார்வையில் 

29.09.2023 பிற்பகல் 


✒️மாபெரும் அடையாளப்படுத்தலுக்கு என்ன கைம்மாறு செய்தோம்..????


தேவேந்திர குல வேளாளர்  பெயராணை கேட்டுப் போராடியபோது சில சமூகங்களிலிருந்தும், குறிப்பிட்ட சில நபர்களிடமிருந்தும்  எதிர்ப்புகள் வந்தன.


ஆனாலும் பாஜக அரசு முறைப்படியான பண்பாட்டு ஆய்வுகளை நடத்தி தேவேந்திரகுல வேளாளர் சமூகம் தமிழ்க்குடிகளில் மூத்த குடிகள் என்றும், அதற்கென தனித்த வாழ்வியல் முறைகள் உள்ளன என்றும் அறிந்த பிறகு மானுடவியல் ஆய்வறிக்கையின் அடிப்படையில்

 "தேவேந்திரகுல வேளாளர் " 

என்று பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றி அரசாணை பிறப்பித்தது.


இந்திய பாராளுமன்ற நடைமுறை வரலாற்றில் இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்கச் செயல்.


பச்சோந்தித்தனமான அரசியல் மாற்றங்களினூடே இப்படியான மானுடவியல் ஆய்வை மேற்கொண்டு பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கப்பட்டு சொந்த மாநில உறுப்பினர்களின் ஒப்புதல்கள் இல்லாமலே ஒரு புரட்சிகர மாற்றத்தைத் தந்தது பாஜக அரசு என்பதில் பெருமிதம் கொள்கிறோம்.


இந்த மகத்தான செயலைப் பாராட்ட இன்னமும் நம்மில் பலருக்குத் தயக்கம் இருப்பது வேடிக்கைதான்..


இப்படியான ஒரு பெருமுயற்சியைப் பாராட்டாத சமூகம் வேறு என்ன மாதிரியான ஒத்தாசைக்கு நன்றி பாராட்டப் போகிறது என்பதே பிற சமூகங்கள் எழுப்பும் பெருங்கோபக் கேள்வி..


உலகின் ஜனநாயக நாடுகளில் ஆகப்பெரிய நாடு இந்தியாதான்..


இந்தியாவின் பிரதம அமைச்சரே ஒரு சமூகத்தின் பெயரை பாராளுமன்றத்தில் உச்சரிக்கிற பாக்கியம் வேறு எந்தச் சமூகத்திற்கும் கிடைக்கவில்லை.


அதற்காக நாம் செய்த கைம்மாறு என்ன?


"பூத்து மடிகிற மலர்களை விட,

பூத்துச்  சாகிற ஈசல்களுக்கு இருக்கிற நம்பிக்கை மேலானது."


ஒரு சமூகம் பிழைப்புக்காக காலம் நெடுகக் கையேந்தக் கற்றுத்தருவதற்கு எதற்கு இயக்கங்களும், சங்கங்களும் அரசியல் கட்சிகளும்.?????


சாட்டையால் தன்னுடலை அடித்துப்பிழைப்பு நடத்துபவரும், சவரம் செய்து பிழைப்பவரும் இங்கே வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்..


இவர்கள் வீடுகளில் NIA- தேசிய புலனாய்வு முகமையின் சோதனையோ, ED - அமலாக்க துறையின் சோதனையோ நடத்தப்படவில்லை..


அதேபோல தேவேந்திரர் வீடுகளிலோ, பிராமணர் வீடுகளிலோ சோதனைகள் மேற்கொள்ளப்படவில்லை.


அப்படியானால் இங்கே தாழ்ந்த சமூகங்கள் யார்?


அரசியலை வைத்துக்கொண்டு பொதுச்சொத்துக்களைக் கொள்ளையடிக்கிறவர்களிடம் யாசகம் கேட்டுப் பெறுகிற இடத்தில் நிற்பது நியாயமா என்ற கேள்வியைத் தவிர்க்க இயலவில்லை..


தேவேந்திரர்கள் அடையாளத்தோடும் பகுமானத்தோடும் வாழப் பிரியப்படுகிறோம்..


மனிதசமூகம் மாற்றங்களைத்தான் விரும்புகிறது.


கெடுவாய்ப்பாகத் தமிழ்நாட்டில்தான் கோவணத்தை உருவிக்கொண்டு கொசுவலைக்கு வரிசையில் நிற்கச் சொல்லும் அவலம் பரவலாக்கப்படுகிறது.


தேவேந்திரகுல வேளாளர் அரசாணைக்கு தமிழகத்திலிருந்த ஒரு எம்பி கூட ஆதரவு தராமல்தான் நிறைவேறியது என்பதை நினைவில்கொள்வோம்..


2024 தேர்தல் களம் தமிழகத்தில் தேவேந்திரர்களை அரசியற்படுத்தும் என நம்புகிறோம்..


இதுவரை நாங்கள் நம்பியவர்கள் யாரும் எங்களுக்காகக் குரல் கொடுக்கவில்லை.


இனி ஒரு மாற்றத்திற்காக தேர்தலில் மாற்றி வாக்களிப்போம்.


"கடல் வற்றும் எனக் காத்திருந்த கொக்கு

 குடல் வற்றிச் செத்த கதையாகப் போனாலும் போகட்டும்..."


பட்டியல் வெளியேற்றம் தரும் என்ற நம்பிக்கையில் பாஜக கூட்டணியை

ஆதரிப்போம்.


சமூக நலன்கருதி இம்முடிவை ஏற்கத்தான் வேண்டும்.


©️✒️மடைக்குடும்பர்.

29.09.2023. பிற்பகல் 

Comments

Popular posts from this blog

குடும்பனின் வரலாற்று புரிதல்

திருநெல்வேலி இரயில் நிலைய நிலைய மேம்பாட்டு பணிகள்

திருநெல்வேலி யின் இலக்கியத்தில்