28.9.2023- வியாழக்கிழமை
குடும்பனின் பார்வையில்
28.09.2023
ஒரு பண்பாட்டுச் சமூகம் ஒடுக்கப்பட்டதை அறிந்துகொள்ளாமல் அதிலிருந்து விடுபட முயற்சிக்காமல் தமது சுய அடையாளத்தை இழந்து வாழ்வதை சிலர் ஆதரிப்பது துயரமானது..
"பட்டியல் சமூகம்" என்ற பொது அடையாளத்திலிருந்து விடுதலை பெற்று "தேவேந்திரகுல வேளாளர்" என்ற "தனித்த அடையாளத்தைத் தந்தது பாஜக அரசுதான்."
நீங்கள் இந்துவாகவோ கிறித்தவராகவோ வாழ்ந்துவிட்டுப் போங்கள்.
எந்த மதமும் மனிதனை அடிமைத்தனத்தில் வைத்திருக்க விரும்புவதில்லை..
விடுதலையை விரும்பாதவன் எந்த மதத்தில் இருந்தும் பயனில்லை..
மதங்கள் மனிதனைப் பக்குவப்படுத்தும் வழிமுறைகள் கொண்டவையே தவிர சலுகைகளால் சங்கடப்படுத்தும் நிறுவனம் அல்ல.
எல்லா அரசியல் கட்சிகளும், கிறிஸ்தவமும் தேவேந்திரர்களைத் தலித் என்ற மராட்டியச் சொல்லால் அடையாளப்படுத்தும்போது பாஜக மட்டும் தான் "தேவேந்திரகுல வேளாளர்" என்று அடையாளப்படுத்தியது.
பாராளுமன்றத்தில் தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை நிறைவேற்றும் போது காங்கிரஸ் கட்சி உட்பட தமிழக எம்பிக்கள் அனைவரும் வெளிநடப்புச் செய்ததை நாங்கள் ஒரு நாளும் மறவோம்..
"பொதுவெளியில் காயப்படுத்திவிட்டு தனிமையில் வந்து களிம்பு தடவும் கயவாளித்தன அரசியல் மோசடிகளை இனியும் தேவேந்திரர்கள் நம்பமாட்டோம்."
திராவிட அரசியல்,
தலித் அரசியல்,
கம்யூனிச அரசியல்,
காங்கிரஸ் அரசியல்
என எல்லாமும் சூழ்ச்சிகளால் கட்டமைக்கப்பட்டவை.
இலங்கைத் தமிழர்களை காப்பாற்ற மறந்த கூட்டணி தர்மங்களை எங்கே போய் விவாதிப்பது.
நிலவில் சந்திராயன் சாதனை,
G-20 மாநாடு,
பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு,
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு,
உலகளவில் பேசப்படும் இந்தியாவின் வளர்ச்சி,
கனடா நாட்டோடு முரண்பாடு
என பாஜக எடுத்துவரும் துணிச்சலான நடவடிக்கைகள் பாராட்டுக்குரியன..
'தடையற்ற பத்தாண்டு முழுமையான ஆட்சியை பாஜக தவிர வேறெந்த அரசாலும் வழங்க இயலுமா என்பது கேள்விக்குறியே..?????'
எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகள் ஒரு போதும் வெற்றிபெற்று ஆட்சியமைக்கப்போவதில்லை.
பட்டியல் வெளியேற்றத்தை விரும்பும் ஒவ்வொரு தேவேந்திரனும் பாஜக அரசை ஆதரிப்பதுதான் தார்மீகக்கடமை..
திமுக, அதிமுக கட்சிகள் எத்தனை பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றாலும் நமது பட்டியல் வெளியேற்றத்திற்கு ஆதரவாகச் செயல்படப்போவது யார்⁉️
DKV அரசு ஊழியர் தளங்களில் இனியும் தலித் சாயம் கொண்டவர்கள் தங்கள் போக்குகளை மாற்றிக்கொள்ளுங்கள்.
பட்டியல் வெளியேற்றத்தை எதிர்ப்பவர்கள் தனித்து நின்று களமாடுங்கள்.
அது உங்கள் விருப்பம்.
ஆனால் எமக்காக குரல் கொடுத்தமைக்காக நான் அவருக்குத் துணை நிற்பேன்.
வேறொன்றும் அறியோம் பராபரமே..
©️✒️மடைக் குடும்பர்
28.09.2023
Comments
Post a Comment