குடும்பனின் பார்வையில்
சங்க காலத்தில் தமிழர்கள் கார்த்திகை விளக்கு ஏற்றி வழிபட்டதை
அகநானூறு 141 வது பாடலில்
மதுரைப் புலவர் நக்கீரர் அழகாக வர்ணிக்கிறார்.
இல்லத்தை மலர்களால் அலங்கரித்து பல கொண்டைகளையுடைய அடுப்பில் பால் பானையை ஏற்றிப் புதிதாகத் திருமணமான மணமகள் பாலை ஊற்றுகிறாள்.
அதனுடன் தன் ஆயமொடு வயலில் விளைந்த நெற்கதிர்களின் குலைகளை முறித்து அதன் பச்சரிசியை உரலில் இட்டு அவலாக உலக்கை கொண்டு குற்றும் ஓசை கேட்டு வாழை மரத்தில் இருந்த குருகு அஞ்சி ஓடியது.
உலகில் முதன்மையான தொழிலான உழவுத் தொழில் முடிந்து கலப்பைகள் உறங்குகின்றன.
மழைக் காலமும் முடிந்து விட்டது மதியானது தனது நிலப் பரப்பில் குறுமுயல் விளங்க வானில் தோன்றிய நேரத்தில் அத் திங்களுடன் அறுமீனாகிய கார்த்திகை நாள் மீன் சேர்ந்த இருள் அகன்ற நடு இரவில் தெருவெங்கும் விளக்குகளை நிரல்பட ஏற்றியும் மாலைகளைத் தொங்கவிட்டும் பல வெற்றிகளைக் குவித்த பழைமையான ஊரிலே உறவுகள் ( குடும்பர்கள்) ஒருங்கு சேர்ந்து விழவினைக் கொண்டாடும் நாளில் நம்மொடு கொண்டாடத் தலைவர் வருவார் என்று அழகாக வர்ணிக்கிறார்.
இதில் கவனிக்க வேண்டியது
இன்று மணமானவர்கள் தலைத் தீபாவளி கொண்டாடுவது போல சங்க காலத்தில் புதுமணமக்கள் தலைக் கார்த்திகை நாளைக் கொண்டாடியுள்ளனர்.
ஏனெனில் சங்க காலத்தில் தீபவளித் திருநாள் அறிமுகமாகவில்லை. எனவே மள்ளர்கள் கொண்டாடுவது கார்த்திகை நாள் விழா தான். தீப வளித் திருநாள் அன்று.
4.12.2025 அன்று இரவு வானம் தெளிவாக ஒருவேளை உங்களது ஊரில் இருந்தால் கிழக்கு வானில் பாருங்கள் Pleiades என்ற கார்த்திகை நட்சத்திரமும் நிலவும் தோன்றும் காட்சியை நீங்கள் பார்க்கலாம். இன்றும் பார்க்கலாம்.
மள்ளர்கள் தலைக் கார்த்திகை விழாவை மறந்ததால் பக்தி இயக்கம் அதை முருகனுடன் தொடர்பு படுத்தி சிவாலயங்களில் ஒளி ஏற்றி நம்மிடமிருந்து அதைப் பறித்துக் கொண்டனர்
பாடலைத் தருகிறேன் படித்து இன்புறுங்கள். கீழே பொருள் விளக்கம் கொடுக்கிறேன்.
கங்குல்- இரவு
புனை வினை நல்இல்- குருவிகள் கூடு கட்ட ஆரம்பித்து விட்டன இது நல்ல நிமித்தமாகும்
நெஞ்சு நனி புகன்று- கூடு பின்னுவதைக் கண்ட என் இதயம் அமைதியாக இருக்கும்
உலந்து- ஒழிந்து
நாஞ்சில் - கலப்பை
மாக விசும்பு- Ether
வளி தங்கியுள்ள விசும்பு மாக விசும்பு என தொல் புலவர்கள் அழைத்தனர்
குறுமுயல்- நிலவில் தோன்றும் கருமையான பகுதி. இன்று மக்கள் பாட்டு ராட்டை நூற்பதாகச் சொல்லும் உருவத்தை சங்க காலத்தில் குறுமுயல் என அழைத்தனர்
நடுநாள்- சித்திரை நட்சத்திரம்
மறுகு- தெரு
துவர- முற்ற
கஞலி- - பொலிவு
தகரம்- சாந்து
அயினி- சோறு
பல்கோட்டு- அடுப்புக் கொண்டை
வெறுக்கை- செல்வம்
கலை - கொம்பு மான்
சுரன்- பாலை வழி

Comments
Post a Comment