குடும்பனின் பார்வையில்

 ✒️..அரசியல் என்பது சாக்கடை அல்ல!!!! நொதித்த உரம்..!!!!!


....அவர்கள் மாதிரி அஞ்சாமல், நா கூசாமல் மேடைகளில் பேசக் கற்றுக் கொள்ளுங்கள்..


அரசியல் என்பது நீதியின் கைகளைப் பிடித்து நடப்பதல்ல...


முதலில் ஒன்றாகக் கூட வேண்டும். நல்லதோ கெட்டதோ உண்மையோ பொய்யோ தலைவர் சொல்வதை விமர்சிக்காமல் பின்பற்ற வேண்டும்..


ஊர் அம்பலம் செய்யும் மரத்தடியில் ஒன்றுகூடி ஆடு திருட ஒரு கிராமமே செல்லும்.


மனைவி மார்கள் தங்கள் கணவன் மார்கள் வேட்டைக்குச் செல்வதைப் போன்ற மனநிலையில் குதூகலத்தில் இருப்பார்கள்...


எப்படியும் ஆட்டுக்குட்டிகளோடு வருவார்கள் கசாப்பு உறுதி  என்ற முழு நம்பிக்கையில் மிளகாய் சாந்து  அரைத்து வைத்துக் காத்திருப்பார்களாம்.


இது கதையல்ல நடந்தவை....


அரசியல் என்பது ஆடு திருடுகிற சம்பவங்களுக்கு நிகரானதுதான்.


திருடப்போகிற போது எதுவும் நடக்கும்..


எதிர்ப்பு , பதுங்குதல், அடிதடி, விரட்டினால் திரும்பி உயிர் தப்பி ஓடுதல், அவமானப் பேச்சுகளை இடது புறங்கையால் தட்டிக் கடந்து போதல்- என எல்லாம் நடக்கும்.


 திருட்டும், கொள்ளையிடலும் அவமானம் அல்ல; வீர வரலாறாகத்தான் பேசப்படுகிறது..


அவர்கள் அரசியலுக்கும் லாயக்காகிறார்கள்.


 துணைக்கு வந்தவனை யெல்லாம் காப்பாற்ற நினைக்கக் கூடாது.


முடிந்தால் தடுக்கலாம் ஆனால் ஒரு போதும் மாட்டிக் கொள்ளக் கூடாது..


கிடாக் குட்டியைக் கைப்பற்றித் தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டு ஓடிக் கரை சேர்வது தான் இலக்கு..


திட்டம் தவறினால் தப்பித்து ஓடி ஊர் சேர்வது அவரவர் பாடு..


முடியாக் கோழிகளும், ஆத்தாக் கோழிகளும் திருட்டுக்கு லாயக்கல்ல..


முடியாக் கோழி என்பது பெட்டையை விரட்டி மிதுத்து ஏற முடியாத சேவலைக் குறிக்கும்..


ஆத்தாக் கோழி என்பது ஓட முடியாத பெட்டைக்கோழியையும் சேவல் ஏறிஇறங்கிய பிறகு உதறி எழு முடியாத பெட்டைக்கோழியையும்  குறிக்கும்..


இதெல்லாம் அரசியலுக்கு உதவும் இயற்கையான சம்பவங்கள்...


தேர்தலில் வெற்றி பெற வாக்குறுதிகள் வழங்குவது அரசியல்வாதிகளின் தந்திரம் உத்தி..


அதை நம்பி ஏமாந்து விமர்சனம் செய்தால் கம்பெனி பொறுப்பல்ல..


நரிகளின் ஊளை களை ரசிக்கும் மக்கள் நாய்களின் ஊளைச்சத்தங்களை விரும்புவதில்லை.


மாறாக ஆத்திரங் கொள்ளத்தான் செய்கிறது..


இரவில் காண்டா விளக்கு வெளிச்சத்தில் ஏலக்காரர்கள் நின்று கூவுவார்கள்..


ஏலம் போன எந்தத் துணிக்கும் உத்தரவாதம் இல்லை..


எடுத்த துணி வாய்க்காமல் சாயம் போனால் அது ஏமாந்த கதைதான்.


அதற்கு ஏலக்காரர் பொறுப்பல்ல..


இன்னும் ஐந்தாறு மாதங்களில் சிஞ்சாக்கள், மேடை ஆட்டக்காரர்கள், கூத்தாடிகள் வேடக்காரர்கள், விமர்சகர்கள், பாடகர்கள், விளக்குப்பிடிப்பவர்கள் எனப் பலரும் வர விருக்கிறார்கள்...


இது வழக்கமானதுதான்..

மக்கள் ஏமாறுவதைப் போல..


ஆக கடந்த தேர்தலில் தந்த வாக்குறுதிகளை நினைத்து வருந்தாதீர்.

ஆத்திரப்படாதீர்.



இப்போது புதிய தொழில்நுட்பங்கள் வந்து விட்டன..


 எத்தனை வருத்தப்பட்டாலும் ஆத்திரப்பட்டாலும் நீங்கள் ஒருபோதும் ஆட்சி அதிகாரத்திற்கு வர முடியாது என்பது அரசியல் வாதிகளுக்குத் தெரியும்..


தெருக்களில் உள்ள அத்தனை நாய்களையும் பகலில் பிச்சை வாங்க வருகிற சாமியார்கள் தங்கள் குச்சியால் வீசியபடியே விரட்டி விடுகிறார்கள் ஒரு நாயையும் அடிப்பதில்லை வீச்சும் அதட்டலும் போதுமானது.


இரவில் வரும் குடுகுடுப்பைக் காரர்கள் கைகளில் அந்தக் குச்சியும் கூட இருப்பதில்லை குடுகுடுப்பைச் சத்தமே போதுமானதாக உள்ளது.


ஆகவே போனதேர்தலில் அவர்கள் சொல்லி நிறைவேற்றாத வாக்குறுதிகளைச் சொல்லி அவர்களைச் சங்கடப் படுத்தாதீர்.


நீங்கள் வாக்களிக்காததால் அவர்கள் தோற்றுவிடப்போவதில்லை..


கூட்டணி என்ற பெயரில் தந்து மந்துகளால் அவர்கள் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வார்கள்.


ஆகவே தேவேந்திரர்கள் ஒற்றைத் தலைமையின் கீழ் இயங்கப் பழகுங்கள்.


அரசியல் என்பது  சாக்கடை அல்ல, நொதித்த உரம்..


வாழ்க தேவேந்திரனியம்.


©️✒️ மிக்கேல் ஜெயராஜ்.

யாழி வாசகர் தளம்.

12.12.2025.

Comments

Popular posts from this blog

குடும்பனின் வரலாற்று புரிதல்

திருநெல்வேலி இரயில் நிலைய நிலைய மேம்பாட்டு பணிகள்

திருநெல்வேலி யின் இலக்கியத்தில்