குடும்பனின் புரிதலில்

 

18-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களுக்கும் பாளையக்காரர்களுக்கும் இடையே போர் நடந்ததாக கூறப்படுகிறது. இது இந்திய சுதந்திர போராக பேசப்படுகிறது. இது உண்மையில் ஆங்கிலேயர் பாளையக்காரர்கள் போரா?

---------------------------------------------------------------

அந்த நேரத்தில், கிழக்கிந்திய நிறுவனம் இந்திய துணைக் கண்டத்தை ஆள நினைக்கவில்லை. 

இங்கிருந்த அரசியல் சூழ்நிலைகள் அவர்களை அதை நோக்கித் தள்ளியது.

 கிழங்கிந்திய நிறுவனம் தங்களுடைய வணிக நிலைகளை விரிவாக்குவதிலேயே அவர்களுடைய அனைத்து நகர்வுகளையும் அமைத்துக் கொண்டனர். 

வணிகத்தில் வந்த செல்வங்களை கடன் கொடுத்தும், கூலிக்கு படைகளை வழங்கியும் கையூட்டு கொடுத்தும், சூழிச்சிகள் செய்தும் கொஞ்சம் கொஞ்சமாக தங்களுடைய விஷ வலையைப் பின்னினர். 

அந்தவகையில் அவர்கள் கடன் வலையில் முதலில் வீழ்ந்தது ஆற்காடு நவாபு. அவர், சொல்கிறார் தன்னுடைய மகனிடம் “ மகனே, எதைச் செய்தாலும் இந்த வெள்ளையினிடம் மட்டும் கடன் வாங்கதப்பா! " 


அந்த அளவுக்கு தங்களுடைய ஆக்டோபஸ் விஷக் கரங்களால் இந்திய அரசுகளைக் கபளிகரம் செய்தனர். 

அந்த, வரி வசூலிக்கும் உரிமையை ஆற்காடு நவாபிடம் இருந்து கைப்பற்றினர். 

வரி வசூல் கொடுமை அதிகரிக்க ஒவ்வொரு பாளையமாக வீழ்ந்து வந்தது. 

கட்டபொம்மன் கூட ஆரம்பத்தில் இருந்து வரிதான் கட்டிவந்தான். வரிகட்ட முடியாத போது ஜாச்சனின் அராசகத்தினாலும் வேறு வழியின்றி வெள்ளையர்களை எதிர்க்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

 பூலித்தேவனுக்கும் இது பொருந்தும். மாபூஸ்கானின் அடாவடித்தனத்தால் பூலித்தேவன் அவனை எதிர்த்தான். 

அது விடுதலைப் போர் இல்லை.

 இறுதியாக சிவகங்கை. 

அவர்களும் தங்கள் அரசை மீட்பதற்கே போர் புரிந்தனர். 

ஜம்பு தீவு பிரகடனம் இந்த நோக்கத்தில் எழுதப் பட்டதுதான்.

 தென்னிந்திய கூட்டணியும் அதனால்தான், உருவானது.

 வெள்ளையர்களை எதிர்த்ததனால் அதை விடுதலைப் போராக வரலாற்று ஆசிரியர்கள் போலியாக வர்ணிக்கின்றனர். 

திப்பு சுல்தான் மட்டும் விதி விலக்கு.

 இந்தியாவில் அன்று சர்வதேச அரசியலைப் புரிந்து காய் நகற்றியவர் அவர் ஒருவர்தான். அதைக் கண்டு வெள்ளையர்களே, அஞ்சினார்கள். பிரஞ்சு, அமெரிக்காவிடம் எல்லாம் இதனால் அவர் உதவி கேட்டார்.

 அமெரிக்கா- ஆங்கிலப் போரை இதற்குப் பயன்படுத்திக் கொண்டார்.

 எனவே, பாளையக்கார்கள் எதிர்ப்பு விடுதலை எதிர்ப்பு இல்லை. வரியினால் வந்த ஒரு சூழ் நிலைப் போர்.


 இதில் வேடிக்கை என்னவென்றால் தங்களை சூரப்புலிகள் என்று சொல்லிக் கொள்ளும் ஒரு இனம் அந்த வெள்ளைப் படையில் சேர்ந்து கொள்ளையடிப்பதும் பங்கு போட்டு கொள்வதும் போன்ற கொடுமைகள் அரங்கேறியது.


 நகைமுரண் என்னவென்றால் பள்ளர்கள்தான் அந்த பாளையக் காரர்களின் படையில் அவர்களுக்கு துணை நின்று வீர மரணம் அடைந்தனர்.


 மாபூஸ்கான் படையில் இருந்தது கள்ளர்கள், மறவர்கள். 


பூலித்தேவன் படையில் இறுதி வரை நின்று போரிட்டது பள்ளர்கள்தான்.

**************"""""""********************

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.

கி.பி 1736-ல் நாயக்க அரசு வீழ்ச்சியடைந்தது, மதுரை‌ நாயக்க பகுதி மொகலாய ஆளுநர்களாக இருந்த ஆர்க்காடு நவாப் வசம் வந்தது, இதுவரை மதுரை‌ நாயக்கர்களுக்கு கப்பம் செலுத்திய பாளையக்காரர்கள் எந்த வித எதிர்ப்பும் காட்டாமல் ஆர்க்காடு நவாப்பிற்கு வருடந்தோறும் தவறாமல் கப்பம் செலுத்தி வந்தார்கள்.

கி.பி 1707-ல் மொகலாய மன்னர் ஔரங்கசீப் இறந்த பின் மத்தியில் வலுவான நிலையில் இருந்த மொகலாய ஆட்சி ஔரங்கசீப் இறப்பிற்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வலுவிழந்தது ஆங்காங்கே இருந்த மாநில ஆளுநர்கள் தன்னாட்சி பெற்றனர் இதன் விளைவாக ஆர்க்காடு நவாப்பும் தன்னை தன்னாட்சி பெற்றவராக அறிவித்துக் கொண்டனர்.

ஆரம்ப காலங்களில் பாளையக்காரர்களை அடக்கி கப்பத்தை கறாராக பெற்று வந்த நவாப்புகள் பிற்காலத்தில் ஆடம்பரமான வாழ்வில் ஈடுபட்டு நிர்வாக திறனை இழந்து பாளையக்காரர்களிடம் வரிகளை வசூலிக்க இயலாமல் போய்விட்டது இதன் விளைவாக வியாபாரம் நிமித்தம் இங்கே இருந்த ஆங்கிலேயர்களிடம் தங்கள் ஊதாரி செலவுக்கு அதிகமான பணத்தை பெற்றனர் ஆனால் திருப்பி செலுத்த முடியாத சூழ்நிலையில் ஆங்கிலேயர்கள் ஆற்காடு நவாபுக்கு நெருக்கடி கொடுத்தனர்‌ .வேறு வழியின்றி வரி வசூல் செய்யும் உரிமையை ஆங்கிலேயர்கள் பெற்றனர் அதுவும் நாவப்பின் பேரில் இதற்கு நவாப்பின் படைகள் மற்றும் பாளையக்காரர்களின் துணையோடுதான் பாளையக்காரர்களிடம் வரி வசூல் செய்யப்பட்டது, இது முழுக்க முழுக்க ஆற்காடு நவாப்பின் உத்தரவுக்கேற்ப நடத்தப்பட்ட வரி வசூல் என்பதுதான் உண்மை.  இதை ஆங்கிலேயர்களுக்கு எதிரான சுதந்திர போராக திரித்து விட்டார்கள் .

பாளையக்காரர்களிடம் எந்த விதமான சுதந்திர வேட்கையுமில்லை . ஒவ்வொரு பாளையக்காரனும் அவரவர்களின் பாளையங்கள் குறித்தும் தன்னுடைய சுய நலம் குறித்துமே கவலை பட்டார்கள். ஒரு பாளையக்காரனை அடக்குவதற்கு இன்னொரு பாளையக்காரன் உதவுவது என்ற பாணியில் தான் பாளையங்கள் வீழ்ந்தன .

Comments

Popular posts from this blog

குடும்பனின் வரலாற்று புரிதல்

திருநெல்வேலி இரயில் நிலைய நிலைய மேம்பாட்டு பணிகள்

திருநெல்வேலி யின் இலக்கியத்தில்