குடும்பனின் பார்வையில்

 அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கான அடித்தளம்!!!!!

ஒவ்வொருவருக்கும் ஒரு "இலக்கு" இருக்கும், அவர்கள் அனைத்து செயல்களும் ஏதோ வகையில் அதை நோக்கி அவர்களை நகர்த்துவதாக இருக்கும், இதை ஒருவர் #தெளிவாக செய்துவிட்டால் போதும், இலக்கை நோக்கிய அடியில் அவர்கள் முன்னேற துவங்கி விடுவார்கள். அதே போல ஒவ்வொரு குழுக்களுக்கும் ஒரு இலக்கு இருக்கும், அவர்களின் செயல்கள் யாவும் அதை நோக்கியே இருக்கும். அவர்களின் ஒவ்வொரு #நிமிடமும், அவர்களின் ஒவ்வொரு #ரூபாயும், அவர்களின் ஒவ்வொரு #அடியாளும், அவர்களின் ஒவ்வொரு #அடிமையும் அதற்காகவே உழைக்குமாறு பார்த்துக் கொள்வார்கள். இதோ, அடுத்த சட்டமன்ற தேர்தலை நோக்கி நகரத் துவங்கிவிட்டார்கள்....!!!


கடந்த தேர்தலில் ஒற்றை #செங்கலையும், #இளம்_விதவைகளையும் காட்டி ஓட்டு வாங்கிய கூட்டம் 

இன்று ஆட்சிக்கு வந்த பிறகு ஏதோ வகையில் அந்த இரண்டையும் #நீர்த்துப்போகச் செய்ய வேண்டிய அவசியம் உருவாகி இருக்கும் சூழ்நிலையில் தன் கருவிகளை கையில் எடுத்திருக்கிறார்கள், 

அதில் ஒன்று தான் இந்த #மது_ஆலை_முதலாளிகளை ஒருங்கிணைத்து நடத்தப்பட்ட மது ஒழிப்பு, சாரி மதுவுக்கு எதிரான, சாரி சாரி மதுபான கொள்கைக்கு எதிரான, சாரி சாரி சாரி மது ஒழிப்பு மகளிர் மாநாடு....!?!


மாநாடு தலைப்பு கடந்து வந்த பாதையிலேயே தெரியும், இந்த மாநாடு யார் உத்தரவின் பேரில், யார் #லாபத்திற்காக,  யார் #ஸ்பான்சர்ஷிப்ல் நடந்திருக்கும் என்று.....????


ஒரு குறும் #வீடியோ, ஒரு #யூடியூப் பேட்டி கொடுத்தாலே முடிந்து போகிற ஒரு விசயத்திற்கு தன் கட்சி, கிளை, கழகம் வரைக்கும் முடுக்கி விட்டு தொண்டர்களை திரட்டி தன் சாதிக்காரர்கள் இருக்கும் ஊர்கள் தோறும் வாகனங்கள் அமைத்துக் கொடுத்து அழைத்து வந்து மாநாடு போட்டு அதில் மது போதையில் #புள்ளிங்கோ போடும் ஆட்டத்திற்கு மத்தியில் 

ஆளும் மாநில அரசிற்கு மது ஒழிப்பில் உடன்பாடு உண்டு என்று ஒருவர் உளறுகிறார் என்றால் 

அவர் யாருக்காக வேலை செய்கிறார் என்று தெரிகிறது தானே......????


மது ஒழிப்புக்கு மாநாடு போட்டாச்சு, அதுல ஆளும் கட்சிக்கும் உடன்பாடு உண்டுன்னு அறிவிச்சாச்சு, 

இனி யாராவது மது ஒழிப்பு, மதுவால்  #சீரழிவு என்று பேச முடியுமா, அப்படி பேசினால் அதில் ஏதாவது பொருள்தான் இருக்குமா.....????


எவ்வளவு நாசுக்காக வெகுஜன மக்கள் மீதும் சமூக செயற்பாட்டாளர்கள் மீதும் ஒரு #உளவியலை_திணித்திருக்கிறார்கள் பாருங்கள் இந்த #கும்பல்.....???


சரி, மது ஒழிப்புக்கு மாநாடு நடத்திட்டிங்க, ஆலை முதலாளிகளையே அழைத்து நடத்திய புரச்சிகரமான #மாநாடு தான் வரவேற்கிறோம் வாங்க!

 எப்போ சென்னையின் #மையத்தில் இருந்து அப்புறப் படுத்தப்பட்ட, சென்னையின் பூர்வ குடிகளான #பரையர் சமூக மக்களுக்காக மாநாடு நடத்துவிங்க.....???


அது எப்படி நடத்துவிங்க, ஒவ்வொரு முறை அவர்களை அப்புறப்படுத்திய போதும் உங்களை அனுப்பி தானே போராடிய அவர்களை #நயவஞ்சகமாய் ஏமாற்றினார்கள், பிறகெப்படி அவர்களுக்காக மாநாடு......????


மரக்காணத்திலும் கள்ளக்குறிச்சியிலும் #விச_சாராயம் குடித்து மக்கள் உயிரிழந்த போது வராத மது ஒழிப்பு கொள்கை, 

#ஸ்பான்சர் கிடைத்த பிறகு வருகிறது மத்திய மதுபான கொள்கைக்கு எதிராக வருகிறது என்றால் உங்கள் பொறுமை போற்றத் தக்கது, 

புள்ளிங்கோ தான் பாவம், பூர்வீகத்தையும் பிழைப்பையும் தொலைத்து இன்று  புறம்போயிருக்கிறார்கள்.....! 


#நீட் ரத்து வாக்குறுதிக்கு மத்திய பாஜக அரசை மலை போல நம்பியிருந்தவர்கள் மத்தியில் மதுபான விவகாரத்தையும் அதே #பாஜக தலையில் கொள்கை ரீதியாக சுமத்திவிட முடியும் என்று ஒரு வாதத்தை வைத்தீர்கள் பாருங்கள், ஆளும் திராவிட ஆட்சியாளர்களே உங்களிடம் கவனமாக இருக்க வேண்டும், 

அப்படி ஒரு #உருட்டு அது.....!!!

Comments

Popular posts from this blog

குடும்பனின் வரலாற்று புரிதல்

திருநெல்வேலி இரயில் நிலைய நிலைய மேம்பாட்டு பணிகள்

திருநெல்வேலி யின் இலக்கியத்தில்