குடும்பனின் பெருமிதத்தில்
✒️ "தமிழ் மொழியை உலகின் தலை மொழியாகவோ அல்லது தலை மொழிகளில் ஒன்றாகவோ கொள்ளுதல். "
இதுதான் மொழிஞாயிறு தேவநேயப்பாவாணரின் ஆய்வுக் கண்டடைவு..
இன்று பிப்-07. அவரது பிறந்தநாள்
உலக அளவில் தமிழை ஆய்வு செய்தவர்களில் முதன்மையானவராகப் போற்றப்படுபவர்.
திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டம் கரிவலம் வந்தநல்லூருக்கு அருகிலுள்ள புறக்கடையான்பட்டியில் பிப்.07.1902 இல் தேவேந்திர குல வேளாளர் மரபில் வாத்தியார் கூட்டம் எனும் வகையறாவில் முத்துச் சாமிக்குடும்பனார் வள்ளியம்மை குருதி மரபில் பரிபூரணம் ஞானமுத்து தம்பதியர்களுக்கு மகனாகத் தோன்றியவர்.
அவரது ஆய்வின் உச்சம் என்பது தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலியை உருவாக்கியது தான்.
பள்ளி ஆசிரியராகப் பணியைத் தொடங்கி பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி ஆராய்ச்சித் துறை இயக்குனராகப் பணியாற்றியவர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, சமஸ்கிருதம் ஆகிய இந்திய மொழிகள் ஆங்கிலம், பிரஞ்சு, லத்தீன், கிரேக்கம் ஆகிய வெளிநாட்டு மொழிகள் உட்பட 17 மொழிகளின் இலக்கணங்களைக் கற்றவர்.
40- க்கும் மேற்பட்ட மொழிகளின் சொல்லியல்புகளைக் கற்று சொல்லாராய்ச்சி செய்த பெருமகனார் .
மறைமலையடிகள் வழியில் நின்று தனித் தமிழ் இயக்கத்திற்கு உழைத்தவர்.
இவரது மாணவர் பாவலேறு பெருஞ்சித்திரனாரால் மொழி ஞாயிறு தேவநேயப்பாவாணர் எனப் பெயர் சூட்டப்பட்டார்.
தமிழ்ப் பல்கலைக்கழகம் அகரமுதலி துறையில் பணியாற்றிய அறிஞர் முனைவர் ப.அருளி இவரது ஆய்வு மரபு வழியினர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழறிஞர், சொல்லாராய்ச்சி வல்லுநர், பன்மொழி அறிஞர், தமிழ் மொழியின் வேர்ச்சொல் ஆய்வாளர் எனப் பல தகுதிகளைப் பெற்ற ஆகச்சிறந்த தமிழறிஞர்.
தமிழறிஞர் என்றால் அதற்கான முழுத் தகுதியும் இவருக்கு மட்டுமே தகும்.
தமிழியம் எனும் பண்பாட்டு இயக்கத்தின் முதல் தலைவராகக் கருதப்படுகிறார்.
இன்று பிப்-07. அவரது பிறந்தநாள்.
தேவேந்திரகுலத்தில் பிறந்த பிதாமகனை அவரைப் பற்றி வாசிப்பதன் மூலமாகப் பெருமிதம் கொள்வோம்..
எவ்வளவு வறுமையிலும் இம்மி அளவு கூட நேர்மை தவறாத ரோசக்காரர் எனப் பாராட்டப் பெறுபவர்.
" எனக்கும் மக்களுண்டு வறுமையுண்டு அதோடு கொஞ்சம் மானமும் உண்டு" என்று சொல்லி தமது பதவியைத் துறந்தவர் என்ற பாராட்டுக்குரியவர்.
வறுமையிலும் தமிழ் மொழிக்கு ஆற்றிய தொண்டுக்காகவும், எதற்காகவும் சமரசம் செய்து கொள்ளாத இறுக்கமான கொள்கைப் பிடிப்பிடிப்பிற்காகவும் ஐயா மொழி ஞாயிறு தேவநேயப்பாவாணர் புகழ் பாடுவோம்..
தமிழ்மொழிக்காகப் பாடுபட்ட தலைமகனார் புகழ் தமிழ் தரணியெங்கும் பேசப்படும்.
வாழ்க தேவேந்திரனியம்..
©️✒️ யாழி
07.02.2025.

Comments
Post a Comment