குடும்பனின் பார்வையில்
2024 ல் நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தலைச் சீர்குலைக்க இந்திய அரசியல்வாதிகளும், பத்திரிக்கைகளும் அமெரிக்காவிடம் லஞ்சம் பெற்ற செய்தி அதிர்ச்சி அளிக்கவில்லை..
இங்கே நடக்கிற ஊடக விவாதங்களையும், எதிர்க்கட்சிகளின் மௌனங்களையும் கவனித்தால் எல்லாவற்றிலும் அடிப்படையில் ஒரு புரிதல் இருக்கிறது.
தமிழகத்தில் இந்தியைத் திணிப்பதாகச் சொல்கிறார்கள் ஆனால் இல்லாத திராவிடம் இங்கே வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படுகிறது.
தமிழகப் பள்ளிகளில் தமிழ்ப் பாடத்தில் பெறப்படும் மதிப்பெண்கள் நம்மை யோசிக்க வைக்கவில்லை.
எல்லாத் தனியார் பள்ளிகளிலும் இந்தி மனப்பூர்வமாக ஏற்கப்படுகிறது.
எல்லாக் கிராமங்களிலும் இந்திக்காரர்கள் புழங்குகிறார்கள்.
பிரயாக்ராஜ் கங்கை யமுனை நதிகள் நீராடத் தகுதியற்றவை என்கிறார்கள் ஆனால் தமிழகத்திலுள்ள 90 சதவீத ஏரி குளங்கள் குளிக்கத் தகுதியற்று விட்டன என்பதைப் பேச மறுக்கிறார்கள்.
மீன், தாமரை வளர்ப்பை வேண்டுமென்றே செய்து குளத்து நீரை மாசுபடுத்துகிறார்கள்.
அதனால் பெருவாரியான எளிய மக்கள் தோல் நோயால் பாதிக்கப்படுகிறார்கள்.
ஆனால் ஒரு சிலர் மட்டும் ஏலம் எடுத்து ஆதாயம் பெறுகிறார்கள்..
ஒரு காலத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் தனியாக குடிதண்ணீர் குளம் இருந்தது.
அவற்றை மாசு என்ற பின் ஒரு குடம் 10 ரூபாய் என குடிநீர் விநியோகம் நடக்கிறது..
ஆனால் அந்த குடிநீரும் பாதுகாப்பானதா என்பது ஐயமே..
தமிழகத்தில் இந்தியை ஒரு மொழியாகவும், பாஜகவை ஒரு அரசியல் கட்சியாகவும் அணுக மறுக்கும் போக்கே ஒரு முரண்பட்ட அரசியல் பித்தலாட்டம் தான்...
பொதுத் தளத்தில் பேச வேண்டிய விடயங்கள் அதிகம் உள்ளன.
ஆனால் பேசவும் ஆளில்லை கேட்கவும் நாதியில்லை.
திராவிடம், பெரியாரியம், அம்பேத்காரியம், தலித்தியம், இந்தியியம் என எல்லாமும் மறுவாசிப்புக்கு உட்படுத்தும் நேரம் வந்து விட்டது.
சந்தர்ப்பவாதங்களை அடையாளம் கண்டு
அரசியல் களம் மாறியே தான் ஆகும்..
நன்றி.
19.02.2025
Comments
Post a Comment