குடும்பனின் வரலாற்றில்

 வடக்கு அழகு நாட்சியா புரம் 

வடக்கு அழகு நாட்சியா புரம் என்ற கிராமத்தை நிர்ணயித்த சக்திகள்…


ஒரு ஊரை புதிதாக நிர்ணயம் செய்வது என்பது மள்ளர் என்னும் தேவேந்திர குல வேளாளர் மக்களுக்கு மிகவும் எளிதான செயல். மண்ணை பண்படுத்தி விவசாயம் செய்வது என்றாலும் சரி... புதிது புதிதாக ஊர்களை (அனைத்து தேயிலை தோட்ட நகரங்களும் உருவாக்கிய வரலாறு படித்து தெரிந்து கொள்ளுங்கள்)  நிர்ணயம் செய்வது என்றாலும் இவர்கள் இன்றி உலகில் எவருமிலர்.


தமிழ் நிலம் உலகெங்கும் இணைந்திருந்த கால கட்டத்தில், உலகின் தொடக்க கால தொல் புதைமங்களைக் கொண்ட தரணி போற்றும் தாமிரபரணி நதிக்கரையில் காலரா என்னும் காலன் கொடிதாக கொன்றழித்த போது, உயிரையாவது காப்பாற்றிக் கொள்ளும் முயற்சியில் வெளியேறி வந்த ஒரு கூட்டம் - தங்கி கொள்ள தேர்ந்தெடுத்த தண்ணியே இல்லாத பகுதி தான் சங்கரன் கோவில் பகுதி.

வடக்கு அழகு நாட்சியா புரம் - ஆங்காங்கே கிணற்று பாசனம் தவிர்த்து - மழை பெய்தால் விவசாயம் செய்து வாழும் மக்கள் உள்ள ஊர். முக்கிய வருமானம் மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை வரும் பூவினால் வரும் வருமானமே. மீதம் மக்கள் கடும் உழைப்பாளிகள் ஆனதால் மள்ளர் மக்களின் குல தொழிலான விவசாயம் சார்ந்த பணிகளுக்கு கூலிகளாக சென்று வருவாய் ஈட்டுவார்கள். 

தமிழ் தாயின் மக்கள் கலைகளான - நாட்டுப்புற கலைகளில் (வில்லு பாட்டு, நாதஸ்வர மேளம் கச்சேரி போன்ற கலைகள்) சிறந்து வாழும் கலைஞர்கள்  ஊர். 

இவ்வளவு உழைப்பும் எதற்கு செலவழிப்பார்கள் என்றால் தங்கள் பிள்ளைகளின் கல்விக்காகவே. கல்வியின் மூலம் மட்டுமே சாதித்துக் காட்டும் ஊர் என்றால் - அது வடக்கு அழகு நாட்சியாபுரம் - வங்கி அதிகாரிகள் என்றாலும், காவல் துறை பதவிகள் என்றாலும் அரசின் அனைத்து துறைகளிலும் பணியாற்றும் பெருமை மிக்க ஊர். 

இவற்றிற்கெல்லாம் ஆதி... அந்தம் பற்றி விரிவாக பார்க்கலாம்...


ஆங்கிலேயர்கள் வருகையின் போதே, அனைத்து மருத்துவ அறிவியலிலும் தேர்ந்தவராக விளங்கியவர் - வெள்ளையப்ப வாத்தியார். இவரின் துணைவியார் - வள்ளியம்மாள். 

எங்கு செல்லவும் தனக்கு வாகனமாக மிதிவண்டியிலேயே எந்த வித பயமுமின்றி சுற்றி திரிந்தவர். 

(எனது சிறு வயதில் பெரிய வீட்டில் - பல்வேறு வகையான மருத்துவ உபகரணங்கள், வித விதமான பதப்படுத்த பட்ட மாதிரிகள், மூலிகைகள் மற்றும் ஓலைச்சுவடிகள் ஓடையில் சென்று கொட்ட பட்டது).

ஒரு முறை திருநெல்வேலி சென்று மாவட்ட கலெக்டர் ஐ தற்செயலாக சந்திக்க சென்ற போது,அவரது மனைவி மிகுந்த வருத்தமுடன் இருந்ததை கண்டு, என்ன என்று வினவினார்.

கலக்டர் மனைவி தனது விலையுயர்ந்த நகை ஓன்று கிணற்றுக்குள்  மூழ்கியதாக சொல்ல, அணிந்து வந்த உடைகளைக் களைந்து கிணற்றில் குதித்து மூழ்கினார். இருபது  நிமிடங்கள் தாண்டியும் வாத்தியார் வெளியே வராததால் கலக்டரும் அவர் மனைவியும் கவலை கொண்ட தருணத்தில் - கையில் தங்க நகையோடு வெளியே வந்து அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தார். 

மிகவும் உணர்ச்சிவசப்பட்ட கலக்டர் சொல்லொணா ஆனந்தத்தில் மூழ்கி - என்ன வேண்டுமானாலும் கேளுங்கள் - உடனே தருகிறேன் என உறுதி கூற - அந்த காலத்திலேயே - சுற்று பகுதிகளில் எங்குமே கல்வி கற்க முடியாத ஒரு சூழ்நிலை நிலவியதால் - வெள்ளையப்ப வாத்தியார் கலக்டரிடம் கேட்டு வாங்கியது - இரண்டு பள்ளிகள் தொடங்குவதற்கான அனுமதி. என்ன ஒரு மகான் அவர்??!!!?!?!

எவ்வாறான ஒரு உயரிய சிந்தனை??? மக்கள் மீதான அன்பு?

இதனால தானோ என்னவோ - இறைவன் இவர் வேண்டினாலே போதுமாம் - மழையையே கொடுத்தாராம் (தகவல் - மாடசாமி @ கருப்பையா, வீரணாபுரம்).

அந்த காலத்திலேயே காதில் அறுவை சிகிச்சை செய்து சாட்சியாய் விளங்கியவர் - சின்ன செல்லையா, AEEO.

இவ்வளவு சாதனை படைத்த சொந்தக்காரரின் வாரிசுகள் மருத்துவராக இல்லாமல் இருப்பது காலத்தின் கொடுன்செயல்.

வெள்ளையப்ப வாத்தியார் - வள்ளியம்மாள் தம்பதிக்கு பிறந்தவர்கள் தான் - அய்யனு வாத்தியார் மற்றும் வாத்தியார் சுப்பம்மா; 

 வெள்ளையப்ப வாத்தியார் பெயரில் இருந்த தனது மொத்த ஊரான வடக்கு அழகு நாட்சியாபுரம் கிராமத்தை -  

 

தந்தைக்கு பின்னர் அனைவருக்கும் சரி பங்காக பிரித்து அளித்தவர் - அய்யனு வாத்தியார்.

தந்தை வாங்கி வந்த இரண்டு பள்ளிகளையும் சீரும் சிறப்புமாக நடத்தி - இந்திய சுதந்திரத்திற்கு முன்னரே சுற்று வட்டார அனைத்து பகுதி மக்களுக்கும் கல்வி கண்ணைத் திறந்த மகான்கள் இவர்களே. . 


சங்கரன் கோவில் வட்டாரத்திலேயே கல்விக் கூடத்தை முதன் முதலாக ஆரம்பித்து, மக்கள் வாழ்வில் திருப்பு முனையாக வாழ்ந்த அய்யனு வாத்தியார் அவர்களின் நினைவு தினத்தில் நன்றியோடு நினைவு கூறுகிறோம்.

Comments

Popular posts from this blog

குடும்பனின் வரலாற்று புரிதல்

திருநெல்வேலி இரயில் நிலைய நிலைய மேம்பாட்டு பணிகள்

திருநெல்வேலி யின் இலக்கியத்தில்