குடும்பனின் வரலாற்றில்

 ✒️கீழவெண்மணித்        துயரம்

 பேசப்படும்           போதெல்லாம் 

அறச்சீற்ற   நாயகன்

 அமல்ராஜ்     குடும்பனாரும்

 பேசப்படுவார்.



கீழவெண்மணி அறச்சீற்ற நாயகன் அமல்ராஜ் குடும்பனாரின் கணக்கை நேர் செய்தல்/பலிதீர்த்தல் சம்பவங்களைப் பற்றி நம்மில் பலருக்கும் முழுதாகத் தெரியவில்லை..


முழு விபரங்களும்கூட இன்னும் தொகுக்கப்படவில்லை என்பது வருத்தமான செய்திதான்..


1950களில் தஞ்சை டெல்டாப்பகுதியிலும், தென்மாவட்டங்களிலும் தேவேந்திரர்களுக்கு நெருக்கடிகளும், பண்பாட்டு அழித்தொழிப்புகளும்  நடந்தேறின..


இரு பகுதிகளிலும் இருவிதமான போக்குகள் ..


தென்பகுதியில் நில உடைமைகளை அபகரித்தல், கோயில் உரிமைகளைப் பிடுங்கிக்கொள்ளுதல் இருப்பிடங்களை விட்டு விரட்டுதல்.,

தாழ்ந்த குடிகளெனப் பிரகடனப்படுத்துதல் இப்படியான சூழல்...


அப்போது இதனையெல்லாம் ஒரே காலத்தில் எதிர்த்துக் களமாடினார்கள்..


ஆனால் தஞ்சைப் பகுதியில் நிலைமை வேறு..


நில உடைமைகள் யாவும் கோயில் நிருவாகம், ஆதீனங்கள், வடுக தெலுங்கன்/பண்ணையார்கள் வசம் இருந்தன.


கீழத்தஞ்சையில் வாழ்ந்த உழவர் குடிகளுக்கு குடியிருக்கக்கூடச் சொந்த இடம் இல்லை...


தனியாகப் பாதை வசதிகளோ, புழங்குவதற்கான இடங்களோ கூட இல்லை...


எந்தப்பக்கம் கால்பதித்தாலும் பண்ணையார்களின் பூமியில்தான் புழங்கவேண்டும்.


விவசாயக்கூலிகள் என்ற நிலையிலேயேதான் மிகுதியான மக்கள் வாழ்ந்தார்கள்..


நிலங்களை இழந்த மள்ளர் குடிகள் கூலிகளாக்கப்பட்டதோடு அடிமைமுறையில் வாழப் பழக்கியிருந்தனர்..


ஆனால் இந்த அடிமைமுறை வாழ்க்கை தென்தமிழகத்தில் இல்லை.


அங்கே போராட்டக்களமே வேறு வடிவமானது..


இந்தக் கருத்தியல் அணுகுமுறையால் பிற்காலத்தில் நாகைத் தொகுதியில் கம்யூனிசம் வளர்ந்தது..


தென்காசித் தொகுதியில் காங்கிரஸ் வளர்ந்தது.


இரு பிரதேசத்திலும் திராவிடம் பிரவேசிக்க முடியாமல் போனது.


இப்போது சூழல் வேறு..


தஞ்சையில் நிலவுடைமையாளர்கள் கொடுத்த வாழ்வியல் தொந்தரவுகளைக் கம்யூனிசம் என்ற கட்சி /கருத்தியில் எதிர்கொண்டது..


ஆகவேதான் அங்கே தேவேந்திரனியம் எனும் கருத்தியல் வேர்பிடிக்காமல் தோழர் என்ற நட்புமுறை வேர் கொண்டது..


அப்போதும்

காங்கிரஸ் கம்யூனிசம்

திராவிடம் எல்லாமும்

தேவேந்திரர்களுக்கு அரசியல் முக்கியத்துவம் கொடுக்கவில்லை..


கோபாலகிருஷ்ண நாயுடு என்ற வடுக தெலுங்கன்  செய்த படுகொலையைப் பெரியார் கூட எதிர்க்கவில்லை என்பதையெல்லாம் இன்றைய தேவேந்திரகுல இளைஞர்கள் அறியவேண்டும்.


நீதிமன்றம் கூட வடுக தெழுங்கர்களுக்கு/பண்ணையார்களுக்கு ஆதரவாகத்தான் இருந்தன.


இன்றைய ஆனந்த வெங்கடேசன் போன்ற நீதியரசர்கள்

இல்லாத காலம் அது..


ஆகவேதான் தென்காசி விருதுநகர் பகுதியிலிருந்து கீழவெண்மணிக்கு அமல்ராஜ் குடும்பனார் பயணிக்க வேண்டியிருந்தது..


விருதுநகர்ப்பகுதியிலும் தொழிலாளர்களை அடக்குகிற வன்மங்கள் நடந்தன.


அங்கேயும் அமல்ராஜ் குடும்பனார் பல எதிர்வினைகளை ஆற்றியிருக்கிறார்.


அதெல்லாம் வரலாற்றில் பதியப்படவேண்டிய விடுபட்ட பகுதிகள்.


கீழவெண்மணிக்குப் புறப்படும்போது ஒரு ஆண் குழந்தையும், பெண் குழந்தையும் இருவருக்கும் ஐந்தாறு வயதிருக்கும்..


குடும்பத்தை விட்டுவிட்டு அன்றைக்கு சமூக அறம் காக்க புறப்பட்ட அமல்ராஜ் குடும்பர் எங்கே...


அவரது பிழைப்பு எப்படிக் கழிந்தது.

நீதிமன்றம், காவல், தலைமறைவு வாழ்வு

என எத்தனையோ விடயங்களைப் பக்கம்பக்கமாய் எழுதவேண்டியுள்ளது.

தரவுகள் தர வேண்டியவர்கள் வயதாகிப்போனார்கள்.

இருப்பவர்களைக் கொண்டாவது ஒரு வீர வரலாற்று வம்சத்தின் தொடர்ச்சியை எழுதுவோம்..


இன்றைக்கு அரசியல் படும்பாடு மிகக்கொடுமையானது..


பெருங்கோடிகளைச் சம்பாதிப்பதற்காகவே கூட்டணிகள் அமைக்கப்படுகின்றன.


வீரமுழக்க வசனங்கள் அதிகார வர்க்கத்தின் காலடியில் மௌனமாய் மண்டியிட்டு நிற்பதோடு நீதிக்கு எதிராக முழுக்கமிடுகிறார்கள்..


எத்தனை அரசுரர்கள்

வந்தாலும் எம் அறச்சீற்ற நாயகன் அமல்ராஜ் குடும்பருக்கு நிகராக நிற்கவே இயலாது ...



பொய்யை நிசமாக்க

கூடிக் கத்துகிறார்கள்...


ஆனால் அவர்களின் முகமூடிகள் வரும் காலங்களில் கிழிக்கப்படும்..



வாழ்க கீழ் வெண்மணி அறச்சீற்ற நாயகன் அமல்ராஜ் குடும்பனாரின் ஒப்பற்ற வீரம்...


12 ஆண்டுகள் காத்திருந்து உயிருக்கு ஒரு வெட்டு என்று 44 வெட்டு வெட்டி கணக்கை சமன்செய்த வீர நாள் இன்று.



©️✒️யாழி

25.12.2023

Comments

Popular posts from this blog

குடும்பனின் வரலாற்று புரிதல்

திருநெல்வேலி இரயில் நிலைய நிலைய மேம்பாட்டு பணிகள்

திருநெல்வேலி யின் இலக்கியத்தில்