குடும்பனின் பார்வையில்

 "முன்னோர்களின் சாபம் சும்மா விடாது"


'தமிழரின் நீர் மேலாண்மை'-யின் "அறிவுத்திறனை" ஒரு கட்டுரையில் முழுமையாக விவரித்திட முடியாது.


 தமிழரின் "நீர் மேலாண்மை" குறித்த அடிப்படையான "அறிவு" கூட  நமக்கெல்லாம் ஏன் இல்லாமல் போனது என்பதை நினைத்து வெக்கி தலைகுனிய வேண்டும்.


நிலம் ,நீர்,தீ,வளி, விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் 'உலகம்' என்கிறது "தொல்காப்பியம்". 


'நீரின்றி அமையாது உலகு', 

நீர் 'மிகுனும் குறையினும் நோய் செய்யும்' என்கிறார் "வள்ளுவர்". 


"நீரில்லாமல்" இவ்வுலகம் இல்லை என்பதை "பண்டைய தமிழ் வேந்தர்கள்" அறிந்து வைத்திருந்திருக்கிறார்கள். 

"தமிழின வேந்தர்"-களான 'பாண்டியர்கள்', 'சேரர்கள்', 'சோழர்கள்' அதிக "மாரி(மழை)" பூமிக்கு வரவேண்டியும், அதை 'ஏர் பூட்டி', உழவுக்கு பயன்படுத்தி வருடத்திற்கு மூன்று போகம் முத்து, முத்தாக "நெல் மணிகளை" விளைவித்து மக்களின் 'பஞ்சம்', 'பசி', 'பட்டினியை' போக்கி-யும், "மாரி(மழை)" கடவுளான மருதநிலத்து வேந்தன் "இந்திரன்"-க்கு நன்றி செலுத்தும் விதமாக "இந்திர விழா" எடுத்தும்  வழிபட்டிருக்கிறார்கள். 


எனவேதான் "தொல்காப்பியர்" வயலும் வயல் சார்ந்த மருத நிலத்தை "வேந்தன் மேய தீம்புனல் உலகம்" என்கிறார்.


 சங்ககாலம் தொட்டு நீரை 'கொண்டாடி' இருக்கிறார்கள், அதை 'பாதுகாத்தும்' இருக்கிறார்கள். சங்க காலத்தின் "முந்நீர் விழா" என நீருக்கு விழா எடுத்திருக்கிறார்கள் "தமிழர்கள்". 


தமிழரின் நீர் மேலாண்மை குறித்து குறிப்பிடும் போது, அதில் "கல்லணை"-யை குறிப்பிடாமல் இருக்க முடியாது.

 சர்வதேச அளவில் தமிழரின் "நீர் மேலாண்மை" அறிவை பறைசாற்றியது.


 "ஏரும்', 'போரும்' எம் குலத்தொழில்" என்று வாழ்ந்தவர்கள் நம் தமிழ் முன்னோர்களான "மூவேந்தர்கள்".


 காவிரியின் குறுக்கே கல்லணை என்றால், வைகை ஆற்றின் குறுக்கே ஏராளமான தடுப்பு அணைகளைக் கட்டியவர்கள் பாண்டிய மன்னர்கள்.


 மதுரையை ஏழாம் நூற்றாண்டில் ஆட்சி செய்த கூன் பாண்டியனும், பராக்கிரம பாண்டியனும் "வைகை" ஆற்றின் குறுக்கே தடுப்பணையைக் கட்டி இருக்கிறார்கள்.


இப்படிப்பட்ட இயற்கையின் பெருங்கொடையான மழைநீரை வானத்திலிருந்து பூமிக்கு வருவதை கைத்தட்டி வரவேற்காமல் அய்யா! சாமி இன்று சென்னையில் எப்படியாவது மழை வரக்கூடாது, வந்தால் எங்களால் தாக்குபிடிக்க முடியாது என்று "சென்னைவாசிகள்" அழுது புலம்பும் அவலம் ஏற்பட யார் காரணம்?


 மக்களாகிய "சென்னைவாசிகளும்", 65 ஆண்டுகளாக மாறி மாறி ஆட்சி செய்த இந்த ஆட்சியாளர்களும் தான். 



'ஆறுகள்' தான் தமிழரின் தாகத்தை தணிக்கிறது என நாம் நினைக்கிறோம். ஆனால் உண்மையில் தமிழரின் நீர் தேவைகளை பெருமளவில் பூர்த்தி செய்பவை "ஏரிகள்" தான்.



ஏரிகள் பன்முகத் தேவைகளை நிறைவுச் செய்யும் ஒரு களஞ்சியம்.


 அதுவொரு மீன் வளர்ப்புப்பண்ணை, மழைநீர் சேமிப்புக் குட்டை, வண்டல் தரும் உரவங்கி, கரப்பு நீர் மேம்பட உதவும் ஊற்றுக்கால், சுற்றுச்சூழலைப் பசுமையாக குளுமையாக மாற்றி வெப்பம் குறைக்கும் இயற்கைக் குளிர் சாதனம். இறுதியில் அதுவொரு "பாசனக்குளம்".


 இதன் மூலம் இயற்கையின் "உயிர்சூழலில்" ஏரியின் பங்கை நாம் புரிந்துகொள்ள முடியும்.



சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அரசு ஆவணங்களின்படி 3,600 ஏரிகள் இருந்தன. ஏரிகள் மிகுந்த மாவட்டமாக இருந்த சென்னையில், இப்போது எத்தனை ஏரிகள் உயிருடன் இருக்கின்றன? எத்தனை ஏரிகள் காணாமல் போயிருக்கின்றன என்று உங்களால் சொல்ல முடியுமா? 



காணாமல் போன அனைத்து ஏரிகளும் "வீட்டுமனைகளாக" தின்று ஏப்பம் விட்டு விட்டார்கள் இந்த "சென்னைவாசிகள்". பிறகு மழை நீர் 'வெள்ளம்' அதன் தாய் வீடான "ஏரிக்கு" செல்லாமல் வெறு எங்கு செல்லும். 


அறிவுகெட்ட மானிடா!


இயற்கை எவ்வளவு தான் பாடம் புகட்டினாலும் நாம் திருந்தவும் மாட்டோம், மாறவும் மாட்டோம். நம்மை ஆண்டவர்கள், ஆள்பவர்கள் என யாரும் மாறப்போவதில்லை.


என்ன கொடுமை சரவணன் இது?


முனைவர் ச. தங்கராசு

Comments

Popular posts from this blog

குடும்பனின் வரலாற்று புரிதல்

திருநெல்வேலி இரயில் நிலைய நிலைய மேம்பாட்டு பணிகள்

திருநெல்வேலி யின் இலக்கியத்தில்