குடும்பனின் பார்வையில்
பயமாக இருக்கிறது ....
இன்றைய தலை முறையினரின் போக்கு.....
பிடித்த ஒரே பொருள் - செல்ஃபோன்
படிக்காமல் பாஸ் ஆக வேண்டும். கஷ்டப்படாமல் வேலை கிடைக்க வேண்டும்...யாருக்குமே மரியாதை தரக்கூடாது..
தனக்கு தெரியாத விஷயம் எதுவுமே இல்லை என்ற மனநிலை...
*எல்லாமே உடனே கிடைக்க வேண்டும்..* காசுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம்...
*சினிமா, கிரிக்கெட், செல்ஃபோன்* இவைதான் உலகம்..
*பெண்கள்* மீது மரியாதையே இல்லை..
*ஆசிரியர்கள், மூத்தோர்கள்* எல்லாம் புழு பூச்சி மாதிரி...
*வரலாறு, பண்பாடு, கலை, இலக்கியம், அரசியல்* குறித்த அடிப்படை புரிதல்கள் கூட இல்லை..
ஒரு பேங்க் செலான் கூட நிரப்பத் தெரியாது..
ஒரு வரி கூட வாசிப்பதில்லை..
*தப்பில்லாமல் தமிழோ, ஆங்கிலமோ எழுதவும், பேசவும் வராது...*
ஒரு விஷயத்தை கோர்வையாகச் சொல்ல வராது..
*வீதியில் நின்று விஷம் குடித்துக் கொண்டிருந்தாலும் அதையும் செல்பி எடுத்து போட வேண்டும்..*
பள்ளிச் சீருடையுடன் கூட *டாஸ்மாக்* போகிற அளவுக்கு தைரியம்..
சின்ன வயசிலேயே வாயைத் திறந்தாலே கெட்ட வார்த்தை.. எப்போதும் ஏதாவது ஒரு போதையில் தன்னை மூழ்கடித்துக் கொள்ள விரும்புகிற மனநிலை..
*எதிலும் நிரந்தரமாக நிலை கொள்ளாத அலைபாயும் மனம்..*
*ஜட்டி* தெரிய பேண்ட் போட்டு, காண்டாமிருகம் மாதிரி முடிவெட்டி, *எவரையும் கண்களைப் பார்த்து பேச முடியாமல் விநோதமாக வெறித்த பார்வையுடன் நடப்பது....*
இந்த அபாயத்தை சமூகம் இன்னும் முழுமையாக உணரவில்லை..
பள்ளி ஆசிரியர்களுக்கும் ஓரளவுதான் தெரியும்..
*பெற்றோர்களின் அளவுக்கு மீறிய செல்லம்தான் சகலத்துக்கும் காரணம்..*
தங்களை அறியாமல் அவர்கள் இவர்களின் அனைத்து அடாவடிகளுக்கும் துணை போகிறார்கள்...
அவர்கள் பார்க்கிற பிள்ளைகளில்லை இவர்கள்....
இவர்கள் உள்ளுக்குள் வேறொரு *ஜோம்பியாக* வளர்ந்து கொண்டிருக்கிறார்கள்..
இந்த டிஜிட்டல் உலகில் எல்லாம் தெரியும் என்று நினைக்கும் அவர்கள்....
கத்திரிக்காய் வெண்டைக்காய், தக்காளி, அவரை, உருளை
இவைகள் எவை செடியில் கொடியில், மண்ணில் காய்க்கிறது என்று தெரியாமல் உயர்கல்வி பயின்றவர்களும் சொல்வதற்கு முழி பிதுங்குகிறார்கள்.
அண்மையில் ஒரு டிகிரி படித்த இளைஞனிடம் கேட்டேன். பச்சரிசி புழுங்கல் அரிசி வித்தியாசம் தெரியுமா தம்பி என்று.
விடை தெரியாமல் அவன் கூகுள் சென்று தேடுகிறான். எவ்வளவு பெரிய அவல நிலையில் நம் உலகம் சென்று கொண்டிருக்கிறது...???
முடி வெட்டுவதற்கும் இவர்கள் அப்பாயிண்ட்மெண்ட் புக் பண்ணி தான் செல்கிறார்கள்.
படிப்பு , உயர் பதவி, லட்சத்தில் ஊதியம், EMI கொண்டு அனைத்து ஆடம்பர பொருட்களை எல்லாம் தகுதிக்கு மீறி வாங்குதல் , செல்போனை அடிக்கடி மாற்றுதல், எல்லாம் விளம்பரத்துக்கும் புகழுக்கும் , அடுத்தவரிடம் பந்தா பண்ணுவதற்கும் இவர்களின் வாழ்க்கை நகர்ந்து சென்று கொண்டிருக்கிறது.
நாகரீகம் என்ற உச்சத்தில் இளம் வயதினர்கள் இன்று இழந்து கொண்டிருப்பது....
தலைமுடி
இளம் வயதிலேயே கண் கண்ணாடி
அதீத உடல் எடை
ஆலயம் வர மறுத்தல்
நம் இல்லம் தேடி வருபவரை வரவேற்காமல் சோபாவில் உட்கார்ந்து கொண்டு போனை நோண்டிக்கொண்டு பதில் அளித்தல்.
இன்னும் எத்தனையோ அவல நிலையில் இன்றைய இளம் பிள்ளைகள்.
இவர்களை எவை கொண்டு மாற்றுவது...??
மனம் கணக்கிறது இவர்களின் வாழும் கலையை எண்ணி....!!!
பள்ளியில் படிக்கிற போது அவன் தன்னை முழுமையாக வெளிப்படுத்துவதில்லை..
இவர்களுக்கும் அந்த இரு தலைமுறையினருக்கும் மலையளவு வித்தியாசம்..
மேற்சொன்னவை ஏதோ ஆண் பிள்ளைகளுக்கு மட்டும் என்று என்ன வேண்டாம். *இது இருபாலருக்கும் பொருந்தும்.*
காலம்காலமாக மூத்தோர் இளையோர் மீது வைக்கிற குற்றச்சாட்டாக எண்ணிவிடாதீர்கள்
*கடந்த பல்லாயிரம் வருடங்களில் இப்படி ஒரு ரசனை கெட்ட, சுய சிந்தனையற்ற, சோம்பலும் அலட்சியமும் கொண்ட தலைமுறையை உலகம் சந்திக்கவே இல்லை. எதிர்கால வரலாறு.....*
மறுக்க முடியாத வேதனை தரும் உண்மை
*பயமாக இருக்கிறது...... இன்றைய தலைமுறையின் போக்கு.....*??????
Ⓑ︎
Comments
Post a Comment