குடும்பனின் வரலாற்றில்
2000 ஆண்டுக்கு முந்தைய குடவோலை முறை
குடவோலை முறையானது சோழர்காலத்தில் கொண்டுவரப்பட்டதாக எல்லாராலும் நம்பப்பட்டுக்கொண்டிருக்கிறது
இதற்கு காரணம் உத்திரமேரூர் கல்வெட்டு செய்தி,
இந்த கல்வெட்டு செய்தி கி.பி 10-ம் நூற்றாண்டை சேர்ந்தது இது சோழ நாட்டில் குடவோலை முறை இருந்ததை கூறுகிறது ஆனால் இது உண்மையல்ல .
இந்த உத்திரமேரூர் கல்வெட்டு செய்திக்கு 150 ஆண்டுகளுக்கு முன் மாறன் சடையன் காலத்து அதாவது கி.பி 9-ம் நூற்றாண்டு திருநெல்வேலி மாவட்டம் மானூர் அம்பலவாணர் கோவில் கல்வெட்டு பாண்டிய நாட்டில் இருந்த குடவோலை முறை தேர்தலை குறிப்பிடுகிறது, அப்படியென்றால் சோழர் காலத்திற்கு முன்பே பாண்டிய நாட்டில் குடவோலை முறை தேர்தல் நடந்துள்ளதை இது காட்டுகிறது .
இதில் இப்பொழுது இன்னோரு கேள்வியும் எழுகிறது பாண்டிய நாட்டில் 9-ம் நூற்றாண்டில்தான் குடவோலை முறை நடைமுறைக்கு வந்ததா? அதற்கு முன்பு இந்த முறை இல்லையா? என்ற கேள்வி எழுவது இயல்பே !
இதற்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா ? என்றால் கல்வெட்டு செய்திகள் இல்லை ஆனால் இலக்கிய சான்று உண்டு .
நாம் சங்க கால இலக்கியங்களாக கருதும் அகநானூறு, புறநானூறு போன்றவை காலத்தால் மிகவும் மூத்தது அதுவும் 2000 வருட பழமை வாய்ந்தது இதில் குடவோலை முறை குறித்து தேடும்போது அகநானூற்றில் 77-வது பாடல் குடவோலை குறித்து பேசுகிறது .
"கயிறு பிணி குழிசி ஓலை கொண்மார்
பொறி கண்டு அழிக்கும்
ஆவணமாக்கள் ".
இது குடவோலை முறையை தெளிவாக செப்புகிறது.
மருதநில மக்கள் நாகரீக வளர்ச்சியில் படிப்படியாக வளர்ந்து 2000 வருடத்திற்கு முன்பே தேர்தல் முறையை நேர்மையாக நடத்தியுள்ளனர் என்பது தெள்ள தெளிவு .
2000 வருடத்திற்கு முன்பே ஆவணமாக்கப்பட்டிருக்கிறது என்றால் இது நடைமுறைக்கு அதற்கு முன்பே வந்திருக்கவேண்டும் என்பதே வரலாறு பேசும் உண்மை !
திரு. ஆனந்தராஜ்
தேவேந்திரர் வரலாற்று ஆய்வு மையம்
Comments
Post a Comment