நரேந்திரனின் வெற்றியில்
✒️ நரேந்திர மோடியின் பலம்
சர்வதேச அளவில் உயர்கிறது..
நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தல் முடிவுகளில் நான்கு மாநில தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கருத்துக்கணிப்புகளைப் பின்னுக்குத் தள்ளி மூன்று மாநிலங்களில் ஆட்சியைப் பிடிக்கிறது பாஜக.
சமகால இந்திய அரசியலில் மோடிக்கு நிகரான ஓர் அரசியல் தலைமை இன்னும் உருவாகவில்லை.
அப்படி உருவாவதற்கு இன்னும் காலம் ஆகலாம்.
தெலுங்கானாவிலும் கணிசமான வளர்ச்சியைப் பெற்றுள்ளது.
அந்த வளர்ச்சிப் போக்குத் தமிழகத்திற்கும் பரவும் என்பதில் ஐயமில்லை.
பாஜக மீது திட்டமிட்டே வெறுப்பு அரசியலைப் பரப்புவதை வெகுஜனங்கள் ரசிக்கவில்லை..
மத்திய அரசின் பல நலத்திட்டங்களைத் தமிழக மக்கள் புரிந்துகொண்டிருக்கிறார்கள்..
குறிப்பாகப் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் பற்றிய புரிதல் இந்த ஆண்டு வெகுமக்களைச் சென்றடைந்திருக்கிறது..
கைவினைஞர்களுக்கான திட்டங்கள் பெரிய அளவில் பேசப்படுகிறது..
அண்மையில் ஆதன் தமிழ் நிகழ்ச்சியின் விவாதத்தில் பங்குகொண்ட ஊடகவியலாளர் திரு.ரவீந்திரன் துரைச்சாமி அவர்கள் தேவேந்திரர்கள் பற்றி மோடி பேசியதைக் குறிப்பிட்டுள்ளார்..
தமிழகத்தின் வேளாண் குடிகளான தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்ற ஒரு வார்த்தையைக் கூட ராகுல் காந்தி பயன்படுத்த மறுக்கிறார்..
இதுவரை காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்த தேவேந்திரகுல வேளாளர் மக்களின் உணர்வுகளை மதிப்பிடத் தவறிவிட்டார் என்பதைவிட இவர்கள் ஆதரவே தேவையில்லை எனக் கருதுகிறார்..
பாஜகவுக்கு தேவேந்திரர்கள் இதுவரை வாக்களிக்காவிட்டாலும் இனிவரும் தேர்தல்களில் கணிசமான ஆதரவைப் கொடுப்பது உறுதி..
தமிழகத்தில் எத்தனை இடங்களில் வெற்றிபெறப்போகிறார்கள் என்று பேசுகிறவர்களுக்கு ஆச்சரியமான பதில் காத்திருக்கிறது..
வாக்குச் சதவீதமாவது கூடும் என்பதை மறுப்பதற்கில்லை...
தமிழக அரசியலில் பாஜக தனித்து நின்று தேர்தலைச் சந்திக்கும் துணிச்சலுக்கு வந்துவிட்டது..
வேறு எந்தக் கட்சிக்கும் அந்தத் துணிச்சல் வரப்போவதில்லை.
தமிழகத்தில் பெறப்போகும் வெற்றி மத்தியில் மோடிதான் பிரதமர் என்பதை இன்றைய வெற்றிகள் மூலம் அவதானிக்கிறோம்..
கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி வியப்பானது..
உலக நாடுகளின் கவனம் முழுக்க இந்திய தேசத்தின் மீதுதான் இருக்கிறது.
விண்வெளி ஆய்வுகளாகட்டும், தொழில்நுட்பத்துறையாகட்டும், அந்நிய நாடுகளுடனான ராஜதந்திரமாகட்டும்
பெருங்கவனம் பெறுகிறது..
எதிர்க்கட்சிகளின் தாறுமாறான தாக்குதல்களை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்..
குறிப்பாக பெண்கள் மோடியின் நல்லாட்சியை பெரிதும் விரும்புவதை மூன்று மாநில தேர்தல் வெற்றிகள் காட்டுகின்றன..
துணிச்சலான, திடமான தலைவராக மோடி அறியப்படுகிறார் என்பதுதான் வெற்றியின் ரகசியம்..
2024 பாராளுமன்றத் தேர்தலிலும் இதுவே எதிரொலிக்கும்.
எதிரிகளிடம் வெறுஞ்சோறுமில்லை.
வெஞ்சனமுமில்லை.
ஆகவே தேவேந்திரர்கள் பட்டியல் வெளியேற்றத்தை வென்றெடுக்க மதங்களைக் கடந்து மோடியை ஆதரிப்போம்..
அதுதான் அரசியல் ராஜதந்திரம்..
சமூக விடுதலைக்காக நாமும் நுண்அரசியலை ஆதரிப்போம்.
©️✒️மடைக்குடும்பர்,
03.12.2023.

Comments
Post a Comment