குடும்பனின் பார்வையில்
✒️மள்ளரியத் தந்தை ஐயா தேவ ஆசீர்வாதம் என்றும் பேசப்படுவார்..
தேவேந்திர குல வேளாளர்கள் இன்று தனித்த அடையாளத்தோடு வாழ்வதற்கு ஆணி வேராக இருந்தவர் மள்ளரியத் தந்தை ஐயா தேவ ஆசீர்வாதம் அவர்கள் தான்.
தான் துணை ஆட்சியராக பணி செய்து கொண்டே நம் சமூகத்தின் வரலாற்றைக் கண்டறிந்து நூலாக்கியவர்.
மூவேந்தர் யார்? எனும் நூலைப் படித்த பிறகுதான் எம்மைப் போன்றவர்கள் நம் சமூகத்தின் வரலாற்றை அறிந்து கொண்டோம்.
மறைந்த நடத்துநர் நாட்டாணி புரசக்குடி அம்புரோஸ் அவர்கள் தான் 1980 களில் இந்த நூலை மாமா ரெட்டையாளம் பங்கு ராஜ் மூலமாக வாசிக்கத் தந்தவர்.
எனக்கு சமூக வரலாறுகளை வாசிக்கவும் நேசிக்கவும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தவர்கள் இவர்கள் தான்.
இலக்கியங்களிலிருந்து பெறப்பட்ட தரவுகள் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது.
ஐயா தேவ ஆசிர்வாதம் தொடங்கி வைத்த சமூக வரலாற்று ஆய்வுப் புள்ளி தான் இன்று வரை நீள்கிறது.
அவரால் கண்டறியப்பட்ட இலக்கியச் சான்றுகளுக்கு தொல்லியல் சான்றுகள் துணை நிற்கின்றன.
சமகாலத்தில் பேரா.முனைவர். க.பன்னீர்செல்வம் போன்றவர்களது கல்வெட்டாய்வுகள் குடும்பர் எனும் மரபைச் சுட்டுகிறது.
காலத்தால் கிமு. ஆறாம் நூற்றாண்டுக்கும் முன்னதாகத் தொடங்கி மள்ளர் எனும் வேளாண் குடிகள் தொடர்ந்து அதே அடையாளத்தோடு இன்றும் வாழ்வதைக் காண்கிறோம்.
விஜய நகரப் படையெடுப்புகளால் ஒடுக்கப்பட்ட ஒரு சமூகம் உளவியல் ரீதியாக விடுதலை பெறுவதற்கு இழந்த பெருமித வரலாற்றை அறியத் தருவது மிக முக்கியமாகும்.
அப்படியான உளவியல் விடுதலையைத் தந்தவர் ஐயா தேவ ஆசீர்வாதம் அவர்கள்.
அதன் நீட்சிதான் இன்று ஆகஸ்ட் - 17 மதுரையில் நடைபெறுகிற மள்ளரிய கருத்தரங்கம்.
இக்கருத்தரங்கத்தை ஏற்பாடு செய்தவர் வேளாண் விஞ்ஞானி
முனைவர் தங்கசாமி அவர்கள்.
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் திருவள்ளுவன்,
பேரா. முனைவர் இராஜேஸ்வரி,
பேரா. முனைவர் ரவி,
பேரா.கலையரசு,
பேரா. முனைவர் துளசேந்திரன்,
பேரா முனைவர் முனீஸ்வரன்
முதலானவர்களோடு பல பல்கலைக்கழகப் பேராசிரியர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
சமூகத்தை அடையாளப்படுத்தியவர்கள் என்றும் சமூகத்தால் போற்றப்படுவார்கள்.
இன்று ஆக - 17 ஐயாவின் நினைவு நாள்.
வாழ்க
மள்ளரியத் தந்தை.
©️✒️ மிக்கேல் ஜெயராஜ்.
17.08.2024.

Comments
Post a Comment