குடும்பனின் பார்வையில்
✒️பனை ஏறப் பழகுகிறவன் கீழே பார்ப்பதில்லை.
DKV BANK MEMBERS தளத்தில்
இதுவரை முப்பத்து மூன்று உறவுகள் தங்களது ஆதரவைத் தெரிவித்தும் பங்களிப்பை வழங்கியும் இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.
திருமயம் 108 பட்டி கோட்டூர் திரு.கருப்பையா ஆசிரியரின் துணிச்சலான முயற்சியைப் பாராட்டுகிறேன்.
நூறு உறவுகள் கூடி தலா ஐயாயிரம் ரூபாய் வழங்கி சட்டபூர்வமாக ஒரு வங்கியைத் தொடங்குவது தான் நமது திட்டம்.
பணம் ஐந்து லட்சத்தையும் ஒருவரே வழங்கப் பலர் தயாராக உள்ளனர்.
ஆனால் ஒத்த கருத்துடைய நூறு உறவுகள் தேவை என்பது தான் முக்கியம்.
பல இடங்களில் இது மாதிரியான முயற்சிகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
ஆனால் ஒரு சில இடங்களில் தொடர்ந்து இயங்க முடியாமல் தடைபட்டிருக்கலாம்.
நாம் வெற்றி பெற்றவர்களை மட்டுமே கவனத்தில் கொள்வோம்..
எத்தனையோ பேர் சங்கங்கள், அமைப்புகள்,அரசியல் கட்சிகள் தொடங்குகிறார்கள்.
அனைவரும் வெற்றி பெறுவதில்லை.
தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் நீண்ட நாள் கனவாக பலரால் பேசப்பட்டு வரும் திட்டம் ஒரு வங்கியைத் தொடங்குவது என்பதுதான்..
பேச்சைத் தொடங்கும் போதே எதிர்மறையான விவாதங்களைப் பேசியபடியே திட்டம் கைவிடப்பட்டு விடும்.
மேலும்
இடையில் யாராவது வந்து குழப்பி விடலாம், தகர்த்து விடலாம் அல்லது கைப்பற்றி விடலாம் போன்ற எதிர்மறையான விவாதங்களும் நம் முயற்சியை இதுவரை தடுத்துள்ளன.
இப்படியான சிக்கல்களும் நடைபெறாமல் இல்லை.
ஆனாலும் தொடர்ந்து வெற்றி பெறுவதற்கான சாத்தியக் கூறுகளை மட்டுமே ஆராய்கிறோம்.
ஒரு சின்ன உதாரணம்..
உழுதவன் கணக்குப் பார்த்தால் உழவு கம்பு கூட மிஞ்சாது என்ற பழமொழியைச் சொல்லியபடியே தான் தொடர்ந்து விவசாயம் செய்கிறோம்.
ஆனாலும் சம்சாரிகள் உழவை நிறுத்தவில்லை.
வெள்ளாமையில் பதரும், கருக்காயும், போக மீதமுள்ளவற்றைத்தான் ஆதாயமாகக் கொள்கிறோம்..
அதைத்தான்
"கண்டு முதல் " என்கிறோம்..
மிகச் சரியான சட்ட திட்டங்களோடு தொடங்குகிறோம்.
இதன் வளர்ச்சி மற்றும் வாழும் காலம் என்பது நம்முடைய தலைமுறைகளின் கைகளில் தான் இருக்கிறது.
வங்கித் திட்டம்
தனிமனித வளர்ச்சிக்குப் பயன்படும் அதே வேளையில் சமூக முன்னேற்றத்திற்கும்
துணை நிற்கும் என நம்புவோம்...
நகரத்தார்களின் வாழ்வியலைப் பார்த்துப் புரிந்து கொண்டால் நம்மைப் போன்ற பண்பாட்டுச் சமூகம் விரைவில் பொருளாதாரத்திலும் தொழில்துறையிலும் அரசியலிலும் மேம்படும் என நம்புகிறவன் நான்.
ஒழுக்கமும் இறை வழிபாடும் அயராத உழைப்பும் முன்னோர் வழியைப் பிசகில்லாமல் பின்பற்றலும் தான் நகரத்தார் சமூகம் இன்றும் அடையாளத்தோடும் மேம்பாட்டோடும் வாழத்துணை செய்கிறது.
சமூகத்தின் வழிகாட்டுதல்கள்
தனிப்பட்ட மனிதர்களின் வாழ்வியலைத் தீர்மானிக்கின்றன.
சில தனிப்பட்ட மனிதர்களின் கூட்டு முயற்சியால் ஒரு பெருஞ் சமூகத்தின் வளர்ச்சி கட்டமைக்கப்படுகிறது.
உறுதியோடு முயற்சிப்போம்.
பனை ஏறப் பழகுகிறவன் கீழே பார்ப்பதில்லை.
மடக்கொள்ள முயற்சியும் திடமான மன உறுதியும் தேவை.
வாழ்க தேவேந்திரனியம்..
©️✒️ மிக்கேல் ஜெயராஜ்.
09.08.2024.
Comments
Post a Comment