குடும்பனின் பார்வையில்
வெள்ளாவி மனிதர்கள்.
ஆத்தோ சோறு போடும்...
கோமாத்தா சோறு போடும் ...
சன்னமான குரலில் வேலம்மா ..எங்க வீட்டுக்கு முன்னே நின்று கக்கத்தில் ஒரு ஈய. பானையை வைத்து இப்படி குரல் கொடுக்கும் ..பகல் முழுக்க ஊர்ல உள்ள அழுக்கு துணிமணிகளைத் வெளுத்துட்டு வந்து 10...20 வீட்டுல போய் சோறு வாங்கிட்டு வரும்..ரெண்டு சட்டி பானை வச்சிருக்கும்..சுடுசோறு பழையசோறு எது குடுத்தாலும் வாங்கிட்டு போவும்..அவங்க குடும்பத்துல ஆட்கள் நெறைய..
.எங்க வீட்ல ராத்திரி மட்டும் சுடுசோறு இருக்கும்..மத்தபடி காலைல பழைய சோறு ..மத்தியானம் கேப்ப கூழ் அல்லது கம்மங்கஞ்சி இருக்கும்..
கடைசி வெள்ளிக்கிழமைகள்ல தோசைக்கு போடும் எங்கம்மா ..நெறைய வீடுகள்ல போடுவாங்க ..அன்னைக்கு சாணி வச்சி வீடு மொழுகும் எங்கம்மா ..தோச சுட்டாலும் இட்லி அவிச்சாலும்...நாங்க சாப்பிடுறத வேலம்மாக்கு கொடுப்போம்..சில நேரம் சங்கர்ம்மா பெருமாளம்மா வருவாங்க.
எங்கம்மா மறுநா காலை மதியத்துக்கு கூழ் காய்ச்சுற வேலையில மும்முரமா இருந்துட்டு "தொர நாலாப்ப சுடுசோடு வட்ட சட்டில போட்டு வேலம்மா பானைல போட்டுட்டு வா'"
நா அரிக்கேன் விளக்கு வெளிச்சத்த கூட்டி வச்சி அடுப்பங்கரைக்கு போய் சோறு போட்டு எடுத்துட்டு வேலம்மா பாட்டி பாத்திரத்துல போட்டுட்டு வருவேன் ..
அப்போ வேலம்மா கேக்கும் ஏய்யா என்ன கொழம்பு ராவுக்கு ..
"அம்மா கூழ் கிண்டிட்டுருக்கு அது முடிஞ்சதும் ரசமும் உளுந்தந்தொவையலும் வச்சி தரும் படிச்சிட்டு பொறவு சாப்பிடுவோம்"னு சொன்னேன்..
அதுக்கு வேலம்மா "யாத்தோவ் தொரையையும் சேகரையும் தட்டுல வெறும் சோத்த போட்டுட்டு வீட்டுக்கு வர சொல்லும்...மவன் நடராசன் வெருவு புடிச்சிட்டு வந்துருக்காம் ..மருமவ சங்கரம்மா கொழம்பு வச்சிட்டிருக்கா செத்தநேரத்துல ஆய்ரும்..."
அம்மா பதிலுக்கு காத்திராமல் ரெண்டு பேருக்கும் தட்டுல சோத்தபோட்டுட்டு வேலம்மா பாட்டி வீட்டுக்கு போனோம்...
வீட்டுக்கு பக்கத்துல போறதுக்குள்ளே கறி வாசனை மூக்க தொளைச்சி எச்சி ஊறிடிச்சி ...
எங்கள பாத்ததும் சங்கரம்மா ..ய்யா வாங்க ரெண்டுவேரும்..இங்கன தெரணைல உக்காருங்க ..நா கறிக்கொழம்பு கொண்டாரேன்னு போச்சி ..கொஞ்ச நேரத்துல கரிச்சட்டியோட தூக்கிட்டு வந்து எங்க பக்கத்துல வச்சி எங்க சோத்துல ஊத்திச்சி..நல்லா சாப்பிடுங்க னு சொல்லி கறியா அள்ளி வச்சிச்சி ...
நாங்க சாப்ட்டுட்டு இருக்கும் போது நடராசன் வந்தார்...வெருவுனா எப்படி இருக்கும்னு தம்பி சேகர் கேட்டான் ..அடுத்தவாட்டி கூண்டுல மாட்டும் போது உங்கட்ட காட்டுதன் என்னய்யா...
சாப்பிட்டு முடிச்சோம்..வீட்டுக்கு போறோம்னு சொன்னோம்..தாயி நடக்க முடியாம வீட்ல இருப்பா அவளுக்கு இந்த கொழம்ப குடுங்கனு கொழம்பு குடுத்து வுட்டுச்சி சங்கரம்மா ..
அவங்க வீடும் எங்க வீடும் பக்கத்து பக்கத்துல இருக்கும்..
ஊருக்கு கெழக்கு புறம் வீடு ..வெள்ளாவி வைக்கிற பானை அடுப்புனு ஒரு சின்ன வீடு ரெண்டு கழுதைங்க கட்டமண்ணுல நின்னுட்டுருக்கும் ..
செல்லையா ..வேலம்மா தம்பதிக்கு ரெண்டு ஆண்
மூனு பெண் குழந்தைங்க ..ஊர்ல உள்ள அழுக்குத்துணியெல்லாம் வீடு வீடா எடுத்து துவைப்பாங்க ..மூத்தக்காவ சின்ன வயசுலயே கட்டி குடுத்துட்டாங்க ..குன்னத்தூர் ராமையா நல்லா நாதஸ்வரம் வாசிப்பார் ..குடிப்பார்..
நடராசன் சங்கரம்மாவ கட்டிட்டு அப்பாக்கு ஒத்தாசையா துணி வெளுப்பார் ..
சின்னக்கா லெட்சுமி கருப்பசாமினு ஒருத்தர கட்டிட்டு நல்லாருக்காங்க ..
இசக்கி எங்களைவிட மூனு நாலு வயசு மூப்பு படிப்பு ஏறல..அப்பாகூட தொழில் பழகுனாரு...முடி வெட்டுறதுல கில்லாடி ..
பெருமாளம்மா பாவம் வாழ்க்கை சரியா அமையல.
செல்லையா குடிச்சி குடிச்சே போய் சேந்துட்டார்..
மகன் நடராசனும் அப்பா மாதிரியே குடிச்சி குடிச்சி நோய் வந்து செத்துட்டார்..
ஊர் குடிமகன் இப்போ ..இசக்கி மட்டும் தான் இப்போ குடிக்காம கொல்லாம பத்துஇருவது ஆடுகளை வச்சி மேச்சிட்டுருக்கார்...யாராவது முடி வெட்ட வந்தா வெட்டிட்டு பணம் வாங்கிப்பார் ..துணி வெளுக்குறது இல்லை ..
இசக்கியோட அப்பாவும் அண்ணனும் இருக்கும் போது ...முடி வெட்டுறதுக்கு துணி வெளுக்குறதுக்கு பெரும்பாலும் கூலியா நெல் தான்..வாங்குவாங்க வயல் இல்லாதவங்க மட்டும் பணம் குடுப்பாங்க..
எங்க ஆச்சி களத்துல வச்சி வெளுப்புக்கூலி நாசுவன்கூலி பூ போடுறவங்களுக்கு கூலி வய காவ கூலினு அளந்து குடுக்கும்..
நான் ..சேகர் ..ரவி ..மூனுபேரும் முடி வெட்ட ஒரே நேரத்துல போவோம்..செல்லையா தாத்தாட்ட தலைய குடுத்தா பங்கர கொத்தாகொத்திடுவார்..அதனால ரவிய அவர்ட்ட தள்ளிடுவேன்..
சேகர நடராசன்ட்ட வெட்ட சொல்லுவேன்...அவனுக்கு நல்லா வெட்டுற மாதிரி இருக்கும் ..அதனால நானும் நடராசன் அண்ணன்ட்ட வெட்டுவேன்..செய்யது பீடி கட்டு வாங்கி குடுத்தா நைசா வெட்டுவார் ..துட்டு சேத்து வச்சி நா மட்டும் பீடி கட்டு வாங்கி குடுப்பேன்..
செல்லையா தாத்தா ரவிய அங்க திரும்புஇங்க திரும்பு குனி நிமிருனு பாடா படுத்துவாப்ள...
கீழ குனிய சொல்லும்போது குனியனும்..தலைய அசைக்கவே கூடாது...குனிஞ்சிட்டுருக்கும்போது ஊள மூக்கு ஒழுவும்..தொடைக்க கூட விட மாட்டார்..காது பக்கம் லேசா அரிக்கிற மாதிரி இருக்கும்..
கீழ தரையில கல்லு ..ண்டில குத்தும் நவுல முடியாது நவுண்டா எய்யா ஒழுங்கா உக்காருதய்யா என்ன காத்த வெட்டிருவன்னு செல்லையா தாத்தா சொல்லுவார்.. முடி வெட்டிட்டு வீட்டுக்கு வந்தா தாயீ (செல்வி)சிரிப்பா சிரிப்பா ..கொத்துக்கு வெட்டுறதால பங்கர கொத்தா வெட்டி வுடுவாங்க..பின்னாலயும் முன்னாலயும் புடிக்க முடி கெடைக்காது...கிட்டத்தட்ட மொட்டை போட்ட மாதிரி இருக்கும்..
இப்போலாம் வீட்டுக்கு வீடு துணி துவைக்க மெசின் வந்துடிச்சி...வெள்ளாவி ஆட்கள் இப்போதெல்லாம் இல்லை ..
வெள்ளாவில துவைச்ச துணிகளை அவிப்பாங்க அப்போ ஒரு மணம் வரும் பாருங்க ..அடடா ..
வெருவு கறி சாப்பிட்டு ஒரு வாரம் கழிச்சி இசக்கி எங்களை வீட்டுல வந்து கூட்டிட்டு போய் காட்டுனாப்ள...அண்ணன் வச்ச கூண்டுல வெருவு சிக்கிருக்குனு ..போய் பாத்தோம்...பெரிய சைஸ் கருப்பும் சாம்பலும் கலந்த பூனை .மியாவ்னு கத்திட்டிருந்துச்சி ..
Comments
Post a Comment