குடும்பனின் பார்வையில்

 2024 பாராளுமன்றத் தேர்தலில் யாருக்கு

 வாக்களிக்கப் போகிறோம்..??????

வெறுமனே நான் தொடர்ந்து இன்ன கட்சிக்குத் தான் வாக்களித்து வருகிறேன் என்ற நிலை பாட்டை மாற்றிக் கொள்வோம்....

நாட்டின் பொருளாதார வளர்ச்சி, பாதுகாப்பு, உள்கட்டமைப்பு, கிராமப்புற வளர்ச்சி, வேளாண் திட்டங்கள், அண்டை நாடுகளோடு உள்ள தொடர்புகள், சர்வதேச அளவில் இந்தியாவின் மதிப்பு போன்ற பல்வேறு காரணிகளை முன்வைத்து தேர்தலில் யார் ஆட்சிக்கு வர வேண்டும் எனத் தீர்மானிப்போம்..

கடந்த தேர்தல்களில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டவை எத்தனை சதவீதம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்..

அதிகாரத்தைத் தவறுதலாகப் பயன்படுத்தி ஊழல் செய்தவர்களை கவனத்தில் கொள்ள வேண்டும்..

நிலையான ஆட்சி!!! நேர்மையான ஆட்சி!!! 

இதுதான் முக்கியம்..

கடந்த முறை வெற்றி பெற்றவரே இந்த முறையும் வேட்பாளராக வந்தால் அவரது செயல்பாடுகளைப் பரிசீலிப்போம்..

புதுமுகம் என்றால் அவரது கொள்கை, நாடாளுமன்ற விவாதங்களில் பங்கேற்க அவருக்கு இருக்கும் திறன் ஆகியவை கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

வெறும் ஜோடிக்கப்பட்ட பொம்மைகளை நம்பி

ஏமாற வேண்டாம்.

நாட்டின் பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு உங்கள் கைகளில் தான் உள்ளன..

உங்கள் விருப்பப்படி

நாட்டின் நலனை மட்டுமே நினைவில் கொள்வோம்..

பட்டியல் வெளியேற்றம் குறித்து எந்த அரசியல் கட்சி பேசுகிறதோ அதனை ஆதரிப்போம்.

வெறுமனே கூட்டணிக் கட்சியாகப் பார்க்காமல் அல்லது சாதியச் சார்புடைய கட்சியாகப் பார்க்காமல் மத்தியில் யார் ஆட்சி அமைந்தால் பட்டியல் வெளியேற்றம் நிறைவேறும் என்ற கருத்தினடிப்படையில் வாக்குச் செலுத்துவோம்..

தென் தமிழகத்தில் நடைபெறுகிற கொலைகளை தடுக்கத் தவறியவர்கள் யார்?

தட்டிக் கேட்டவர்கள் யார்?

ஆறுதல் சொன்னவர்கள் யார்?

எதையுமே கண்டுகொள்ளாதவர்கள் யார்?

இதையெல்லாம் வாக்களிக்கு முன் கவனத்தில் கொள்வோம்..

இதுவரை

பாரிவேந்தரும், மதுரை பேரா.இராம சீனிவாசனும் தான் நமக்கு ஆதரவாக வெளிப்படையாகப் பேசியுள்ளனர்.

பாக்கி அனைவரும் வந்தால் வரவு! போனால் செலவு!! என்ற கருத்தியலில் தான் தேர்தலை அணுகுகிறார்கள்.

தேர்தலுக்கு மட்டுமாவது நம்மை ஆதரிப்பவர்களை நாமும் ஆதரிப்போம்.

தவறானவர்களை ஆதரிப்பதால் ஒரு நல்ல வேட்பாளர் தோற்றுவிடக் கூடாது என்பதையும் நாம் கவனத்தில் கொள்வோம்..

இது ஒரு சிக்கலான தேர்தல்.

மத்தியில் ஆள வாய்ப்பிருக்கிற கட்சியை அடையாளம் கண்டு அனுமானித்து ஆதரிப்பது தான் நமக்கும் நாட்டின் எதிர்காலத்திற்கும் நல்லது..

இனி உங்கள் விருப்பம்..

தவறாது வாக்களிப்போம்..

07.04.2024.

Comments

Popular posts from this blog

குடும்பனின் வரலாற்று புரிதல்

திருநெல்வேலி இரயில் நிலைய நிலைய மேம்பாட்டு பணிகள்

திருநெல்வேலி யின் இலக்கியத்தில்