குடும்பனின் பார்வையில்
✒️ தஞ்சை மாவட்டம்
களப்பால் குப்புசாமி
தேவேந்திரரின்
வீர வணக்க நாள்
ஏப். 18.🌹
கொல்கத்தாவிலிருந்து இந்தியத் தலைநகர் டில்லிக்கு மற்றப் பட்ட 1911.. இல்
தஞ்சை மாவட்டம் மன்னார்குடி ..
கோட்டூருக்கு தெற்கேயுள்ள நடுவக்களப்பால் என்ற ஊரில் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தில் பிறந்த வேளாண் சமூகப் போராளி குப்புச்சாமி என்ற
களப்பால் குப்புசாமி..
அன்றைய தஞ்சை மாவட்ட பண்ணையார்களின் அடிமைத்தனத்தின் அக்கிரமத்தை எதிர்த்து சிம்ம சொப்பனமாய் விளங்கியவர் ..
1940 களின் தஞ்சைக் கதையைச் சொன்னால்
இன்றைய கர்ணன் திரைப்படமே கதறி அழும்.
மனித சமூகத்தில் மனிதன் மனிதனுக்கே வழங்கிய நூதனமான, அருவருப்பான
கொடிய தண்டணைகள் வெட்கக்கேடானவை.
கிட்டி மாட்டலும்,
சாணிப்பால் சவுக் கடியும் அவற்றில் சில..
இன்றையத் தலைமுறையினருக்கு கிட்டி மாட்டுதல் என்றால் என்ன என்றோ சாணிப்பால் சவுக்கடி என்றால் என்ன என்றோ தெரிய வாய்ப்பில்லை.
தஞ்சை சரசுவதி மகால் நூலக முகப்பில் அக்காலத்தில் வழங்கப்பட்ட தண்டனை முறைகளை ஓவியங்களாகத் தீட்டப்பட்டிருந்ததை 1990 களில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக ஆய்வு மாணவனாக இருந்த போது பார்த்திருக்கிறேன்.
நிலத்தில் வேலை செய்யும் கூலி ஆள் ஆண்டைகளுக்கு விரோதமாக நடந்து கொண்டதாக அவதானிக்கப்பட்டால்
மாட்டுச் சாணத்தைக் கரைத்து குடிக்க வைப்பார்கள்..
உடலில் வைக்கோல் பிரியைச் சுற்றி அதில் சாணிப்பாலை ஊற்றி வெயிலில் நிற்க வைப்பதும் அது காய்ந்து உடலை இறுக்கும் போது கூலியாள் அனுபவிக்கும் துயரங்களை சித்திரவதை எனச் சொல்லலாம்..
குடிக்கக் கொடுக்கப்பட்ட சாணிப்பால் வெப்பத்தால் வேதிவினை புரிந்து வயிற்றைத் தொந்தரவு செய்வதால் துடிக்கும் காட்சியை பண்ணையார்கள் கண்டு ரசிப்பார்களாம் ...
பிராமணர், முதலியார், நாயுடு, என அனைத்து சமூக பண்ணையார்களும் கூட்டணி சேர்ந்து எம்மை கொன்றொழித்த துயர வரலாறு அது.
அப்போதைய காங்கிரஸ் கட்சி அதற்கு ஒத்துழைத்தது.
தமிழச்சமூகப் பரப்பில் எம் சமூகம் தான் அனைவருக்கும் எல்லாக் காலங்களிலும் பொது எதிரியாக கட்டமைக்க பட்டது..
சிக்கல் வேறொன்றுமல்ல..
தஞ்சையின்
மொத்த நிலப்பரப்பும்
கோயில் நிலம் (1).
பிராமணர்களின் இறையிலி நிலம் (2).
மேல்சாதியினர் இனாமாகப் பெற்ற வெள்ளான் வகை நிலம் (3).
கோயில் ஊழியர்களான ஓதுவார், நடனசிங்காரிகள், மேளகாரர்,சலவைக்காரர் ஆகியோருக்கு வழங்கப்பட்ட ஜீவித நிலம் (4).
இந்த நான் வகை நிலங்களையும் குத்தகைக்கு எடுத்தவர்கள் பண்ணையார்கள் ..
அவர்களுக்கு உழைத்தவர்கள் பண்ணையடிமைகள்..
அவர்களுக்கு நேர்ந்த கொடூரத்தை பலரும் எதிர்க்காத போது
தேவேந்திரர்கள் தான் எதிர்த்தார்கள்..
முப்பது வயதில் அநீதிக்கு எதிராக வெகுண்ட களப்பால் குப்புச் சாமி ஏழாவது ஆண்டில் 37 வயதில் குற்றவாளியாக்கப்
பட்டு திருச்சி சிறையில் அடைபட்டு 18.04.1948. ல் நஞ்சு கொடுக்கப்பட்டு வீரச்சாவெய்தினார் என்கிறது ரத்தம் தோய்ந்த துரோகச் சரித்திரம்.
ஏப்.18 ..
களப்பால் குப்புசாமி தேவேந்திரருக்கு
நினைவு தினம் இன்று ..
வெறும் கம்யூனிஸ்ட் என்று ஒதுங்கி விடாதீர்.
நாம் போற்ற மறந்த தேவேந்திரகுலத் தியாகிகளில்
களப்பால் குப்புசாமியும் ஒருவர்🙏
©️✒️ யாழி
ஏப்ரல் - 18

Comments
Post a Comment