குடும்பனின் பார்வையில்
பாராளுமன்றதில் எம் சமூகத்திற்கான உரிமைகளைப் பேசப்போவது யாரோ ⁉️
தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் நேற்று தமது அஞ்சல் வாக்குகளைச் செலுத்தினர்.
இடியாப்பநாடு மறவர் சமூகம் தேர்தலில் யாருக்கு வாக்கு என்று எடுத்த முடிவுகளை மற்ற சமூகங்களும் தமது சமூக பிரதிநிதிகளை ஆதரிக்க தொடங்கி விட்டனர்.
அதனடிப்படையில் இராமநாதபுரம் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திரு.கு.செந்தில் மள்ளருக்கு அவர் சார்ந்த சமூகம் வாக்களிக்கப் போவதாக முடிவு செய்துள்ளது..
வெற்றியை நோக்கி நகரத் தொடங்கி விட்டனர்..
நாம் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை மற்றவர்கள் தான் தீர்மானிக்கிறார்கள்..
இது கூட ஒரு வேடிக்கையான அரசியல் தான்.
இதுவரை இலவசமாக இலக்கில்லாமல் வாக்குச் செலுத்தி வந்த சமூகம் இன்று எங்கள் வாக்கு எங்கள் சமூகத்திற்கே என முழக்கமிட வைத்து அதன்படி செயல்பட வைத்துள்ளது..
ஒரு தொகுதியில் கூட்டத்திற்குக் கூட்டி வந்த மக்களுக்கு 200 ரூபாய் பட்டுவாடா செய்கிறார்கள்.
இன்னொரு கூட்டத்தில் தலா 50 ரூபாய் வழங்குகிறார்கள்.
இதெல்லாம் கற்பனையல்ல ஊடகங்கள் காட்டும் காட்சிகள் தான்.
நோக்கமில்லாமல் வாக்களிக்காதீர்.
பணத்திற்கு வாக்களிக்காதீர்.
நீலகிரித் தொகுதில் உள்ள மலைவாழ் மக்கள் வசிக்கும் கிராமம் ஒன்றுக்கு இதுவரை யாரும் வாக்குக் கேட்டே செல்லவில்லையாம்..
எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் இருக்கிறது.
விதவிதமான வடிவங்களில் குடிசைகளைக் காண நேருகிறது.
வெயிலும், மழையும், குளிரும் வனவிலங்குகளும் தான்
அந்தக் குடிசைகளுக்கு எதிரிகள்..
தேர்தலன்று வந்து வாக்களிக்க வாகனங்களில் ஏற்றிப் போவார்கள்.
தேர்தல் முடிந்து ஒன்பது கி.மீ. நாங்களே நடந்து வரவேண்டும்.
வரும் போது இருட்டில் தான் வருவோம் என்ற அந்த மக்களின் வருத்தத்தை எந்த அரசியல் கட்சியும் கண்டு கொள்ளவில்லை.
சிவகங்கை, மதுரை போன்ற தொகுதிகளில் வேட்பாளர்களோடு மக்கள் மல்லுக்கு நிற்பதைப் பார்க்க முடிகிறது.
நீலகிரி மலைவாழ் மக்களுக்கு அந்த வாய்ப்பும் இல்லை ஏனென்றால் அவர்களை நோக்கி எந்த வேட்பாளரும் செல்லவில்லை.
இந்தத் தேர்தலில் தான் ஒரு வினோதமான புதிய அணுகுமுறையைப் பார்க்கிறோம்..
ஒரு தரப்பு பிரதம வேட்பாளர் யார் என்று சொல்லிவிட்டார்கள்.
இன்னொரு தரப்பு அதை இன்னமும் கூடச் சொல்லவில்லை..
ஆனால் பாராளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கப் போகிறார்கள் மக்கள்.
இதற்கிடையே
பாராளுமன்றதில் எம் சமூகத்திற்கான உரிமைகளை/பிரச்சனைகளைப் பேசப்போவது யாரோ⁉️
வருத்தம் தான் மிஞ்சுகிறது..
©️✒️மடைக் குடும்பர்..
08.04.2024.
Comments
Post a Comment