குடும்பனின் கதை கேட்டலில்
✒️இப்படியாப்பட்ட "சின்னம்'மா' இருக்கு
பெரியம்'மா'வைக் காணோம்" ங்கிற
கதைகளை இப்போதெல்லாம்
கேட்க முடியவில்லை.
எல்லாரும் செல்போன்களில் சண்டை யடிக்கிறார்கள்..
துப்பாக்கிச் சூடு நடத்துகிறார்கள்.
ஜீன்-04/2024 க்கு முன்பே யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என யூசிக்கிறவர்களை நம்பித் தொலைக்கிறோம்.
சித்திரை மாதம் மதியம் வேளைகளில்
மரத்து நிழலில் அமர்ந்து புளிக் குத்தும் கிழவிகள் பழங்கதைகள் சொல்வார்கள்..
வேப்பம்பழம் பொறுக்கிக் கொண்டே அதைப் பிதுக்கிக் கொண்டே பழமொழிகளும் விடுகதைகளையும் சொல்லுவார்கள்.
அங்கொன்றும் இங்கொன்றுமாக காமம் பற்றிய சங்கதிகள் இருக்கும்..
"நூறு குழிய விற்று ஒரு குழிய வாங்குனானாம் "
அது என்ன என்று ஒரு கிழவி என்னைக் கேட்டாள்.. அதன் விடை தெரிய எனக்குப் பல ஆண்டுகள் ஆகின.
மாலை வேளைகளில் வீட்டுத் திண்ணைகளில் அமர்ந்தபடி பெண்கள் கதை சொல்லுவார்கள்..
பெரும்பாலும் ஆண்களை விடப் பெண்கள் தான் கதைகளை அதிகம் சொல்லுவார்கள்..
வாழ்க்கையின் எல்லாத் தருணங்களிலும் பெண்களே அதிக அளவில் ஈடுபடுகின்றனர்.
ஒரு துக்க வீட்டில் பிணத்துக்கு அருகில் இருந்து அழும்போது கூட உயிரோடிருக்கும் போது அவரது செயல்பாடுகளைப் தமது ஒப்பாரியால் ஒப்படைக்கிறார்..
கடல் வத்தும் கடல்வத்தும்னு நெனச்சி கொக்கு குடல்வத்திச் செத்திச்சாம் " ....
என்றொரு பழமொழி.
இதில் ஒரு பெண் தமது பொருந்தாக் காதலுக்கான செய்தியைச் சொல்லுகிறாள்..
பள்ளிகள் கூரைக் கொட்டகையில் நடைபெற்ற காலங்களில் நாமெல்லாம் அறிந்த கதை எலி கூரைக்குள் நுழைந்த கதை..
இப்போது அந்தக் கதைகளைக் காணோம்.
பாட்டி வடை சுட்ட கதை ...
குரங்கு அப்பத்தைப் பங்கிட்ட கதை..
காகம் தமது தாகத்தைத் தீர்க்க சீசாவின் அடியில் கிடந்த நீரை மேலே கொண்டு வர கற்களைக் கொண்டு நிரப்பிய கதை...
ஆமையிடம் முயல் ஏமாந்த கதை எனப் பல கதைகள் பள்ளிப் பருவத்தில் பாடநூல்களில் இடம் பெற்றிருந்தன.
இப்போது AI என்ற செயற்கை நுண்ணறிவுத் துறை வந்து விட்டது..
அனேகருக்கு வேலை வாய்ப்புப் பறிபோகும் அபாயம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது..
மனித மனங்களுக்கு கதைகள் ஆறுதல் தந்தன.
புத்திமதிகளும், அறக்கோட்பாடுகளும் தந்தன.
உலகிலேயே மிக நீண்ட கதைகளையும் இராமாயானம், மகாபாரதம்...
மிகச்சிறிய கதைகளையும் "ஒரு ஊருல நரியாம் அத்தோட அந்தக் கதை சரியாம் ...
என்று கதை சொன்னது நாம் தான்..
காகம் தாகம் தீர்த்தகதை வெளிநாட்டிலிருந்து வந்த கதை என்கிறார்கள்..
இப்படியாக இன்று வந்துள்ளது "சின்னம்'மா' இருக்கு பெரியம்'மா'வைக் காணோம்" என்கிற கதை.
கதை சொல்ல வைத்த தம்பி கனகராஜ் குடும்பருக்கு நன்றி..
யாழி வாசகர் தளத்தில் கதைக்கலாம் வாங்க ..
உங்களுக்குத் தெரிந்த கதைகளைக் கூறுங்கள் கேட்டு ரசிப்போம்..
பல தளங்களில் முரண்பாடுகள் தான் நடக்கின்றன.
கதைகள் முரண்களைப் போக்கும்.
சிந்திக்கத் தூண்டும்.
நன்றி.
©️✒️ யாழி
22.04.2024.
Comments
Post a Comment