குடும்பனின் பார்வையில்

 பாண்டியர் குல சுந்தரன் வழுதி வகையறா  வஜ்ராயுத வழிபாடு : 





இந்திரனை நேரடியாக குல தெய்வமாக கொண்டு வஜ்ரயுத வழிபாடு நடத்தி வரும் தேவேந்திரர்கள்....,,!

 இடம் அருப்புக்கோட்டை வட்டம் பரளச்சி கிராமம் , விருதுநகர் மாவட்டம்...!


🪷🪷🪷ஓம் கரிய நாதனே போற்றி ஓம்...  

ஓம் கரிய சித்தி நாயகியே போற்றி ஓம்...🙏🏾🙏🏾🙏🏾


நாம் எப்படி நால் வேதங்களும் போற்றிய மூவேந்தர்களும் வணங்கிய , அரச வம்சதார் மட்டுமே வணங்கிய இந்திரனை  வழிவழியாக குலதெய்வமாக வணங்கி வருகிறோம். 


மற்ற கிராமங்களில் மரத்தில் கண்டது, நிலத்தில் கண்டது, மருளாடி சொன்னது என்று முனிகளும், கருப்புகளும்,  ஊர் பெயரிலும் இட பெயரிலும் மரத்தின் பெயரிலும் சிறு தெய்வங்களை காரண பெயர்களில் வணங்கி வரும் போதும்  பல பேருக்கு சரியான குல தெய்வம் என்ன என்று தெரியாத போதும் நாம் ஏன் *தேவலோக ராஜனை சொர்க்கத்தின் அதிபதியை* ஒரு பெருந்தெய்வத்தை குல தெய்வமாக கொண்டோம். போர் வெற்றிக்காக நடத்தப்படும் *வஜ்ராயுத வழிபாட்டை* ஏன் நாம் கடைபிடித்து வருகிறோம் *ஏன்..?* அப்படியானால் இம்மக்கள் *யார்..?* 


நமது வம்சத்தில் சுமார் 400 வருடங்களுக்கு முன்பு பாண்டியர் படையில் *"சுந்தரன் வழுதி"* என்பவர்  *படை ஐயன்* (படை ஐயர்) எனும் உயர் பதவியில் இருந்திருக்கிறார்.  அதாவது படைக்கு பயிற்சி கொடுப்பது, ஆலோசனை சொல்வது போன்ற வழி நடத்தும் உயரிய பொறுப்பாக இருக்கலாம். Backend leader 


அவர் தனது 40 வது வயதில் உலக  வாழ்வில் பற்றற்று முற்றும் துறந்து தவ வாழ்க்கையில் ஈடுபட்டு பின் மேற்கு மலையில் *ஜல சமாதி* நிலை அடைந்து ஜீவ முக்தி அடைகிறார். 


பின் அதே வம்சத்தில் *இருளான்டிக் குடும்பன்* மகன் ( பெயர் தேடலில் உள்ளது) முஷ்டக்குறிச்சியில் பிறந்து முருகன் மீது தீராத பக்தியில் தனது 14 வது வயதில்    சாதுக்களாக செந்தில் நாதன்( திருச்செந்தூர்) கடலில் *ஜல சமாதி நிலை* அடைந்து ஜீவ முக்தி அடைகிறார்.  


அதன் பின் *வீரபத்திரக்குடும்பன்*  தன் வாழ் நாள் முழுவதும் சைவமாகவே இருந்து. ஊரில் கறி, மீன் சேர்க்கும் நாட்களில் ஊருக்குள் வராமல் வெளியில் தோட்டத்தில் தங்கியும், வீட்டில் அவருக்கென்று தனியாகவே சமைத்தும் அந்த பண்ட பாத்திரங்களை வேறு யாரும் புலங்காமலும் இருந்திருக்கிறார்கள், வாழ் நாள் முழுவதும் *தேவார பாடல்* பாடியே திருச்செந்தூர் முருகன் மீது தீராத பக்தியோடும் வீட்டில் மயில்கள் வளர்த்தும் பட்சிகளுக்கு இறையிட்டும் வாழ்ந்திருக்கிறார்.

இவைகள் எல்லாம் தானாகவே indution power- ராகவே நடந்திருக்கிறது.


 *குறிப்பு - இருளப் பசாமியும் ஆழி(நீர்) பிறப்பு அந்தி வானம் என்றே கூறுவதன் அர்த்தம்.....* 


இந்த பிறப்பறுக்கும் முக்தி நிலையானது  நம் பரம்பரையில் 2-3 தலைமுறைக்கு ஒருமுறை ஒருவர் அது போன்ற கிரக அமைப்பில் பிறந்திருக்கிரார்கள். 


பரளச்சி ஊர் பெயர் காரணம் 

 *பரள்* - என்பது சிதறிய முத்துக்கள், விதைகள் என்று பொருள்,  


நமது இருளப்பனுக்கு பிடித்த தண்டை ஆட்டம் நடந்திருக்கிறது. எனது யூகத்தில் ஒரு கால் தண்டையாக ( பெருந்தன்டை- கால் சிலம்பு), காற் சிலம்பில் சிறு முத்து பரல்களே இருக்கிறது.   


*குறிப்பு கண்ணகி கோவலன் கதையில் பாண்டியன் காற்சிலம்பில் இருந்தது முத்து பரல் என்றும் கண்ணகியின் சிலம்பில் இருந்தது மாணிக்க பறல் என்றும் அறிவோம்* . அப்படியாகவே இந்த *பரல்* என்பதற்கான அர்த்தம் தெரிகிறது.


ஆக இந்த ஊரின் தோற்றம் என்பது இருளப்பசாமி கோவிலோடும், 

 *சுந்தரன் வழுதி* பரம்பரையோடும்  தொடர்புடையதாக இருக்கிறது. 


சுந்தரன் வழுதி காலத்திற்கு பிறகு மதுரையில் இருந்து விஜயநகர அரசின் தெற்கு நோக்கிய படையெடுப்பில்  அதாவது *மதுரை, காரியாபட்டி, விருதுநகர், அருப்புக்கோட்டை , சாத்தூர், கோவில் பட்டி* வழியாக தென்காசி நோக்கி சென்றபொழுது இவர்கள் ஏதோ ஒரு வகையில் தான் இருந்த இடத்தில் இருந்து பாதிக்கப்பட்டு சிதறி மேற்கு நோக்கி வந்து  சுந்தரன் வழுதி வகையறாக்களும் அவரது படைவீரர்களும் *பரளச்சியை* உருவாக்கி இருக்கலாம்.  


ஏனென்றால் *தெலுங்கு மற்றும் கன்னட* மக்கள் *அருப்புக்கோட்டை , கமுதி எல்லையை தாண்டி கிழக்கே அறவே குடிபெயரவில்லை* என்பது அவர்கள் இல்லாமல் இருப்பதிலிருந்தே தெரிகிறது.


 இவ்வூரில் இருந்தே *இருளப்பசாமியை குல தெய்வமாக கொண்ட சில குடும்பங்கள் முஷ்டக்குறிச்சி,  நாகலாபுரம்-ஓயாம்பட்டி, காந்த சாமிபுரம்* போன்ற ஊர்களுக்கு குடிபெயர்ந்து இருக்கிறார்கள்.  


மற்ற சிறு தெய்வங்களுக்கு போல அல்லாம். சிவன், விஷ்ணு போன்று இங்கு  சங்கு நாதம் எழுப்பிய வழிபட வேண்டும்.


நாம் இப்படி பட்ட குலதெய்வத்தை முறையாக வழி படாமல் விட்டதன் விளைவு *பூர்வபுண்ணியம் பாதிக்கப்பட்டும் ஆண்வாரிசுகள் தலைக்காமல் போவது , அனைவரும் சனி கர்மாவில் பாதிக்கப்பட்டு , சனி+ செவ்வாய்* சேர்க்கையில்  ஆளாகி இருக்கிறார்கள்.


 *ஆனால் நாம் இது வரை இந்த தகவல் அறியாமலும் சுந்தரன் வழுதியை  ஆவணபடுதமலும் இருக்கிறோம்.*   


அவர் ஒரு பேரரசில்  உயர் பொறுப்பில் வரலாற்று சிறப்பை  படைத்து ஜீவ ஆத்மாவாக  இருக்கிறார்.


அது போல தற்போது நம்மில் ஒருவர் இந்திய ராணுவத்தில் field Marshal ,major general, liuetenant , Colonel, போன்ற பொறுப்புக்கு வர இன்னும் எத்தனை தலைமுறை ஆகும்..!!!!


 *தகவல்* - சுந்தரன் வழுதி வகையறா

 முஷ்டக்குறிச்சி


#erumporum #pandiyar #தேவேந்திரகுலவேளாளர்

#விருதுநகர்

Comments

Popular posts from this blog

குடும்பனின் வரலாற்று புரிதல்

திருநெல்வேலி இரயில் நிலைய நிலைய மேம்பாட்டு பணிகள்

திருநெல்வேலி யின் இலக்கியத்தில்