குடும்பனின் பார்வையில்

 ✒️செப்-11.


ஒடுக்குதலை நொறுக்கிய நாள்....



தென் தமிழகத்தில் அடக்குமுறைக்கு எதிராக தியாகி இமானுவேல் சேகரனார் சிந்திய இரத்தம் இன்று ஒட்டுமொத்த சமூகத்தையே உயிர்ப்புடன் வீறு கொள்ளச் செய்துள்ளது..


இமானுவேல் சேகரனார் சராசரி மனிதனைப் போல் சகமனிதனுக்கு நேர்ந்த அவமானங்களைக் கண்டும் காணாமல் கடந்து போயிருந்தால் 

இன்றைய நினைவேந்தல் இவ்வளவு சிறப்பைப் பெற்றிருக்காது.


உலக மானுட வரலாற்றில் எல்லா வரலாற்றுப் பதிவுகளையும் விட இமானுவேல் சேகரனாரின் அழித்தொழிப்பு வரலாறுதான் அதிக மக்களால் பேசப்படுகிறது..


அறுபத்தேழு ஆண்டுகளுக்கு முன்பு அணைந்த நெருப்பு திரும்பத் தீயாய் மலர்ந்திருக்கிறது..


தீ மலருமா⁉️

ஆம் மலரும்..


மானுட அறத்தைக் கொண்டாடக் கொண்டாட தீ மலரும்..


அது ஒரு மகத்தான மாற்றம்...


காணாமல் விலகி இருந்தவர்கள், கலந்து கொள்ளாமல் விலகி நின்றவர்கள் இப்போது அஞ்சலியில் பங்கேற்கிறார்கள் என்றால் வரலாற்றை வாசித்துத் தெளிந்துள்ளார்கள் என்று பொருள்..


இது ஒரு பாடத்தை நமக்குச் சொல்கிறது.


சமூகப் புரட்சியாளர்களைக் கொண்டாடியபடியே இருந்தால்  எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள் என்பது தான் அது.


ஆண்டுதோறும் கொண்டாடிவிட்டுப் போவதால் மட்டும் நமக்கான அங்கீகாரம் கிடைத்துவிடாது.


இமானுவேல் சேகரனாரின் தியாகத்தை நாம் எந்த அளவிற்கு ஏற்றுக் கொள்கிறோம்.


அவர் யாருக்காகத் தம் உயிரை இழந்தார்.


இப்படியான கேள்விகளை நாம் நம் சந்ததியினரிடத்தில் பேசத் துணிவோம்..


பழைய வரலாற்றைப் பேசுவதன் மூலமாக வளரும் தலைமுறையினருக்குப் புதிய வாழ்வியல் வழியைக் காட்டுவோம்..



🌷அச்சுறுத்தலுக்கு அஞ்சாதே...


🌹துணிய வேண்டிய இடத்தில் பணியாதே...


🌷பேச வேண்டிய இடத்தில் அமைதியாய் இருக்காதே...


இவைதான் தியாகியார் ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் தந்து விட்டுப் போன துணிச்சலான தத்துவங்கள்.


மேற்கண்ட தத்துவங்களை அனைவரும் ஏற்றுக் கொண்டதால் தான் செப்.11 உலகளவில் கொண்டாடப்படுகிறது.


வாழ்க தியாகியார் புகழ்.


©️✒️ யாழி

செப்.11/ 2024

Comments

Popular posts from this blog

குடும்பனின் வரலாற்று புரிதல்

திருநெல்வேலி இரயில் நிலைய நிலைய மேம்பாட்டு பணிகள்

திருநெல்வேலி யின் இலக்கியத்தில்