குடும்பனின் பார்வையில்
திருநெல்வேலி தினம் என கொண்டாட படுவது குறித்து
அந்த நேரத்தில் ஒன்றுபட்ட திருநெல்வேலி மாவட்டத்தில்
தூத்துக்குடி இணைக்கப்படவில்லை காரணம் என்னவென்றால்
12ஆம் நூற்றாண்டிலிருந்தே தூத்துக்குடி பகுதிகள் நீண்ட கடற்கரை வணிகப்பகுதிகளாக
கொற்கை பட்டினம் , குலசேகரப்பட்டினம் , காயல்பட்டினம், வீரபாண்டியபட்டினம், புன்னக்காயல்,
பழைய காயல் ஆகிய துறைமுகப் பகுதிகள் வணிக கேந்திரமாக விளங்கி உள்ளன.
அதன் காரணமாக சீனர்கள், அரேபியர்கள், பாரசீகத்தினர்கள் இந்தியர்களுக்கிடையே பண்டமாற்று வணிகம் நடைபெற்று ஏற்றுமதியும் இறக்குமதியும் செழிப்பாக இருந்தது
பின்னர் ஐரோப்பியர் காலுன்றவும்
முதலில்15 ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசியர்கள் ஆளுகைக்கு வந்தது , பின்னர் டச்சுக்காரர்களும் , பிரெஞ்சுக்காரர்களும் தூத்துக்குடி பகுதியை கைப்பற்றினார்கள்
அப்போதெல்லாம் தூத்துக்குடியும்,இலங்கையும் ஒரே ஆளுகைக்கு கீழே இருந்தது !
போர்த்துகீசியர்களின் ஆட்சியில் கீழமை நீதிமன்றங்கள் தூத்துக்குடியிலும் குற்றவாளிகளுக்கு சிறைச்சாலை கோவாவிலும் ,மேல் முறையீட்டு நீதிமன்றங்கள் கோவாவிலும் தண்டனை விதிக்கப்பட்ட விசாரணை கைதிகள் தூத்துக்குடியிலும் அடைக்கப்பட்டிருந்தார்கள் !
15ஆம் நூற்றாண்டின் மத்திய பகுதியில்தான் புதிதாக வணிகம் செய்ய
பிரிட்டன் வெள்ளையர்கள் முதலில் சென்னையிலும் தூத்துக்குடியிலும் கிழக்கிந்திய கம்பெனியை ஆரம்பித்தார்கள் !
வியாபாரம் போட்டியின் காரணமாக பிரிட்டீஸாரிடம் முதலில் டச்சுக்காரர்கள் போரிட்டார்கள்
போரில் அவர்கள் விரட்டியடிக்கப்பட்டு நாகப்பட்டினம் ஓடிவிட்டார்கள் !
அதில் தூத்துக்குடியும் இலங்கையும் பிரிட்டன் ஆதிக்கத்தின் கீழ் வந்தது
மீண்டும் ஒருமுறை போர் !
போர்த்துகீசியர்கள் கை ஓங்கி யிருந்த காலம் !
எனவே பிரெஞ்சுக் காரர்களும் பிரிட்டீஸாரும் ஒன்று சேர்ந்து போர்த்துகீசியர்களை தோற்கடித்தார்கள் !
போர்த்துக்கீசியர்கள் போரில் தோற்று கோவா ஓடிவிட்டனர்
அதற்குப் பின்னர் எஞ்சியிருந்தது பிரிட்டனும் , பிரஞ்சும் ஆகும் !
காலப்போக்கில் அவர்களுக்கிடையே வணிகப் போட்டியில் பிரெஞ்ச் தோற்கடிக்கப்பட்டது !
ஆயினும் அவர்களுக்குள் சமாதான உடன்படிக்கை ஏற்பட்டது !
கடற்கரை எல்லைகளை அவர்கள் பிரித்துக் கொண்டார்கள். தூத்துக்குடியும் இலங்கையும் பிரிட்டிஷ் கைவசம் சென்றது
காரைக்கால் புதுச்சேரி கடலூர் பிரெஞ்சு வசம் சென்றது !
பிரிட்டனுக்கு ஒரு சில குறுநில மன்னர்கள் வரி வசூலிக்கும் தண்டல் காரர்களாக செயல்பட்டார்கள்
ஸ்ரீவைகுண்டம் ஓட்டப்பிடாரம் ஆகியவைகள் முக்கியமான கேந்திரங்களாக கருதப்பட்டு நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் உருவாக்கப்பட்டன
நிலச்சீர்திருத்தம் செய்ய முறப்பநாட்டில் ( வல்லநாடு அருகே ) Centre point! . சப் ரிஜிஸ்தர் ஆபீஸ் உருவாக்கப்பட்டது!
அதற்குப் பிறகுதான் பிரிட்டிஷாரின் ஆளுகைகள் விஸ்தரிக்கப்பட்டு
ஆளுகைகளுக்கு மத்திய புள்ளியாக Centre point திருநெல்வேலியில் East India company establish செய்யப்பட்டது !
அப்பொழுது வெள்ளைக்காரர்கள் சென்னையை மட்டும் பட்டினம் என்றார்கள்
ஆனால் திருநெல்வேலி சீமை, மதுரை சீமை , திருச்சி சீமை , தஞ்சாவூர் சீமை , வேலூர் சீமை என அழைக்கப்பட்டு அதற்கு வரி வசூல் செய்ய கலெக்டர்கள் நியமிக்கப்பட்டார்கள் !
அதுதான் செப் 1/1790 ஆகும் !
--------++++++++++++----------------------
*செப்டம்பர் 1ம் தேதி திருநெல்வேலி தினம் என சிலர் இணையதளங்களில் கொண்டாடும் கொடுமையை என்னவென்று சொல்வது ?*
பிரிட்டிஷ் கிறிஸ்தவ காலாணியாதிக்க அடிமைதனத்தில் இருந்து சிலர் மீண்டுவரவில்லை என்பதன் வெளிப்பாடே இத்தகைய கொண்டாட்டம்
*தன்னுடைய பாரம்பரிய வரலாற்றை பெருமையை மறந்து பேசும் மக்களை என்ன சொல்வதென்றே தெரியவில்லை*
1790ம் ஆண்டு செப்டம்பர் 1ம்தேதி பிரிட்டிஷ் கிறிஸ்தவர்கள் ஆட்சியில் திருநெல்வேலி மாவட்டம் உருவாக்கப்பட்டதாம் அதனால் 234 வது ஆண்டு கொண்டாட்டமாம்
என்ன விதமான சிந்தனை இது.
*அதற்கு முன் திருநெல்வேலி கிடையதா ? அல்லது
பிரிட்டிஷ் உருவாக்கிய திருநெல்வேலி தான் இப்போதும் இருக்கிறதா?*
1400 ஆண்டுகளுக்கு முன்பே சுவாமி நெல்லையப்பருக்கு தேவாரம் இயற்றிய திருஞானசம்பந்தர்
"திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி"
என 11 பாடல்களை இயற்றியுள்ளார்.
பிரிட்டிஷ் கிறிஸ்தவர்கள் இந்தியாவை அடிமைப்படுத்த நுழைவற்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே திருநெல்வேலி என பெயர் சூட்டி பாடியவர் திருஞானசம்பந்தர்
வேதபட்டர் என்பவர் மிகுந்த சிவபக்தராகத் திகழ்ந்தார். சதாசர்வ காலமும் சிவனையே நினைத்து வணங்கி பூஜித்துக் கொண்டிருந்தார். தங்கத்தை உரசிப் பார்ப்பது போல், வேதபட்டரின் உண்மையான பக்தியை சோதித்துப் பார்க்க திருவுளம் கொண்டார் சிவனார்.
சிவபெருமானுக்கு நைவேத்தியம் செய்வதற்கு தினமும் வீடுவீடாகச் சென்று நெல் சேகரிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார் வேதபட்டர்.
அப்படி சேகரித்த நெல்மணிகளையெல்லாம் வெயிலில் உலரப் போடுவது வேதபட்டரின் வழக்கம். அப்படித்தான் அன்றைக்கும் வீடுவீடாகச் சென்று சேகரித்த நெல்மணிகளையெல்லாம் வெயிலில் உலரப் போட்டிருந்தார். பிறகு ஆற்றில் குளிப்பதற்காகச் சென்றார்.
அந்தசமயத்தில் பெய்யத் தொடங்கியது மழை. வெளுத்து வாங்கிய மழையைக் கண்டு அதிர்ந்து கலங்கினார் வேதபட்டர். ‘அடடா... நெல்லெல்லாம் உலர்த்திவிட்டு வந்தோமே. இப்போது மழையில் அவை நனைந்துவிடுமே...’ என்று பதறிய வேதபட்டர், ஓட்டமும் நடையுமாக வந்தார்.
மூச்சிரைக்க ஓடிவந்தவர், அங்கே நிகழ்ந்த அதிசயத்தைக் கண்டு பிரமித்துப் போனார்.
அங்கே... எல்லா இடங்களிலும் மழை பெய்து கொண்டிருந்தது. பூமியே நனைந்துகொண்டிருந்தது.
ஆனால், மழை நீரால் நெல்மணிகள் கொண்டு செல்லமுடியாதபடி, ஒரு வேலி போடப்பட்டிருப்பதையும் அங்கே மட்டும் மழை இல்லாமல், வெயில் அடித்தபடி இருந்ததையும் கண்டு அதிசயித்துப் போனார் வேதபட்டர்.
நெல்லுக்கு வேலியிட்டு காத்தருளியது ஈசனே என உணர்ந்து நெடுஞ்சாண்கிடையாக நெல்வேலியைப் பார்த்து வணங்கி பூரித்தார். ‘எம் சிவனே எம் சிவனே’ என்று அரற்றிக் கதறினார்.
நெல்லுக்கு வேலியிட்ட சிவபெருமான் குடிகொண்டிருக்கும் அந்தத் தலம் நெல்வேலி என்றும் "திரு" மரியாதை அடைமொழியோடு திருநெல்வேலி என்றும் சுவாமிக்கு நெல்லையப்பர் என்றும் திருநாமங்கள் அமைந்தன
*ஒவ்வொரு ஆண்டும் நெல்லையப்பர் திருக்கோவிலில் தை மாதம் நடைபெறும் தைப்பூச திருநாள் 4ம் திருநாளில் நெல்லுக்கு வேலியிட்ட திருநாள் கொண்டாடப்படுகிறது. அதுவே உண்மையான Happy birthday Tirunelveli.*
1790ல் பிரிட்டிஷ் கிறிஸ்தவன் உருவாக்கியதாக சொல்லப்படும் நெல்லை மாவட்டம் தற்போது விருதுநகர் மாவட்டத்தில் ஒரு பாதி குமரி மாவட்டத்தில் சில பகுதி தூத்துக்குடி மாவட்டம் தென்காசி மாவட்டம் என சிதைந்து போனது அதை கொண்டாடுவது எப்படி அறிவுள்ளதாக அமையும்.
*நெல்லுக்கு வேலியிட்ட நாளே திருநெல்வேலி பிறந்தநாள்.*
நெல்லையப்பர் கோவிலில் தைமாதம் நடைபெறும் தைப்பூச திருவிழா 4ம் நாளில் நெல்லுக்கு வேலியிட்ட விழாவில் நெல்லையப்பரை சென்று வழிபட்டு திருநெல்வேலி பிறந்தநாளை கொண்டாடுவோம்
அவ்வளவுதான்.
Comments
Post a Comment