குடும்பனின் பார்வையில்
✒️..ம்ம்பாஆ...
...ம்ம்பாஆ....
பாறைக் கற்களின் உச்சியில் நின்று கண்ணுக்கெட்டிய தூரம் வரை விழியைப் பாய்ச்சி அடிவயிற்றை இறுக்கிப் பிடித்து தொண்டை கிழியக் கத்தும் சிவனணைந்தான்..
இப்படித்தான் தொடங்குகிறது ..
"வாழை" திரைப்படம்.
அது திரைப்படம் அல்ல.
வாழை தார் சுமக்கும் தொழிலாளிகளின் துயரம் நிறைந்த வாழ்க்கை.
உலகத் திரைப்பட வரலாற்றையே ஒரு கணம் மறுபார்வைக்கு ஆட்படுத்தியிருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ்.
எனக்கு ரொம்பப் பிடித்தது காட்சிகளை படம்பிடித்த வினோதம் தான்..
கதை நிகழ்ந்த காலத்தில் எதெல்லாம் எப்படி இருந்ததோ அதே நிலையில் படமாக்கியிருக்கிறார்.
ஆசிரியை பயன்படுத்தும் ஊதா நிற ரெனால்டு பேனா...
அந்தக் காலத்தில் அதுதான் பெருவழக்கில் இருந்தது..
அப்போது புழக்கத்திலிருந்து அதே ரூபாய் நோட்டுகள் ...
மாடு கட்டும் போது போது போடும் உருவாஞ் சுருக்கு...
எல்லாவற்றையும் விட ரைஸ்மில்லில் அரசி அரைத்து சாக்கின் அடியில் அரிசியை வைத்துக் கட்டி பிறகு மிஞ்சும் மேல் பகுதியில் தவிட்டை கொட்டிக் கட்டும் விதம் அழகாக தத்ரூபமாகப் படமாக்கப்பட்டிருந்தது.
சிவனணைந்தானின் நடிப்பை இனி எவராலும் ஈடு செய்ய இயலாது.
அம்மாவின் வருத்தத்தை சரி செய்ய அவன் அழுது துடிக்கும் காட்சி தான் திரைப்படத்தின் உச்சம்.
தான் நேசித்த மாடு விற்று கைமாறி வண்டியில் ஏற்றிச் செல்லும்போது அவன் துடிக்கும் துடிப்பும் அவனுக்குள் நேரும் துயரமும் ...
எழுத முடியாதவை...
ஏழை விவசாயக் கூலிகள் எவ்வளவு வறுமையிலும் நேர்மை தவறாதவர்கள் என்பதைத் தீர்க்கமாகச் சொல்கிறது படம்.
எந்தப் படத்திலும் இப்படியான ஒரு காதலைப் பார்த்ததே இல்லை.
வெறும் பார்வையோடு எல்லாமும் முடிந்து போகிறது.
சேகரின் அம்மாவாக நடித்தவரைப் பாராட்டியே ஆக வேண்டும்.
படம் முழுக்க பச்சைப் பசேல் என்ற இயற்கைக் காட்சிகள் மனதுக்கு இதமாகிறது..
லாரி விபத்து தத்ரூபமாகப் படமாக்கப்பட்டிருக்கிறது..
குழந்தைகள், பெண்கள் எனக் குடும்பமாகச் சென்று பார்க்க வேண்டிய படம் வாழை.
©️✒️ யாழி
11.09.2024.
Comments
Post a Comment