குடும்பனின் வலியில்

 ஆசிரியரின் அறைக்கும்

அடி நீளமுள்ள பிரம்புக்கும்

ஆளாகாத ஆளுமைகள் உண்டோ



அன்பையும்

அதட்டலையும் 

அளவில்லாமல் தந்து

வீட்டுப்பாடம் எழுதாத

வீங்கிய கைகளுக்கு

மஞ்சள் பத்து போட்டாலும்

"அடிங்க சாரு"னு

சொன்ன அப்பனுங்க 

இருந்த காலம் -

வரமா இருந்தது

வாலிப வயசை கடக்க


அறிவியலும்

(அ)நாகரீகமும்

வளர வளர......

முணுக்குன்னா 

ஆசிரியரையே அடிக்கப்போகும் 

இந்தக்காலம்......


நமக்கு ஏண்டா வம்பு?

வாங்குற சம்பளத்துக்கு

போயிட்டு வந்தமா !!!!!!

எக்கேடு கெட்டா

நமக்கென்ன !!????  என

ஒதுங்கியே போற கலிகாலம்


அஞ்சு பைசாவுக்கு 

பிரயோஜனம் இல்லாத

அசோக்நகர்

அரசு மேல்நிலை பள்ளி விவகாரம் 

எவனோ சங்கெடுத்து 

ஊதிட்டான்...

நாமே ஊதினா என்னனு ஊதிய

 அரசியல் ஊறுகாய் ஆன தலைமை ஆசிரியர்


பஜனை செய்த தம்பி

"பாவம் செய்தால்

மறுபிறவி 

துன்பம் தரும்" என சொல்லிய விதம்

மாற்றுத்திறனாளி

ஆசிரியரின்

மனதை வாட்ட 

எழுந்த சிறு கணைகள் 


காட்சியாக

வலைதளத்தில் வலம்வர 

வழக்கம்போல

இந்து, சந்து , பொந்து என

அதற்கு தலைவாரி 

சீவி சிங்காரித்து 

பொட்டு வைத்து

சும்மா கிடந்த வாய்க்கு 

அவலும் வைத்தது

அரைத்து அசைபோட...


அமைச்சரோ

பக்குவம் சிறிதும் இல்லாமல் 

ஒண்டிக்கு ஒண்டி 

வாடான்னு

வசனம் பேசி

தமிழாசிரியரை 

தன் கூடவே வைத்து

ஸ்கோரிங் செய்தது

கிடைச்ச கேப்பு... 

நமக்கு வாய்ப்புனு 

அமைச்சுகிட்டாரு.


தமிழ் இலக்கியங்களின்

மேற்கோள்கள்

ஆன்மிகம் எனில்

அதை அடியோடு புறந்தள்ளி 

சினிமா பாடல்களை

புத்தகத்தில்

பதிக்கட்டும் 


ஆன்மிகம் இந்து மதத்தில் 

மட்டுமே 

இருக்கிறது

இப்படிக்கு 

ஓட்டுக்காக உருட்டும்

திராவிடம்


இவன் கவிரா 🙏🙏🙏

Comments

Popular posts from this blog

குடும்பனின் வரலாற்று புரிதல்

திருநெல்வேலி இரயில் நிலைய நிலைய மேம்பாட்டு பணிகள்

திருநெல்வேலி யின் இலக்கியத்தில்