குடும்பனின் இலக்கிய வரலாற்றில்

 [16/10, 11:02] : 

அம்மச்சார் அம்மன் - ரேணுகாதேவி வழிபாடு தமிழர்களுடையது அல்ல. வடுகர்களின் வழிபாட்டுத் தெய்வம். தாய்த் தெய்வ வழிபாட்டை ஒழித்துக் கட்டிய வரலாறு தான் பரசுராமன் கதை. பறைச்சி தலையை வெட்டி பின்பு கடவுளாக பறையர் இன மக்களால் வழிப்படும் மரபுதான் ரேணுகா தேவி வழிபாடு. தமிழர்கள் வழிபடுவது பழையோள் என்ற மூத்த தேவி வழிபாடும் கொற்றவை வழிபாடு மட்டுமே. இந்த மூத்ததேவி வழிபாடே ஆந்திராவில் சேஷ்டா தேவி என மாற்றப் பட்டு பல்லவர்களும் இதை வழிபட்டனர். கோவில் எடுத்தனர். எனவே அம்மச்சார் அம்மன் என்பது குடும்பர்களின் தெய்வமாகாது. பழையோள் வழிபாடு வளமை வழிபாட்டுடன் தொடர்புடையது என்பதால் மாடுகள் அடையும் மந்தையில் இத்தெய்வம் வைக்கப்பட்டு இருக்கும்.

[16/10, 12:39] : 

சங்க கால திணை வாழ்க்கையில் தெய்வ வழிபாடு இருக்கவில்லை. ஆனால் அணங்கு வழிபாடு இருந்தது. 

“ மந்தி சீக்கு மணங்குடை முன்றிலின்”- புறம்-247-4

என்ற பாடலில் அணங்கு கோவில் சுடுகாட்டில் இருப்பதாகத் தெரியவருகிறது.

இந்த அணங்கை வரவழைத்துப் பாடுவதுதான் வேலன் வெறியாடல். மந்தைகளில் கந்து நடப்பட்டு வணங்கப் பட்டது. அதுவும் படை எடுத்து வரும் மன்னர்கள் அதில் போர்யானையைக் கட்டிப் போட பலமான தூண்தான் எனக் கிண்டல் செய்யும் அளவுக்குத் தான் கந்து வழிபாடும் இருந்துள்ளது. 

“ கடிமரந் தடித லோம்புநின்

நெடுநல் யானைக் கந்தாற் றாவே”

- புறம்- 57-10-11

என்ற பாடலில் மதுரை இலவந்திகைப் பள்ளி துஞ்சிய நன் மாறனை காவிரிபூம்பட்டினத்துக் காரிக் கண்ணனார் என்ற புலவர் பாடும் போது பகை மன்னன் வணங்கிய “ கந்து” வை வெட்டி எடுத்துவா உன் யானைக்கு அது கட்டுத் தறியாக இருக்கட்டும் என்பதே அதன் பொருள். இதில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது கடவுள் வழிபாடு அவ்வளவு அவசியமானதாகச் சங்க காலத்தில் இருந்ததில்லை. சங்கம் மருவிய காலத்தில் தான் கடவுளர் வழிபாடு தமிழ்நாட்டில் அறிமுகமானது. அப்போது தமிழர்களின் திணைக் கோட்பாட்டு வாழ்க்கை ஒரு முடிவுக்கு வந்து விட்டதாகத் தெரிகிறது. எனவே தாய்த்தெய்வ வழிபாடு என்பது தமிழர்களிடம் பிற்காலத்தில் அறிமுகமான ஒன்றே. கந்து லிங்கமாக மாற்றம் பெற்றது. பிற்காலத்தில் கொற்றவை ஆவுடையாக்கப் பட்டு அதனுடன் இணைக்கப் பட்டது. உண்மையில் காபாலிகளின் வரைமுறையற்ற புணர்ச்சிச் செயல்களைத் தான் நாம் ஆவுடை லிங்கமாக வைத்து வழிபடுகிறோம். கடவுள் வழிபாடு அற்ற ஆசீவகத்தை அவமானப் படுத்தவே இந்த ஆவுடை லிங்கம் புகுத்தப் பட்டது. சங்க காலப் போர்முறைகள் பற்றி விரிவாகப் பேசும் புறநானூற்றில் பெருஞ்சோறு , உண்டாட்டு பற்றிப் பேசும் புலவர்கள் போருக்கு முன்பு வழிபாடு செய்ததாக பாடல்கள் இல்லை. போர்த்தெய்வமான கொற்றவை பற்றிய வர்ணனை சிலப்பதிகாரத்தில் தான் முதன் முதலில் வேட்ட்டுவ வரியில் வருகிறது. ஜைனர்களின் யட்சன் யட்சியே பின்னாளில் இயக்கியாக மயங்கியது. பெண்தெய்வ வழிபாடு எப்படி இருந்தது என்பதற்கான சங்கச் சான்றுகள் நமக்குக் கிடைக்கவில்லை. அழிந்து போன “ காடுகாள்” என்ற பரிபாடலில் ஒரு வேளை பெண்தெய்வ வழிபாடு பற்றிய குறிப்புகள் இருக்கலாம். ஆனால் அதுவும் ஒரு வானியல் பாடலே என்பது எனது துணிபு. பெண்தெய்வ வழிபாடு வளமை வரிபாட்டின் தொடர்ச்சியாக வருகிறது. தொல்மாந்தனின் தாந்ரிக வழிபாட்டின் ஒரு கூறாக இருந்த பெண் தெய்வ வழிபாடே பின்னாளில் பழையோளாகவும் பார்வதியாகவும் திருமகளாகவும் தமிழர்களிடம் பக்தி இயக்கக் காலத்தில் அறிமுகமாகி இருக்க வேண்டும். பல்வேறு இனக்குழுக்கள் தமிழகம் வந்த போது அவர்களின் சடங்கு முறைகளும் தமிழகம் வந்து சேர்ந்தன. அவை காலப் போக்கில் ஒன்றையொன்று விழுங்கி இன்றைய பெண் தெய்வ வழிபாடாக நம்மிடையே வழக்கத்தில் உள்ளது. வடுக ஆட்சிக் காலத்தில் இன்னொரு கொடுமை அரங்கேறியது. பெண்களைப் பாலியல் வன்புணர்வு செய்து கொல்வது, அல்லது பெண்ணே தற்கொலை செய்வது, ஆணவக் கொலைகள், ஆதிக்க சாதி பெண்களை எரிப்பது என்பன போன்ற பிற்போக்குத்தனத்தினால் ஏராளமான தீப்பாய்ந்த அம்மன்கள், மாரியம்மன்கள் தோற்றம் கண்டன. இறுதியாகச் சொல்ல வேண்டுமெனில் தமிழர்கள் கடவுள் வழிபாடை நடத்தாத பண்பாட்டைப் பெற்றிருந்தனர். சில சடங்குகள் இருந்ததை மறுக்கவில்லை. ஆனால் அதற்கும் இன்றைய கடவுள் வழிபாட்டிற்கும் தொடர்பில்லை. இன்னும் சொல்லப் போனால் கோவில்களில் நடத்தப்படும் வழிபாட்டு முறைகளே இந்த சடங்குகளிலிருந்து பெறப்பட்டவைகள் தாம். எப்படி கிறிஸ்வத்தில் பல மதச் சடங்குகள் இணைக்கப்பட்டனவோ அது போன்று பார்ப்பனர்கள் பல மக்கள் சடங்கு நெறிகளை கோவிலில் புகுத்தினர். எ. கா. கோவில் கொடி மரம். அது பழந்தமிழரின் கந்துவைத்தான் கோவிலில் கொடிமரமாக வைத்துள்ளார்கள். 

உரையாடுங்கள்

Comments

Popular posts from this blog

குடும்பனின் வரலாற்று புரிதல்

திருநெல்வேலி இரயில் நிலைய நிலைய மேம்பாட்டு பணிகள்

திருநெல்வேலி யின் இலக்கியத்தில்