குடும்பனின் பார்வையில்
மனசாட்சியாேடு உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இவரை போன்ற ஒருவர் மீண்டும் இச்சமூகத்தில் பிறப்பார் என்ற நம்பிக்கை எனக்கு எப்பாேதும் இருந்ததே இல்லை.
ஒரு ‘கற்பனைக்கு’ எதிர்காலத்தில்
ஒரு பேராளுமை உருவாகி, அதன் மூலம் ஒரு பெரும் மாற்றம் உருவாகிறது என வைத்து கொள்வோம். முன்பு அவர் நிகழ்த்தியதைபாேல எவராலும் இனி நிகழ்த்தமுடியாது.
யுத்த களத்துக்கான விதி ஒன்ற உண்டு .
அது பலமடங்கு எண்ணிக்கையால் மட்டுமே சாத்தியப்படும் சாதனைகளை,
ஒற்றை ஆளாய்/ குறைவான எண்ணிக்கையை கொண்டே சாதிப்பதாகும்.
பசுபதியார் எனும் ஒற்றை பெயரே
ஒரு யுத்த விதியாக ஆக செயற்பட்டது.
அந்த ‘பெயரே’ மள்ளர்களை யுத்த களத்தில் யுத்தம் செய்ய உந்து சக்தியாக இன்றும் செயற்படுகிறது.
எந்த பிரதிபலனும் பாராமல்
அதி உச்ச தியாகத்தை செய்யும் மனத்தை அவருடைய தளபதிகளான பாம் கர்ணன் முதலானவர்களுக்கும், இன்றயை தலைமுறை தளபதிகளான
தீபக் ராஜாக்களுக்கும் தந்தது.
அந்த அதி உச்ச தியாகத்திற்கான மனம் யுத்த களத்தில் சர்வசாதாரணமாக அதிசயங்களை நிகழ்த்தின.
அவரின் தளபதிகள் பு*லி*யாக பாய்ந்தற்கு, மாறுவதற்கு துணிந்ததற்கு அவர் மட்டுமே காரணம்.
மரணத்திற்கான நாள் தெரிந்தும் அவர்கள் சிரித்து கொண்டே சென்றதற்கும் அவர் மட்டுமே’ காரணம்.
பசுபதியார் எனும் ஆளுமையை
மள்ளர்கள்/சாதி/ஆயுதம் என்ற ஒற்றை கூண்டுக்குள் அடைத்துவிட முடியாது.
அவரின் சிந்தனை போக்கு ,
தமிழர்களின்/குடும்பர்களின் வரலாற்றை உள்வாங்கி அதன் விளைவாக அவரில் எழுந்த கனவு,
அந்த கனவை நிகழ்த்திகாட்ட அவர் கொண்ட உறுதி , நேர்மை, அறம், தியாகம், ஒழுக்கம் , தலைமைத்துவ பண்பு, தமிழ்தேசிய அரசியல் ஒழுங்கை எதிர் கொண்ட விதம் என பல பரிமாணங்கள் கொண்ட அதி உன்னத பேராளுமையே பசுபதி பாண்டியனார்.
இங்கு நான் முக்கியமாக குறிப்பிட விரும்புவது அவர் ‘தமிழர் தேசிய வரலாற்றை தன்னுள் உள்வாங்கிய விதம்தான்’.
அவர் காலப்பகுதியில் இருந்த மற்றைய போராளி/ இயக்கங்களின், ஏன் இன்றைய அரசியல் தலைவர்களிடம் கூட இந்த பண்பை நீங்கள் ஒருபாேதும் காணமுடியாது.
உண்மையிலேயே தமிழ அரசியல் இயக்கத்தின் பெரும் தலைவர்களாக இருந்தவர்களுக்கு கூட இந்த ‘பண்பு’ இல்லை.
ஆனால் பசுபதியாரின் போராட்ட காலத்தில், இந்த பண்பு சகல வழிகளிலும் வெளிப்பட்டது.
தமிழர் இனத்தின் தொன்ம மரபான தமிழர்ளின் தமிழ் தேசிய மரபை தன் கடினமான வாழ்க்கை சூழலுக்குள் நடைமுறைப்படுத்துகிறார்.
முதன் முதலில் ஐயா பழனி பாபா, பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ஐயா ராமதாஸ், பின் பேராசிரியர் தீரன்,
முருகவேல்ராசன் உடன் இணைந்து தமிழரசு கட்சி, நெல்லை நாடார் இன தலைவர்களுடனான நட்பு, எதிர் துருவ சசிகலா கணவர் நடராசனுடன் தமிழீழ பாேராட்டம், நெடுமாறனுடன் இணைந்தது தமிழீழ விடுலை பாேராட்டம் என அனைத்து அரசியல் நகர்வுகளிலும் தமிழ் மக்கள் உடன் மட்டுமே தன் அரசியலை முன்னிலை படுத்தினார்
நெருக்கடியான போராட்ட வாழ்கை சூழலிலும், தன் அரசியல் வாழ்க்கை கட்டமைபில் தமிழ் தேசிய அரசியலை சமரசமின்றி முன்னெடுத்தார்.
தான் முத்துநகர் துறைமுக தாெழில் சங்க தலைவராக இருந்த காலத்தில் அதன் ஊடாய் தமிழீழத்திற்காக கடல் வழியாக தன் சக்திக்கும் மிஞ்சி ஆன அனைத்தையும் செய்தது, பாம் கர்ணன் முதலான தன்னுடைய தளபதிகளையும் பயன்படுத்தியது, பின்னாளில் ஜாபர் சேட்/ ஜாங் கிட்டு என உளவுதுறை மூலமாக தூத்துக்குடியிலிருந்து திண்டுக்கலுக்கு குடிபெயர்ந்தது வரை தமிழீழம் மட்டுமே அவர் கனவாக இருந்தது.
அதே வாழ்க்கை சூழலுக்குள் தமிழகத்தில் பாதிக்கப்பட்ட மக்களுடன் நின்று களையெடுப்பை நடத்திக்கொண்டிருந்தார். இதை பதவி, பணம் அமைந்த பின்பு செய்யலாம் என மற்றவர்கள் நினைப்பார்கள்.ஆனால் அவர் நிகழ்காலத்திலேயே நடத்தி முடிக்கவேண்டும் என உறுதியாக இருந்தார்.
எந்த நேரமும் உயிருக்கான நிச்சயமில்லா யுத்த களமாகவே வாழ்ந்த சூழலில் ஒரு தனி மனிதன் ‘தமிழ் மக்களுக்கு, தமிழ்தேசிய அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வேலையையும் செய்து கொண்டிருந்தது’ என்பது எதனூடாக நிகழ்ந்த விளைவு?
அந்த தலைவனின் உணர்வுக்குள்
‘தமிழர் வரலாறு பற்றிய படிமங்கள்’ ஆழமாக இருந்திருக்கவேண்டும்.
அவர் அந்த தமிழர் வரலாற்றின் தொடர்ச்சியாக தம்மை உள்வாங்கி இருந்திருக்கிறார்.
அவரின் அறம், ஒழுக்கம் எல்லாமும் இதனூடாகவே நிகழ்ந்த ஒன்றாகவே நான் பார்க்கிறேன்.
இது உண்மையிலேயே நுணுக்கமாக ஆய்வு செய்யப்பட வேண்டிய ஒன்று. நான் மிக மேலோட்டமாக குறிப்பிட்டிருக்கிறேன்.
எதிர்காலத்தில் தமிழினத்தில் பெரும் போராளி தோன்றினால் கூட இந்த
தமிழர் வரலாற்றை உள்வாங்கிய பண்பு’ இருக்கும் என எனக்கு தோன்றவில்லை.
குடும்ப கிழவனார்
Comments
Post a Comment