குடும்பனின் பார்வையில்
பரிபாடல் விளக்கும் மள்ளர்களின் வானியல் புரிதல்கள்
[26/10, 20:13]
முருகன் பிறந்த நாள் மீன் ஆரல் ( கார்த்திகை நட்சத்திரம்) மீன் ஆகும். இதையே,
“வடவயின் விளங்குஆல் உறைஎழு மகளிருள்
கடவுள் ஒருமீன் சாலினி ஒழிய”- பரி-5-9-10 வரிகள் கூறுகின்றன. ஆரல் என்பதே இடைக்குறைத்து ஆல் என வந்தது.
இந்த முருகன் தோன்றிய ஆரலுக்கு( Pleiades) முன்னுள்ளது வேழம்( பரணி நட்சத்திரம்) ஆகும். இந்நாள்மீனின் விலங்கினம் ஆண்யானை. இதையே முருகன் ஏறி வந்த பிணிமுகம் என்னும் ஊர்தியாகும்.
“ பாய்இரும் பனிக்கடல் பார்துகள் படப்புக்குச்
சேய்உயர் பிணிமுகம் ஊர்ந்துஅமர் உழக்கித்”- பரி- 21–1-2
என்ற பாடல் வரிகள் தெளிவாக விளக்கும். முருகன் செக்கு( சதயம்) நாள்மீனான சூர்மாவைத் தடிந்து அழித்ததையே,
“ நோயுடை நுடங்குசூர் மாமுதல் தடிந்து”- பரி-21- 4 வரி விளக்குகிறது. மா எனில் மா மரம் எனத் தவறாகப் பொருள் கொள்கின்றனர். மா எனில் புரவி என்றொரு பொருள் உண்டு. சதயம் நட்சத்திரத்தின் விலங்கினம் பெண் குதிரை ஆகும்.
முருகன் இந்திரனின் மகளான தெய்வ யானையை மணந்தான். சூரனை அழித்ததால் இந்திரன் மயிலைப் பரிசாக வழங்கினான்.
“………வானத்து
வளங்கெழு செல்வன்தன் மெய்யின் பிரித்துத்
திகழ்பொறிப் பீலி அணிமயில் கொடுத்தோன்
திருந்துகோல் ஞமன்தன் மெய்யில் பிரிவித்து
இருங்கண் வெள்யாட்டு எழில்மறி கொடுத்தோன்”- -பரி- 5- 27-31
வரிகள் இதைத் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டுகிறது. எமன் முருகனுக்கு வெள்ளாட்டினைப் பரிசாகக் கொடுத்ததாக அப்பரிபாடல் நமக்கு விளக்குகிறது.
இதனை அடுத்து முருகன் வள்ளியைக் களவு மணம் புரிந்தான். இது முருகனின் இரண்டாம் மணமாகும்.
சில திராவிட வரலாற்றைப் புரட்டும் எத்தர்கள் முருகன் வள்ளியைத் தான் முதலில் மணந்தான் என்றும் ஆரியர்கள் வந்து கற்பனையாகத் தெய்வயானையை மணம்முடித்து வைத்தனர் என்றும் பொய்க் கதை படிப்பது இப்போது அதிகமாகி விட்டது. அது உண்மை அல்ல என பரிபாடல் விளக்கும்.
ஆரல் நாள்மீனுக்கு அடுத்து வருவது மறிமான் உடுக்கூட்டம் ஆகும்( Orion Constellation) .இமைக்கின்ற கண்களே வள்ளியின் கண்களாகும். தேவர்களின் கண்களோ இமைப்பதில்லை. இதனால் பரிபாடல் வள்ளியை , மானுட மகள் என்றே குறிப்பிடும்.
இந்த வள்ளியை முருகன் மணந்த போது, பருவம் பிறழ்ந்து முதுவேனில் காலத்தில் கார்காலத்தில் மழை பொழிந்ததைப் போலத் திருப்பரங்குன்றத்தில் பெய்த மழை போன்று தேவயானையின் கண்கள் கலங்கி கண்ணீர் உகுத்ததாகப் பரிபாடல் கூறும்.
“ மையிரு நூற்றுஇமைஉண் கண்மான்மறி தோள்மணந்தஞான்று
ஐஇருநூற்று மெய்ந்நயனத் தவன்மகள் மலர்உண்கண்
மணிமழை தலைஇயென மாவேனில் கார்ஏற்றுத்
தணிமழை தலையின்று தண்பரங்குன்று”- பரி-9-8-11
எனத் தெளிவாக விளக்கும்.
வள்ளியை உருவகப் படுத்தும் மான்றலை( மிருக சீரிடம் நட்சத்திரம்) என மானின் தலையாக உருவகப் படுத்தினாலும் அதன் கணம் தேவ கணமாகும். இதனால் வள்ளியை “ வானவன் மகள் “ எனப் பரிபாடல் குறிப்பிடும்.
“ வாண்மிகு வயமொய்ம்பின்
வரையகத்தவனை வானவன்மகள்
மாணெழில் மலருண்கண்”- பரி- 9- 57-59
என்ற பரிபாடல் வரிகளில் இதை உணரலாம்.
திராவிடர்களும் ஆரியர்களும் அவர்களுக்குத் துணைபோகும் சில தமிழ் படித்த துரோகிகளும் சேர்ந்து பொய்களையும் புரட்டுகளையும் கட்டவிழ்த்து விட்டு தமிழர்களின் வானியல் சார்ந்த அறிவு மரபைப் பாழ்படுத்தி நம்மை இருட்டு உலகில் வைத்து விட்டனர்.
பரிபாடல் முருகன் திருமாலைப் பேசுகிறது இது தமிழர் மரபுக்கு எதிரானது எனத் திராவிடர்களும், முருகன் திருமால் கடவுள் என்று ஆரியர்களும் முட்டி மோதி பலனடைந்தது அவர்கள்.
அறிவு மரபையும் , வரலாறையும் இழந்து தவிப்பது மள்ளர்களான குடும்பர்களே.
அதிகாரம் கையில் இருப்பதனால் மள்ளர்களின் உண்மையான வரலாறை இவர்கள் மூடி மறைக்க முயல்கிறார்கள்.
பரிபாடல்களில் பல பாடல்களைப் பாடியது ஒரு பாண்டிய இளவரசன் என்பது கூடுதல் தகவல் என்பதையும் மனதில் வைத்து இந்த விளக்கத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.
பரிபால் பத்துப் பாட்டு சங்க இலக்கியங்களில் தான் குடும்பர்களின் உண்மையான வரலாறு புதைந்துள்ளது. அவற்றை மீட்டெடுப்போம். போலிகளைத் தோலுரிப்போம்.
[26/10, 21:15]
கடவுள் ஒருமீன் சாலினி ஒழிய?
எமன் முருகனுக்கு வெள்ளாடு பரிசாக கொடுக்க காரணம்?
இமைக்கும் வள்ளியின் கண்கள்?
இமைக்காத தேவர்கள் கண்கள்?
சிறிது விளக்கம்.
மெய்ந்நயனத்தவன் மகள்?
முருகன் பிறந்த நாள் மீன் ஆரல்?
முருகன் செக்கு ( சதயம்)நாள் மீன் ?
[26/10, 21:41]
ஆரல் நாள்மீன் கூட்டத்தை அறுமீன் கூட்டம் என்பர். ஆனால் உற்றுப் பார்த்தால் அதில் ஏழுமீன்கள் இருக்கும். அந்த ஏழாவது மீனைத் தவர் தமிழர்கள் சாலினி என அழைத்தனர்.
பின்னாளில் இந்த சாலினி மீன் எழு முனிவர் உடுக்கூட்டமான பெருங்கரடி( Urja Major) என்ற உடுக்கூட்டத்தில் உள்ள இரட்டை உடுவிற்கு ( Binary Star) ஆரியர்களால் மாற்றப்பட்டு “ அருந்ததி” என்றும் பெயர் சூட்டப் பட்டது. கிபி 200 வரை ஆண்டின் தொடக்கமாக விடை ஓரை இருந்துள்ளதாகத் தெரிகிறது. கிபி 200 ஆம் ஆண்டில் இருந்து மேழ ஓரையில் ஆண்டின் தொடக்கம் மாற்றப் பட்டது. இப்போது ஆண்டின் தொடக்கம் மீன ஓரை என்பது ஒரு கருத்தாகும்.
எமன் வெள்ளாட்டு மறி கொடுத்ததற்கான வானியல் குறிப்பு தெரியவில்லை
குறமகள் வள்ளி என்ற கதை உள்ளதால் வள்ளியின் கண்கள் இமைக்கும். அசுர கணங்களாக உடுக்கள் வைக்கப் பட்டதால் நட்சத்திரத்திலங்களின்twinkle என்பது மனிதர்களுக்கும், கோள்கள் அருகாமையில் இருப்பதால் அவை மின்னுவதில்லை( twinkle). இதையே ஆரியம் தேவர்களின் கண்கள் இமைக்காது என்ற கதை படித்தனர்.
மெய்ந்நயனம்- இந்திரனின் உடம்பெல்லாம் கண்கள் ஆரியக் கதை. உண்மையில் கண்கள் வானின் நட்சத்திரங்களைக் குறிக்கும்
விடை ஓரையில் உள்ளது ஆரல் நாள் மீன்- கார்த்திகை நட்சத்திரக் கூட்டம்( Pleiades)
Comments
Post a Comment