குடும்பனின் பார்வையில் காளமாடன்


 காள மாடனின் 

அழகியலும், அறமும், அரசியலும்.

       *******************************

அழுதுகொண்டிருந்தாலும் 

உழுது கொண்டே இரு.

ஒதுக்கினாலும் ஒடுக்கினாலும்

ஓடிக்கொண்டே இரு.


ஏற்றத்தாழ்வுகள் எல்லாச் சமூகத்திலும் உண்டு; 

உள் சமூகத்திலும் உண்டு.


திறமைகளைக் கைபிடித்து 

ஏற்றி விடும் மனிதர்கள்

எந்த வடிவத்திலும் உண்டு;

எல்லாச் சமூகத்திலும் உண்டு.


பகையும் துரோகமும் 

அடுத்த சமூகத்தில் மட்டுமல்ல;

சொந்த சமூகத்திலும் உண்டு.


மற்றவர்கள் பெறுகிற அன்புக்கும் மதிப்புக்கும்

கொஞ்சம் ஓடினால் போதும்.


கணேசன்களும் 

கிட்டான்களும்

மாரி செல்வராசுகளும்

மகாராசன்களும் 

நெடுந்தொலைவுகள்

ஓடி ஓடித்தான்,

களமாடி ஆடித்தான்,

சமத்துவக் குரலைப்

பாடி பாடித்தான்,

எழுதி எழுதித்தான்

அன்பை மலர்த்த வேண்டி இருக்கிறது;

அங்கீகாரத்தைப் பெறவேண்டி

இருக்கிறது;

யாம் காணும்

உயரத்தைத் தொட வேண்டி இருக்கிறது.


அதற்கிடையில்,

அறிவு, கலை, இலக்கியம், மொழி, இனம், முற்போக்கு, சமூகநீதி, புரட்சி என்றெல்லாம் வேடமிட்டுக்கொண்டு, சாதிய அழுக்கின் வன்மத்தையும் காழ்ப்பையும் சுமந்து திரியும் 'பொதி' கழுதைகள் கத்திக் கொண்டேதான் இருக்கும்.


ஆனாலும், 

காளை மாடுகளும்

காள மாடன்களும்

ஏர் பூட்டி உழவாடும்;

நட்டதும் விதைத்ததும்

முளைத்தே எழும்.


தெக்கத்தி வாழ்வின் சமூக முரணும் பகையும் தீர, ஒரு கலைப் படைப்பாய் நேர்மையோடு உரையாடலை முன்வைத்திருக்கிறது பைசன் எனும் காளமாடன். 


சமூகம் பேச மறுப்பதை; மறந்ததை; மறைப்பதையெல்லாம் கலைப் படைப்பின் வாயிலாகப் பேசியிருப்பதோடு, சமூகத்தையும் பேச வைத்திருக்கும் காளமாடன், அழகியல் பூர்வமாய்த் திரைமொழியில் சமத்துவ அறத்தைப் பாடியிருக்கிறது.


மாரி செல்வராசு மற்றும் காளமாடன் படக்குழுவினருக்கு

வாழ்த்துகள்; பாராட்டுகள்.


ஏர் மகாராசன்

Comments

  1. அருமையான நேர்மையான விமர்சனம் வாழ்த்துகள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

குடும்பனின் வரலாற்று புரிதல்

திருநெல்வேலி இரயில் நிலைய நிலைய மேம்பாட்டு பணிகள்

திருநெல்வேலி யின் இலக்கியத்தில்