குடும்பர்களின் பார்வையில்
[16/10, 21:44] Sivasankaran IAS Rtd:
கடலில் உயிரினங்கள் தோன்றவில்லை. கடல் ஒரு வேற்றுக் கோள் தண்ணீர் நிரம்பியது புவிக் கோளத்தின் மீது மோதி கடல் உருவானதாக ஒரு கருது கோள் உண்டு .
உண்மையில் நீரானது ஞாயிறைவிட வயதில் மூத்தது. கடல் நீர் ஆவியாகி புவியில் மழை பொழிந்து அதில் சில வேதிக்கூறுகள் தற்காலிமாக இணைந்து உயிரிச் சங்கிலியைத் தோற்றுவித்தன. ( DNA- மரபணு) இந்த மரபணுக் கூறு பலவித மாற்றங்களை அடைந்து டைனோசார் அளவுக்கு பெரிய விலங்கினங்களாகப் பரிணாமம் பெற்றது.
சுமார் 75 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் மனித இனம் தோன்றியதாக வரலாறு சொல்கிறது. அது மனிதனாக மாறி இன்றைய நிலையில் வந்து சேர்ந்தது. மனிதன் எத்தியோப்பியா தென்னிந்தியா இணைந்த நிலப் பரப்புகள் இணைந்திருந்த காலத்தில் புல்வெளியில் தான் தோன்றின.
தமிழ் நாட்டில் கூட அதிராம்பாக்கம் கற்கருவிகள் கிடைத்த இடத்தில் மலைகள் இல்லை.
எனவே ஆதி மனிதன் தனது வாழ்க்கையை தரைப்பகுதியில் தான் தொடங்கினான். அடர்ந்த காட்டிற்குள் வேட்டையாட முடியாது உணவுச் சங்கிலியில் பெரு வேட்டை விலங்கான சிங்கம் புல்வெளியில் தான் வேட்டையாடி உணவுத் தேவையை நிறைவேற்றிக் கொள்கிறது., புலியால் ஒடி வேட்டையாட முடியாது . அது தாவித் தான் இரையை வீழ்த்தும். என்பது அதன் இடம் சார்ந்த தகவமைப்புதான்.
இரண்டு கால்களை உடைய மனிதன் ஓடியே விலங்குகளை மறித்து கற்களைக் கொண்டு வீழ்த்தியும் பின்னர் விரைவாகக் கொல்வதற்கு கல்லைக் கூர் தீட்டியும் பின்பு மறுசுழற்சியாக அத்தீட்டிய கல்லையே கழியில் கட்டியும் வேட்டையாடினான் .
கிமு 20000 ஆம் ஆண்டில் தான் வேளாண்மை கண்டுபிடிக்கப் பட்டது. நெல் கிமு 8000 ஆம் ஆண்டில் தொடங்கியது. தமிழ்நாட்டில் மலைகள் அடர்த்தியான காடுகள் உள்ளவை. அவை ஆதி மனிதன் வாழத் தகுதியற்றவை. மேலும் தொல் மாந்தன் வாழ்விடங்கள் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் இதுவரை கண்டறியப் படவில்லை. கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் மக்கள் வாழ்ந்தாலும் தொல்லியல் எச்சங்கள் இதிவரை கண்டறியப் படவில்லை.
எனவே தமிழ் நாட்டைப் பொறுத்தவரையில் நிலப்பகுதிகளிலேதான் பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளான் என்பதை இப்போது கிடைத்துள்ள தரவுகளை வைத்து ஒரு முடிவுக்கு வரலாம்.
நால்வகை நிலங்கள் அவற்றின் தெய்வங்கள் எல்லாம் தொல்காப்பியம் கூறவில்லை. அது சொல்வது எல்லாம் இடமும் பொழுதும் முதற் பொருள் என்று தான் கூறுகிறது.
"இடம்" என்பது "Space" என்பது தான் "நிலம்" என்ற பொருளில் வரும் "Earth" கிடையாது. ஆனால் உரையாசிரியர்கள் "இடம்" என்பதை "Earth" என்ற பொருளில் கையாண்டதால் இந்தக் குழப்பம் இன்று வரை நீடிக்கிறது.
ஒன்று மட்டும் மனதில் கொள்ளுங்கள் நண்பர்களே சங்க நூல்களுக்கு உரை எழுதியவர்கள் அனைவரும் பாவாணர் தவிர தமிழர்கள் அல்ல வேற்று மொழியினர் என்பதை மனதில் வைத்துப் பார்க்க வேண்டுகிறேன்.
அவர்களுக்கு தமிழர் நாகரிகத்தை உருவாக்கி வளர்த்த “ மள்ளர்கள்” இன் இயங்கியல் ஒருபோதும் தெரியாது. அதற்கு வாய்ப்பும் இல்லை.
அதனால் நமது வரலாற்றை நாமே எழுதினால் தான் உண்மையான வரலாறைப் படைத்தளிக்க இயலும்
[16/10, 22:26] ஆனந்தராஜ்:
பூமி தோன்றி 400 ஆண்டுகள் ஆகின்றன.
பூமி தோன்றிய காலத்தில் பிராணவாயுக்கள் இல்லை, எரிமலை வெடிப்புகள் மூலம் வளி மண்டலம் உருவானது கரியமில வாயுக்களும் உண்டாயிற்று இங்கு நடைபெற்ற வேதியியல் மாற்றத்தின் காரணமாக அமினோ அமிலங்கள் உண்டாயிற்று இந்த அமினோ அமிலங்களே உயிரின தோற்றத்திற்கான அடிப்படை மூலக்கூறாக கருதலாம் இதன் விளைவாக ஒரு செல் உயிரினங்கள் தோன்றின இந்த காலகட்டத்தில் கடல் உருவாகியிருந்தது இந்த கடல் நீர் பகுதியில் இருந்தே அமிபா உட்பட பல உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி தொடங்கியது இதில் கணிசமான எண்ணிக்கையிலான உயிரினங்கள் கடலில் இருந்து வெளியே வந்து நிலப் பகுதியில் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டன .
உயிரினங்கள் எப்படி பூமியில் தோன்றியது என்பது தெரிந்து கொள்ள ஹால்டேன் மற்றும் ஒப்பாரின் கொள்கை Haldane and oparin Theory என்ற நூலை படித்தால் இது பற்றி தெரிந்து கொள்ளலாம்.
இதை கூகுளில் தேடினால் கிடைக்கும்.
மனித வரலாற்றை தெரிந்து கொள்ள உயிரினங்கள் தோன்றிய விதத்தையும் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.
Comments
Post a Comment