குடும்பனின் படிப்பில்

 பூமிக்கும் நிலவுக்கும் இடையே உள்ள தூரம் 3,84,400 km ( பூமிக்கும் நிலவுக்கும் ஆன தூரம் எப்போதும் ஒரே அளவாக இருப்பதில்லை அது மாறிக்கொண்டு இருக்கும் ,இந்த அளவு சராசரி அளவு தான்)

நிலாவின் விட்டம் 3,474 km

பூமிக்கும் நிலவுக்கும் இடையே உள்ள தூரத்திற்கும் நிலவின் விட்டத்திற்கும் இடையே உள்ள விகிதம் 

3,84,400/ 3474= 110 = 108


சூரியனின் விட்டம் 1,392,700 km

பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரம் 150000000 km

150000000/1392700= 107.7 =108


சூரியனின் விட்டம் 1,392,700 km, பூமியின் விட்டம் 12742 km , சூரியனின் விட்டதிற்க்கும் பூமியின் விட்டதிற்கும் இடையே உள்ள விகிதம்

1392700/127742 = 109.2 = 108


அவர் ஒரு மிகச்சிறந்த விண் ஆராய்ச்சி சித்தர். அவர் நிலவுக்கும் பூமிக்கும் ஆனா தொலைவுக்கும் நிலவின் விட்டத்துக்கும் உள்ள விகிதம் 108 என்றும், அதேபோல பூமி சூரியனுக்கும் இடையே உள்ள தொலைவுக்கும் சூரியனின் விட்டத்திற்கும் உள்ள விகிதம் 108 என்று கண்டுபிடித்தார். மேலும் சூரியனின் விட்டதிற்க்கும் பூமியின் விட்டதிற்கும் இடையே உள்ள விகிதம் 108 என்றும் கண்டு விளக்கினார்.


மலைகளின் குகைகள் தான் மனிதர்களின் ஆரம்பகால வசிப்பிடம் அதனால் வீடு என்பது உயரமான இடத்தை குறிக்கும். வானமும் உயரமாக இருப்பதால் அதனையும் வீடு என்று அழைப்பதுண்டு. இறந்தவர்கள் கூட வீடு பேரு அடைந்தார்கள் என்று சொல்வதுண்டு. வானத்தை ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த அந்த சித்தரை மக்கள் வீட்டினன் என்று அழைத்தார்கள்.

வீட்டினன் - விட்டுணு - விஷ்ணு ஆக மாறியது. 108 திவ்ய தேசங்கள் எப்படி அவருக்கு வந்தது என்பதற்கான காரணம் இது. அவர் இரவு முழுவதும் வானை ஆராய்ந்து கொண்டிருந்ததால் காலையில் நீண்ட நேரம் உறங்க வேண்டி வந்தது அதனால்தான் அவரை எழுப்புவதற்காக திருப்பள்ளி எழுச்சி பாடல் பாடப்படுகிறது மேலும் குளிரினால் அவதிப்பட்டதால் தைலக்காப்பு கொடுக்கப்படுகிறது.


பெரும் ஆளாக இருந்ததால், பெரும் ஆள் - பெருமாள் என்று ஆனார். உலகத்தை அளந்ததால் உலகளந்த பெருமாள் என்ற பெயரும் பெற்றார்.


சித்தர்களே அந்த காலத்தில் நாட்டை ஆண்டார்கள் .செயற்கரிய செயல்கள் செய்த சித்தர்களை கடவுளாக வணங்குகிறோம் அதனால் தான் கடவுளை ஆண்டவன் என்றும் அழைக்கிறோம். ஆதனால் தான் துறவிகளுக்கு ஆண்டி என்ற பெயரும் வந்தது. விஷ்ணு சித்தரும் அவர் வாழ்ந்த காலத்தில் பரந்த இந்த நாட்டை தன் கட்டுப்பாட்டில் ஆண்டார் . பரதன் என்ற பெயர் பெற்றார். பரதம் என்று இந்த நாட்டிற்கும் பெயர் வந்தது.


வகுத்தல் பகுத்தல் இரண்டும் ஒரே பொருளை தான் குறிக்கும். மொழியில் வ ப மாற்றம் சகஜம். வென்காலூர் ( வெண் கால் என்றால் மேகம்) என்ற மேகங்கள் சூழ்ந்த ஊர்ரை இப்பொழுது பெங்களூர் என்று அழைக்கிறோம். வேண்டாம் என்ற தமிழ் சொல் தான் பேடா என்று கன்னடத்தில் மருவியுள்ளது.

பரதராஜன் ஆகிய விஷ்ணுவின் பெயரும் பிற்காலத்தில் வரதராஜன் என்று மாறியது. ஜைன சமயத்தில் 23வது தீர்த்தங்கரர் பார்சுவநாதர் ( பார் சகம் நாதர்) வேறு யாரும் இல்லை நம் விஷ்ணுதான். ஐந்து அங்கங்களைக் கொண்ட பஞ்சாங்கத்தை அவர் கண்டுபிடித்ததால் ஐந்து தலை பாம்பை அவர் சின்னமாக வைத்தார்கள். பாம்பு வளைவான வட்டப் பாதையில் செல்லும் கோள்களை குறிக்கிறது. கோள்கள் வட்டப் பாதையில் செல்வதை அவர் கண்டுபிடித்ததால் சக்கரமும் அவர் சின்னமாக கொடுக்கப்பட்டது.

சக்கர வரதன் - சக்கரவர்த்தி ஆனர்.


ஆரிய பிராமணர்களும், ஜெயின சமயத்தினரும் யூத இனத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் தான் தமிழ் வரலாற்றை அழித்தனர்.


 சமஸ்கிரத ராமாயணத்தில் பரதனை இராமனுக்கு தம்பியாக சித்தரித்து இருப்பார்கள் அதுமட்டுமல்லாமல் ராமனின் செருப்பை வைத்து அவர் அரசாட்சி செய்தார் என்றும் கதை கட்டி இருப்பார்கள். ராமனும் விஷ்ணுவின் அவதாரமாம் ,பரதனும் ராமனுக்கு தம்பியாம் எப்படி இருக்கிறது பாருங்கள்.

கேரளாவில் உள்ள இரிஞ்ஞாலகுடா தலத்தில் பரதனுக்கு கோயில் உள்ளது. அதை ராமாயண பரதன் என்று சொல்கிறார்கள் அந்த சிலை விஷ்ணுவின் சிலை தான், அந்த சிலையில் சங்கும் சக்கரமும் உள்ளது. இணையத்தில் தேடி பார்த்துக் கொள்ளுங்கள்.


ஜெயின சமயத்தினரும் பரதனைப் பற்றி ஒரு கதை சொல்கிறார்கள் அதாவது அவர்களின் முதலாவது தீர்த்தங்கரர் ரிஷபநாதருக்கு இரண்டு மனைவிகலாம் , ஒரு மனைவிக்கு இரண்டு குழந்தைகளாம் இன்னொரு மனைவிக்கு 98 குழந்தைகளாம். மொத்தம் 100 குழந்தைகளாம். 


ரிஷபநாதர் துறவறம் மேற்கொள்ளும் போது தன்னுடைய ராஜ்யத்தை 100 பகுதிகளாக பிரித்து அவர் 100 குழந்தைகளுக்கும் கொடுத்துவிட்டாராம். அதில் ஒரு மனைவியின் மகன் பரதன் இன்னொரு மனைவியின் மகன் பாகுபலியாம்.


பரதனிடம் சக்கராயுதம் இருந்ததாம். 

பரதன் தன் கூடப்பிறந்த 98 பேருடனும் சண்டையிட்டு அவர்கள் ராஜ்யத்தை தன்வசம் ஆக்கிக் கொண்டானாம். 


கடைசியாக பரதன் பாகுபலி இடம் சண்டையிட்டானாம் ஆனால் பரதனின் சக்கராயுதம் பாகுபலியை ஒன்றும் செய்யவில்லையாம். பாகுபலி பரதனிடம் தன் ராஜ்யத்தை கொடுத்துவிட்டு தன் தந்தையுடன் துறவறம் மேற்கொள்ள சென்று விட்டானாம். இந்தக் கதை நம்பும்படியாகவா இருக்கிறது.


ஜெயனர்கள் தங்கள் சமயத்தில் 24 தீர்த்தங்கரர்கள் இருந்தார்கள் என்று சொல்கிறார்கள் ஆனால் அவர்கள் சமயத்தை கடைசியாக வந்த மகாவீரர் தான் தோற்றுவித்தார் என்கிறார்கள். அது எப்படி ஒரு சமயத்தை கடைசியாக வந்த தீர்த்தங்கரர் தோற்றுவிப்பார் அப்போது முதல் 23 தீர்த்தங்கரர்கள் எந்த சமயத்தில் இருந்தார்கள்.


இவர்கள் தமிழர் வரலாற்றை தான் இப்படி சிதைத்து இருக்கிறார்கள்.

உண்மையில் தீர்வு தந்த கரர்கள் அதாவது தீர்வு தந்த கரங்களை கொண்டவர்கள் தீர்த்தங்கரர்கள் என்று அழைக்கப்பட்டார்கள் இது தூய தமிழ் வார்த்தை.  


நிர்வாண நிலை அடைந்த துறவிகளை அமணர்கள் ( அம்மண நிலை அடைந்ததால் )என்று அழைக்கப்பட்டார்கள். பின் அதுவே சமணர்கள் என்று மாறியது எப்படி அவை சபை ஆக மாறியதோ அதுபோல். ரிஷபம் என்றால் மாடு ,மாட்டை வாகனமாக கொண்டவர் சிவன் இவர்கள் சிவனை தான் ரிஷப நாதர் ஆதிநாதர் என்கிறார்கள். தமிழர் வரலாறும் சிவனில் இருந்து தான் தொடங்குகிறது ஓகக் கலையை கண்டுபிடித்தவர் என்பதால் ஆதியோகி என்று நாம் சிவனை அழைக்கிறோம்.


வாகு வலி தான் பாகுபலி ஆகி இருக்கிறது. வாகுவான உடலைக் கொண்ட வலிமையானவன் என்று பொருள். இது முருகரை தான் குறிக்கும். இவர்கள் நோக்கம் விஷ்ணு என்ற தமிழ் சித்தரின் வரலாற்றை அழிப்பது அதற்குத்தான் இப்படி விதவிதமான கதைகளைப் புனைந்து இருக்கிறார்கள்.


ஒரே ஆளுமையை இரண்டு கதாபாத்திரமாக மாற்றி அந்த இரண்டு கதாபாத்திரத்தையும் ஒன்றோடு ஒன்று சண்டையிட வைப்பதுபோல் கதை எழுதுவார்கள்.


ராவணனின் மகன் இந்திரன் அவரைத்தான் கடவுளாக தமிழர்கள் வணங்கினார்கள் . இந்திர விழா தமிழர்களால் கொண்டாடப்பட்டது. இந்திரனையும் வைத்து இதேபோல் கதையைத்தான் இவர்கள் எழுதி வைத்திருக்கிறார்கள். அதாவது ராவணனின் மகனான இந்திர சித்தனும், கடவுள் இந்திரனும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டார்களாம். இவர்கள் பொய்க்கு ஒரு அளவே இல்லை. 


கௌதம புத்தரை கௌதம ரிஷி என்று அகலிகையை கதையில் எழுதி இருக்கிறார்கள். இதிலிருந்து இவர்கள் புத்தர் காலத்திற்கு வெகு காலத்திற்கு பிறகு தான் இந்தக் கதைகளை எழுதி இருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.


முருகர் தான் பிரம்மன் ( பெரிய அமணன் - பேரமணன் - பிராமணன் - பிரம்மன் ) ஆனால் இவர்கள் முருகர் பிரம்மனை சிறை படுத்தியதாக கதை எழுதி வைத்திருக்கிறார்கள்.


வாமன அவதாரத்தில் மாவலி சக்கரவர்த்தி என்று ஒரு கதாபாத்திரம் வரும் அதுவும் வேறு யாருமில்லை விஷ்ணு தான். மகா வலிமையான சக்கரவர்த்தி என்று விஷ்ணுவை தான் மறைமுகமாக இந்தப் பெயரைக் கொண்டு கதை எழுதி இருக்கிறார்கள்.வாமணனும் விஷ்ணுவாம் மாவலியும் விஷ்ணுவாம் எப்படி இருக்கிறது பாருங்கள் இவர்கள் கதைகள். இதே உத்திதான் எல்லா இடங்களிலும் இவர்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள்.திருவோணம் என்பது விஷ்ணுவின் நட்சத்திரம் தான்.கோணம் என்ற தமிழ் வார்த்தைதான் ஓணம் என்று மாறியிருக்கிறது.


ஆரிய பிராமணர்கள் தான் தமிழர்கள் வரலாற்றை அழித்தவர்கள் என்பதை ஒவ்வொரு தமிழனும் உணரவேண்டும்.

Comments

Popular posts from this blog

குடும்பனின் வரலாற்று புரிதல்

திருநெல்வேலி இரயில் நிலைய நிலைய மேம்பாட்டு பணிகள்

திருநெல்வேலி யின் இலக்கியத்தில்