குடும்பனின் பார்வையில்
ஆரியர்- கழைக்கூத்தாடிகள்/தொம்பகூத்தாடிகள் என்பது குறித்து
[21/10, 19:59]
“ உற்றுழி யுதவியு முறுபொருள் கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது கற்ற னன்றே”- புறம்-183- 1-2
பாடலைப் பாடியது பாண்டியன் ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் .
“ யார்கொ லளியர் தாமே யாரியர்
கயிறாடு பறையிற் புகுந்து கால் பொரக் கலங்கி”- குறுந்-7-3-4
“ ஆரியந் தமிழெனுஞ் சீர்நட மிரண்டினும்”- சிலம்பு- 3-12-25
அடியார்க்கு நல்லார் உரை
“ ஆடியிற் பாணிக் கொக்கு மாரிய வமிழ்தப் பாடற் கோடியற்” - கம்ப - கார்காலப்- 33
என்ற பாடல் வரிகளில் ஆரியர் கழைக் கூத்தாடிகள் என்றும், ஆரியர் என்றால் தொம்பர் என்ற பொருளும் உண்டு.
ஆரியப் படை கடந்த பாண்டியன் நெடுஞ்செழியன் ஆரியர்களை வென்றதால் அப்பெயரைப் பெற்றுள்ளான்.
பாண்டியம்- எருது, உழவு, வேளாண்மை என்ற பொருள் தருகிறது. ஆரியர்களைப் பொறுத்த வரை உழவு வேளாண்மை என்பது அசுத்தத் தொழில். தீட்டுக்கு உரியது. உழவு குடியில் பிறந்த பாண்டியர்கள் அதற்கு நேர் எதிரான ஆரியர்களின் பட்டத்தை எவ்வாறு பயன்படுத்த முடியும்?. இந்திரன் மழைக்கடவுள் - வேளாண்மையொடு தொடர்பு கொண்டவன். அவனிடம் சென்று மூவேந்தர்களும் விதை வித்துகள் எருது வாங்கி வந்ததாக சங்கரன் கோவில் கல்வெட்டுச் செய்தி கூறுகிறது. இங்கே நாம் கேள்விக்கு உள்ளாக்க வேண்டியது வேளாண்மைக் கடவுளான வேந்தன்( இந்திரன்) எவ்வாறு உழவுத் தொழிலைத் தீட்டாகக் கருதும் ஆரியர்களின் கடவுளாக ரிக் வேதத்தில் இருக்க முடியும்? எனவே ரிக் வேதமே உழவர்களான மள்ளர்களிடம் இருந்து ஆரியர்கள் திருடியது எனத் தெளிவாக விளங்கும். கீழ்ப்பாலொருவன் கல்வி கற்றால் அவன் ஆறு செல்லும் என் அரசு என்பது ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் பாடலின் கருத்து. ஆனால் ஆரியர்கள் கீழே இருப்பவர்கள் கல்வி கற்கக் கூடாது எனத் தடை செய்தது. இவ்வாறு இருக்கும் போது ஆரியர்கள் எவ்வாறு பாண்டியர்களாகவோ அல்லது பாண்டியர்கள் ஆரியப் பட்டத்தைச் சூட முடியும்.
பாண்டியர்கள் மிக மூத்த தொல்குடி. ஆரியர்கள் இந்தியா வந்த போது பாண்டியர்கள் இங்கே ஆண்டு கொண்டிருந்தனர். கல்வியில் சிறந்து விளங்கினர். ஆரியர்கள் இங்கே எழுத்தறிவற்ற தற்குறிகளாகவே வந்தனர். சொந்த மொழி அவர்களுக்குக் கிடையாது. ஆனால் பாண்டியர்கள் சங்கம் வைத்து தமிழ் வளர்த்தனர். ஆரியர்கள் பாண்டியர்கள் எனில் தமிழை ஏன் எதிரியாக நினைக்கிறார்கள்? ஆரியர்கள் தமிழகம் வந்ததே கிமு ஐந்தாம் நூற்றாண்டில் தான். இங்கே வந்து ஆரியப் பார்ப்பனர்கள் பறையர்களுடன் சேர்ந்து தமிழர்களுக்கு எடுபிடி வேலை செய்தனர். வடக்கே மௌரிய ஆட்சியை வீழ்த்தி புஷ்யமித்திர சுங்கன் ஆட்சி செய்தது ஒரே முறைதான். அதன் பிறகு பார்ப்பனர்கள் பகர ஆட்சிதான் செய்தனர். சேரன் செங்குட்டுவன்,
“ வடபே ரியமத்து வான்றரு சிறப்பிற்
கடவுட் பத்தினிக் கற்கால் கொண்டபின்
சினவேன் முன்பிற் செருவெங் கோலத்துக்
கனக விசயர்தங் கதிர்முடி யேற்றி”
- சிலம்பு- 27-1-4
“ வாழ்க வெங்கோ மாதவி மடந்தை
கானற் பாணி கனக விசயர்தம்
முடித்தலை நெரித்தது “- சிலம்பு- 27- 49-51
என்ற பாடல் வரிகளில் ஆரிய அரசர்களான கனக விசயர் முடித்தலை நெரித்து கல்லினைத் தலையில் ஏற்றியது தமிழர் மாண்பு. மூவேந்தர்கள் இருந்த வரை தமிழக எல்லைக்குள் வடுகர், ஆரியர், மௌரியரை நுழையவிடவில்லை. ஆனால் தந்திரமாக சமயப் போர்வையில் வந்து தான் வீழ்த்தினர். எந்த தமிழ் அரசனும் பார்ப்பனப் பெண்ணை மணம் முடித்ததாக வரலாறு இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக மரபணுச் சோதனையில் வடவாரியர்கள் வேறு தென்னிந்திய ஆரியரல்லாத மரபணு வேறு என ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. எனவே பாண்டியன் உழவுக் குடி மரபைச் சேர்ந்தவன். ஆரியர்கள் இனக்குழு என்பது மேய்ச்சல் நில அரைப்பழங்குடி அநாகரிகக் கூட்டம் என்பதே வரலாறு நமக்குத் தெரிவிக்கும் உண்மையாகும்
[21/10, 20:29] :
அது பிற்காலத்தில் பிராமணர்கள் உயர்ந்தவர்கள் தலையில் பிறந்தவர்கள் என்று நால்வர்ண முறையை தமிழரசர்கள் ஏற்றதால் வந்த வினை. பிராமணர் கூற்றுப் படி ஆரியன் பரசுராமன் சத்திரியர்களை கொன்றொழித்ததால் சத்திரியர்கள் வம்சமே முடிவுற்றது என்றும் ஆனால் அரியணையில் அமர சத்திரியர்களுக்கு மட்டுமே உரிமை உள்ளது என்பதால் பிராமணர்கள் வேள்வி செய்து சந்திர குலம் சூரிய குலம் என்று கற்பனையான பட்டங்களை வழங்கி நமது மன்னர்களை மயக்கியதால் ஆரிய எனில் உயர்நத என்ற போலியான பொருளைக் கற்பித்து மன்னர்களை ஏற்க வைத்ததால் கல்வெட்டில் ஆரிய பாண்டியன் எனப் போட்டுள்ளனர். அது வரலாற்றில் நிலைக்காது. இன்று கிடைக்கும் தரவுகளைப் பார்க்கும் போது ஆரிய என்ற சொல் ஒரு அலங்காரச் சொல் என்பதற்கு மேல் அதில் எதுவும் இல்லை. எனவே பயப்பட தேவையில்லை
[21/10, 21:26]
ஆரியன் என்ற பிராகிருத சொல்லுக்கு “ஐயன்” என்ற பொருள் உண்டு
ஐயன்- அரசன், தலைவன், உயர்ந்தோன், அப்பன், அறிவுடையோன், ஆரியன், பிராமணன் என்று பல பொருள்கள் உள்ளன. அதனால் பிற்காலத்தில் ஆட்சியாளர்கள் தங்களை உயர்வாகச் சொல்லிக் கொள்வதற்காக “ ஆரியன் “ என்ற சொல்லைத் தாராளமாகப் பயன்படுத்தினர். எளிய புரிதல் தான். குடும்பர்கள் எப்படி பார்ப்பனர் ஆக முடியும். சாதியப் படிநிலையில் தனக்குச் சமமாக பார்ப்பனன் ஒருவரையும் வைத்ததில்லையே. அதனால் இது குறித்த பயம் தேவை இல்லை
[22/10, 10:45]
: நாம் ஒரு ஆதாரத்தைச் சொன்னால் அவர்கள் மின்னல் வேகத்தில் செயல்பட்டு இல்லாமல் செய்து விடுகிறார்கள். அவர்களுக்கு அதிகார மட்டத்தில் நெருக்கமான தொடர்புகள் இருப்பதால் எளிதாக வரலாற்றை இருட்டடிப்புச் செய்கின்றனர். கொல்லம் தீர்ப்புச் செய்தியை நாம் பேச ஆரம்பித்தவுடன் அவர்கள் விரைவாகச் செயல்பட்டு அதை அழித்து விட்டார்கள்
[22/10, 10:53]
: அது சட்ட வல்லநர்கள் தான் விளக்க முடியும். நாம் வெற்றி பெற்றதனால் மறுபடி வழக்குத் தொடுக்க முடியாது. தோல்வி அடைந்த கள்ளர்கள் மேல்முறையீடு செய்யலாம். ஆனால் அவ்வாறு இவ்வளவு நீண்ட இடைவெளியில் மேல்முறையீடு செய்வது சிரமம்.
இரண்டாவது, அவர்கள் வஞ்சகமானவர்கள் ஏனெனில் மேல்முறையீடு செய்தால் குடும்பர்கள் தான் பாண்டியர்கள் என ஒத்துக் கொண்ட மாதிரி ஆகிவிடும்.எனவே மறந்ததை மறக்கடிக்கத்தான் செய்வார்கள். மூன்றாவது, வழக்கு நடந்தது சமஸ்தானத்தில் பிரிட்டீஷ் காலத்தில். விடுதலை இந்தியாவில் மறுவிசாரணை நடைமுறை பற்றி போதிய நடைமுறைகள் உள்ளனவா என எனக்குத் தெரியவில்லை.
ஒன்று செய்யலாம் நமது உறவுகள் யாராவது லண்டன் நகரத்தில் இருந்தால் அங்கு தேடி எடுக்க வேண்டுகோள் வைக்கலாம்
[22/10, 11:02]
: ஒரு சான்றிதழ் தொலைந்து விட்டால் சம்மந்தப்பட்ட துறையில் நகல் வேண்டி விண்ணப்பித்து வாங்கிக் கொள்கிறோம் அதுபோல் தொலைந்துபோன கோர்ட் தீர்ப்பின் நகல் வேண்டி விண்ணப்பிக்க ஏதாவது வழி இருக்கத்தான் செய்யும்.
மற்றொரு கேள்வி 1924 காலகட்டத்தில் கொல்லம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக இருந்தது இங்கு நடைபெற்ற வழக்குகளின் தீர்ப்பு நகல்களின் ஒரு நகல் அலுவலக கோப்புகளில் ஆவணமாக வைத்திருக்க வேண்டும் என்பது விதி அந்த தீர்ப்பின் நகலை அதிகாரபூர்வமாக பெறுவதற்கு முயற்சித்தார்களா என்பது தெரியவில்லை.
[22/10, 11:02]
இப்படித்தான் நண்பர்கள் அனைவரும் கேள்விப்பட்டும் படித்தும் இருப்பீர்கள். தேனியில் ஒரு வைத்தியர் வீட்டில் இராசராச சோழன் பற்றிய ஓலைச் சுவடிகள் இருந்ததாகவும் அதை தஞ்சை பல்கலைக்கழகத்தில் ஒப்படைத்ததாகவும் வட்டாட்சியர், துணை ஆட்சியர் என்று ஒரு அதிகார வர்க்கமே மின்னல் வேகத்தில் செயல்பட்டு அந்த ஓலைச் சுவடிகளே நாங்கள் பெறவில்லை என்று சொல்லி விட்டார்கள். இன்று எல்லாம் அமைதியாகி விட்டது. ஆட்சியில் இருப்பவர்கள் அனைவருமே குடும்பர்களின் எதிரிகள் தான்.
[22/10, 11:07
இந்த செய்தி அன்றைய செய்தித்தாள்களில் பிரசுரமாகியுள்ளது ஆனாலும் இதை மூடி மறைத்து விட்டனர்.
[22/10, 11:09
இதை மாவட்ட ஆட்சி தலைவரிடம் ஒப்படைத்தவர் அண்ணாமலை சுகுமாறன் என்ற பத்திரிகையாளர்.
[22/10, 11:10]
அண்ணாமலை சுகுமாரனும் இதில் உடந்தையான ஆள் தான்
Comments
Post a Comment