குடும்பனின் சங்க இலக்கியங்கள்
[29/10, 17:00]
இன்று நம்மிடையே வழக்கத்தில் உள்ள பொய்யான கட்டமைக்கப்பட்ட வரலாறு
சங்ககாலம் என்பது கிமு 300- கிபி- 300 என்று வரையறுத்துக் கூறுவது , தமிழர்களின் வரலாறை அசோகனின் வரலாறுக்குப் பின்பாக வைக்கும் கெடுநோக்கம் கொண்டது.
கீழடி நாகரிகம் கிமு 800 என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
சிவகளை நெல் உமியின் காலம் கிமு 1300 என்கிறது.
ஆதிச்ச நல்லூர் அகழாய்வு கிமு 1400 -1600 காலக்கட்டத்தைக் குறிக்கிறது.
சிவகளை களைக்கொத்தி காலம் கிமு 3250 எனவருகிறது.
காவிரி பூம்பட்டினம் காலம் கிமு 15200 என்று தொன்மையைக் கைகாட்டுகிறது.
தொல்காப்பியம் எழுதப்பட்டது கிமு-1500- 2000 என அறிஞர்கள் வரையறை செய்துள்ளனர்.
தொல்கபிலரின் காலம் கிமு 1000 எனவும் வரலாறு சொல்கிறது.
எனவே கிமு 300 என்பதை சங்ககாலம் முடிவுற்ற காலம் எனலாம்.
வைதீகம் , பௌத்தம், ஜைனம் , காபாலிகம் போன்ற மதங்கள் தமிழகம் நுழைந்தவுடன் தமிழரின் சங்ககால வாழ்வியல் முறை முடிவுக்கு வந்தது. சமூகம் சீர்குலைந்தது.
இக்காலத்தில் தான் சிலப்பதிகாரமும், திருக்குறளும் தோன்றின. சங்க இலக்கியங்களில் ஒரு கரிகாலனைப் பற்றிய பாடல்கள் தான் உள்ளன. கரிகாலனின் தாய்மாமன் இரும்பிடர்த் தலையர் பாண்டிய மன்னனான, பாண்டியன் கருங்கையொள்வாட் பெரும் பெயர் வழுதியைப் பாடியுள்ளார். இப்பாடல் புறநானூற்றுப் பாடல் வரிசையில் இரண்டாம் பாடலாக வைக்கப்பட்டுள்ளது அதன் பழைமையைக் குறிக்கிறது. எனவே கல்லணை கட்டிய கரிகாலனின் காலம் மிகத் தொன்மையானது எனப் புரிந்து கொள்ளலாம்.
மற்றவர்கள் சொல்லும் வரலாறு நமக்கு எதிரானது உண்மை இல்லாதது.
[29/10, 15:19]
“ கொண்டி யுண்டித் தொண்டையோர் மருக
மள்ளர் மள்ள மறவர் மறவ
செல்வர் செல்வ செருமேம் படுந”
-பெரும் பாணாற்றுப்படை- 454-456
தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடியது. பத்துப் பாட்டில் ஒன்பதாவது பாடலாக வைக்கப் பட்ட கரிகால் பெருவளத்தானைப் பற்றிய பாடலையும் இவரே இயற்றி 16 லட்சம் பொன் பரிசில் பெற்றவர்.
இரு மன்னர்களையும் ஒரே நேரத்தில் பாடியுள்ளதால் தொண்டைமான் இளந்திரையனும் கரிகால் பெருவளத்தானும் சமகாலத்தில் தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பில் இருந்தது தெரியவருகிறது.
இதில் தொண்டையோர் மருக மள்ளர் மள்ள என இளந்திரையன் குலத்தையும் மறவர் மறவ என அடுத்து மறம் என்ற பொருளையும் வைத்துப் பாடுவதன் மூலம் தொண்டைமான் இளந்திரையன் ஒரு மள்ளர் குலத்தவன் என்பதும், மள்ளர் என்பது மறத்தை மட்டும் அல்லாது இனத்தைக் குறித்தும் வந்தது என்பதன் மூலம் தமிழகத்தை சங்க காலத்தில் ஆட்சி செய்த மன்னர்கள் மள்ளர் குலத்தவரே என்பது தெளிவாகத் தெரிகிறது.
இதை உறுதி செய்யும் விதமாக இளந்திரையன் விருந்தினர்களுக்கு வெள்ளிக் குடங்களில் செந்நெல் அரிசிச் சோறை தாய் பிள்ளைமுகம் பார்த்து உணவு கொடுத்துப் பசியாற்றுவது போல உணவை இளந்திரையனே பறிமாறினான் என்கிறார் கடியலூர் உருத்திரங்கண்ணனார்.
“ வல்லோன் அட்ட பல்லூன் கொழுங்குறை
அரிசெத் துணங்கிய பெருஞ்செந் நெல்லின்
தெரிகொ ளரிசித் திரணெடும் புழுக்கல்
அருங்கடித் தீஞ்சுவை யமுதொடு பிறவும்
விருப்புடை மரபிற் கரப்புடை யடிசில்
மீன்பூத் தன்ன வான்கலம் பரப்பி
மகமுறை மகமுறை நோக்கி முகனமர்ந்து
ஆனா விருப்புற் றானின் றூட்டி”
பெரும்பா- 473-479
அட்ட- சுட்ட
குறை- தசை ( கறி)
அரி- நெற்சூடு
உணங்கிய- அவித்துக் காயப்போட்ட நெல்
புழுக்கல்- சோறு
கடி- புதுமணம்- வாசனை
கரப்பு- குடம்
மரபு- முறைமை
வான்கலம்- வெள்ளித் தட்டு
மகமுறை- விழா விருந்து
மகமுறை- தாயின் பாசப் பார்வை
ஆனா- அளவுகடந்த, நீங்காத
கொண்டி- திரையாகப் பெற்ற பொருள்
இப் பெரும்பாணாற்றுப் பாடல் வரிகள் சங்ககால மள்ளர்களின் விருந்தோம்பும் பண்பைப் படம் பிடித்துக் காட்டுகிறது. இன்று நாம் அதை இழந்து தவிக்கிறோம்.
[29/10, 16:04]
இந்த பாடல் மள்ளர் தான் மறவர் என்பதை தெளிவாக கூறுகிறது ஆனால் நம்மில் சிலர் மடைமாற்றும் விதமாக இது மறவரை குறிப்பதாக பொய்யான விளக்கத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்!
இன்றைய மறவர்கள் விஜயநகர போர் படையின் போர் வீரர்கள் இவர்களுக்கும் இந்த சங்க பாடலுக்கும் சம்பந்தமில்லை !
[29/10, 16:24]:
கடியலூர் உருத்திரங்கண்ணனார் தான் இருமன்னர்களையும் அவர்களின் கொடைநலத்தையும் பாராட்டிப் பாடியுள்ளார். இரண்டு பாடல்களுமே பத்துப் பாட்டில் வைக்கப் பட்டுள்ளது. எனவே சமகாலத்தவர் என முடிவு செய்யலாம். இளந்திரையனிடம் பரிசில் பெற்ற பெரும் பாணன் வழியில் மற்றொரு பாணனைக் கண்டு அவனை இளந்திரையனிடம் ஆற்றுப் படுத்துகிறான். கண்ணனாரே கரிகாலனினம் 16 லட்சம் பொன் பரிசில் பெற்றதையும் , பாடல் அரங்கேற்றத்திற்குப் பட்டி மண்டபம் அமைத்ததையும் வரலாறு சொல்கிறது.
“ தழுவு செந்தமிழ்ப் பரிசில் வாணர்பொன்
பத்தோ டாறுநூ றாயிரம் பெறப்
பண்டு பட்டினப் பாலை கொண்டதும்”
என்று கலிங்கத்துப் பரணி அது பற்றிய குறிப்புகளைத் தருகிறது.
எனவே சோழனும் இளந்திரையனும் சமகாலத்தவர் என்பதை உறுதியாகச் சொல்லலாம். கரிகாலன் காலம் கிபி இரண்டாம் நூற்றாண்டு எனப் பொய்யான வரலாறு படிக்கின்றனர். அவன் காலம் கிமு 300 க்குக் குறையாது.
Comments
Post a Comment