குடும்பனின் வரலாற்றில்

 பாண்டிய நாட்டில் கள்வர்களிடமிருந்து கால்நடைகளை மீட்கும் மள்ளர் குல  குடும்பர் இனக்குழு  "கள்ளங்கொண்டான் தெய்வம்"!



மள்ளர் குல குடும்பர் இனக்குழுவினர் பசுக்கூட்டங்களை மீட்ட செய்தியினை:

(1)

கோடுயர் வெற்பின் நிலங்கண்டிரைகருதும் தோடுகொள் புள்ளின் தொகையொப்பக் கூடார் முரணகத்துட்ப பாற முழவுத்தோள் மள்ளர் அரணகத்துப் பாய்ந்திழிந்தார் ஆர்த்து

(புறப்பொருள் வெண்பாமாலை உழி.படலம்: 20)

அதாவது,

மத்தளம் போன்ற திரண்ட தோள்களையுடைய மள்ளர், நிலத்திலே இரையைப் பாய்ந்து பிடிக்கும் பறவை போல, பகைவர் பயந்து ஒழியும்படி மதில் உச்சியிலிருந்து குதித்து இறங்கினர்.

(2)

கல்கெழு சீறூர்க் கடைக்கண் விருப்பினான் மெல்ல நடவா விரையு நிரையென்னோ தெள்ளற் கான்யாற்றுதீநீர் பருகவும் மள்ளர் நடவா வகை 

(பெரும்பொருள் விளக்கம்-ச14)

அதாவது, 

மிகுந்த சீர்மையான ஊரைச் சென்றடையும் விருப்பத்தினால் உந்தப்பட்டு வெட்சிபடை வீரமள்ளர்கள் தாம் கொள்ளைகொண்டுவரும் பசுக்கூட்டம் இடைப்பட்ட தெளிந்த தித்திப்பான காட்டாற்றுத் தண்ணீரைப் பருகும்படி செய்து விரைவாக ஓட்டிச் சென்றனர். இது வெட்சிமள்ளர்களின் ஒழுக்கநெறியாகும்.

(3)

கரந்தியல் காட்டுத்தீயப் போலப் பெரிதும் பரந்துசென் மள்ளர் பதிந்தார் அரந்தை விரிந்தவியு மாறுபோல் விண்டோயத் தோன்றி எரிந்தவியும் போலுமிவ்வூர்    

(புறத்திரட்டு-பாடல் 40)

அதாவது,

விரைந்து பரவி வளைத்துக்கொண்டு மூண்டெரியும் காட்டுத்தீ போல வீரமள்ளர்கள் பசுக்கூட்டத்தை மீட்கும் பொருட்டு பகைவர் ஊருக்குள் சென்றனர். அதனால், அந்த ஊர் துன்பம் பெருகி அழிவது போல் எரிந்து அழியும்.

இவ்வாறு மள்ளர் குல குடும்பர் இனக்குழுவினர் கள்வர்களால் கவர்ந்து செல்லப்பட்ட பசுக்களை மீட்டுள்ளதை பண்டைய காலந்தொட்டு அறியமுடிகிறது. இவ்வாறு,  பசுக்களை கள்வர்களிடமிருந்து மீட்ட மள்ளர் குல குடும்பர் இனக்குழு தலைவர் ஒருவர் கள்ளங்கொண்டான் தெய்வமாக வீர நாட்டார் குல வழிபாட்டில் அறியப்படுகிறார்.

பாண்டிய நாட்டில் இராஜபாளையத்தில் சிவன்-பார்வதி, தடாதகைப்பிராட்டி, வீச்சு வலைகாரன்-ஓடத்தம்மன், நல்லமாடன், இருளப்பசாமி - இருளாயி, வேடன் முருகன் தெய்வங்களோடு கள்ளங்கொண்டான் தெய்வமும் ஒன்றாக அறியப்படுகிறார்.

கள்வர்களிடமிருந்து பசுக்கூட்டத்தையும், செல்வத்தையும் பாதுகாத்த மற்றும் பாதுகாக்கும் மள்ளர் குல குடும்பர் தெய்வம் தான் " கள்ளங்கொண்டான்" ஆவார். 

எனவே, தமிழ் நாட்டில் ஆடு, மாடு மற்றும் கோழி திருடர்களால் பாதிக்கப்படும் இனக்குழுவினர்கள் "கள்ளங்கொண்டான்" தெய்வத்தை வழிபட திருடர் பயம் நீங்கும் என்பது ஐதீகம் ஆகும்.

இராமமூர்த்தி குடும்பன்

Comments

Popular posts from this blog

குடும்பனின் வரலாற்று புரிதல்

திருநெல்வேலி இரயில் நிலைய நிலைய மேம்பாட்டு பணிகள்

திருநெல்வேலி யின் இலக்கியத்தில்