குடும்பனின் பார்வையில்
மதுரை CBI சிறப்பு நீதிமன்றம் கொடூர மனம் கொண்ட காட்டுமிராண்டிகளுக்கு சாகும் வரை இரட்டை தூக்கு தண்டனை வழங்கியும், அபராதம் விதித்தும் தண்டித்துள்ளது நீதித்துறையின் மீது பாதிக்கப்பட்ட மக்களுக்கு மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.
ஆனால் இந்த வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள 9 காவல்துறையினர் மட்டுமே குற்றவாளிகளா?
இல்லை. அப்போதிருந்த Friends of Police என்ற அமைப்பை சேர்ந்த சில வெளிநபர்கள்,
உச்சநீதிமன்றம் "Arnesh Kumar Vs. State of Bihar (2014) 8 SCC 273" என்ற வழக்கில் வழங்கிய தீர்ப்பை சிறிதளவும் பொருட்படுத்தாமல் இயந்திரகதியாக ரிமாண்ட் செய்து உத்தரவிட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் சரவணன், ஆசன வாயிலும், உடலின் பல்வேறு பகுதிகளிலும் கொடூர இரத்தக் காயங்கள் இருந்தும் தந்தை, மகன் இருவருக்கும் Fit for Remand என்று குறிப்பிட்டு மருத்துவ சான்றிதழ் வழங்கிய கொடூர மனம் கொண்ட, மருத்தும் பார்ப்பதற்கு தகுதியில்லாத பெண் மருத்துவரும் குற்றவாளி தான்.
அதேபோல காவல் மரணம் நடந்தவுடன் சாத்தான்குளம் காவல் நிலையம் சென்று CCTV Footage ஆதாரங்களை மாற்றி அழித்ததாக குற்றம்சாட்டப்பட்ட தூத்துக்குடி ADSP D.குமார் மற்றும் C.பிரதாபன் என்பவரும் குற்றவாளிகளே.
மேலும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 176-ன் கீழ் விசாரணை மேற்கொள்ள வந்த கோவில்பட்டி குற்றவியல் நீதித்துறை நடுவர் பாரதிதாசன் அவர்களை ஒருமையில் பேசி மிரட்டிய தலைமைக் காவலர் மகாராஜனும் குற்றவாளி.
உச்சநீதிமன்றம் Arnesh Kumar Vs. State of Bihar (2014) 8 SCC 273 என்ற வழக்கில் பத்தி எண். 7 மற்றும் 8-ல் கீழ்க்கண்டவாறு உத்தரவு வழங்கியுள்ளது.
(7) Failure to comply with the directions aforesaid shall apart from rendering the police officers concerned liable for departmental action, they shall also be liable to be punished for contempt of court to be instituted before High Court having territorial jurisdiction.
(8) Authorising detention without recording reasons as aforesaid by the judicial Magistrate concerned shall be liable for departmental action by the appropriate High Court.
இந்த கொடூர கொலையில் மேற்கண்ட 9 காவலர்கள் மட்டுமே குற்றவாளிகள் அல்ல. இன்னும் தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளிகள் உள்ளனர்.
இவர்கள் நீதிமன்ற தண்டனையிலிருந்து தப்பலாம். ஆனால் கடவுளின் மன்றத்தில் தண்டனை நிச்சயம் உண்டு.
Comments
Post a Comment