பள்ளர்களின் வாக்கு யாருக்கு!?
பள்ளர்களின் #வாக்கு யாருக்கு.....! ??
இன்று ஆறு மணியோடு தேர்தல் பிரச்சாரம் முடியுது, இதுவரைக்கும் நடந்த தேர்தல் பிரச்சாரங்களை விட இந்த தேர்தலில் முக்கியமான கட்சிகளின் பிரச்சாரங்கள் இன்னும் கொஞ்சம் இன்ட்ரஸ்டிங்காதான் இருந்துச்சு, திராவிட தலிவா ஆளுமையோடு இருந்த காலகட்டத்தில் பார்த்த பிரச்சாரம், அதற்குப் பிறகு அவ்வளவு நேர்மையான பிரச்சாரத்தை பார்க்க முடியல, அந்தக் குறை இந்த தேர்தலில் தான் சரியாகியிருக்கு, ஒருத்தரை மாத்தி ஒருத்தர் அழகா அடிச்சுக்கிட்டாங்க, பார்க்கவே ஜாலியா இருந்துச்சு, பல பாலிடால் கதைகள் வெளியே வந்துச்சு, இன்ட்ரஸ்டிங்....!!
அட ஒருத்தர் செய்ற கள்ளத்தனத்தை இன்னொருத்தர் காப்பாத்துறதா நாகரீகம், அம்பல படுத்துவது தானே நாகரீகம்! அது அழகா இந்த தேர்தலில் நடந்திருக்கு...!!!?
ஈழ துரோகத்திற்கு பிறகு விழித்துக் கொண்ட திராவிடம் மிகத் தெளிவான திட்டத்தோடு இந்த தேர்தலை அணுகுகிறது, ஐந்து வருட ஆட்சியை கொடுத்ததுனாலயே தமிழர்கள் ஈழத் துரோகத்தை மறந்திருப்பார்கள் என்று திராவிடர்கள் நம்பவில்லை, திராவிடர்கள் புத்திசாலிகள் அதனால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு அழகாக தெளிவாக காய் நகர்த்தி வருகிறார்கள், கூட்டணி அமைத்தது முதல் 'பாஜக பூந்தரும்' என்று தங்கள் எஜமானர்களான ஆரிய பாஜகவினர் மீது ஒரு ஆளுமையான பிம்பத்தை கட்டமைப்பது வரை மிகத் தெளிவாக #சதி உணர்வோடு செய்து முடித்திருக்கிறார்கள், அதற்கான #வெகுமானம் தான் மத்திய பாஜக கொண்டு வந்த #டீ-லிமிடேஷன் மற்றும் #பெண்கள் #ஒதுக்கீடு மற்றும் அதன் #தோல்வி....!!
தேர்தல் நேரத்தில் ஒரு சாமானிய #கவுன்சிலர் கூட செய்ய தயங்குகிற ஒரு நகர்வை மத்தியில் வலுவாக அதிகாரத்தில் இருப்பவர்கள் செய்கிறார்கள் என்றால் அவர்களை நீங்கள் அப்பாவிகளாக எடுத்துக் கொள்ள போகிறீர்களா.....???
இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் தங்கள் ஆட்சியை நிறுவத் துடிக்கும் பாஜக தமிழகத்தில் தேர்தல் நடக்கும்போது, ஏற்கனவே தமிழக மக்கள் மத்தியில் ஓர் பாஜக எதிர்ப்பு #நரேட்டிவ் செட் செய்யப்பட்டிருக்கிறது என்பதை உணர்ந்த பிறகும் இதற்காக #மெனக்கிட்டு ஒரு கூட்டத் தொடரை கூட்டி இப்படி ஒரு மசோதாவையும் முன்னெடுத்து அதை தோல்வியுறவும் அனுமதிக்கிறார்கள் என்றால் அந்த கிரெடிட்டை அவர்கள் யாருக்கு வாரி வழங்க நினைக்கிடுகிறார்கள்....???
ஒரு ஆளும் கட்சியாக இருக்கிறவர்கள் தோற்கும் என தெரிந்தே ஒரு மசோதாவை சபைக்கு கொண்டு வருவார்களா? அப்படி அவர்கள் கொண்டு வருகிறார்கள் என்றால் அதற்கு அதற்கு பின்னால் இருக்கும் அரசியல் கணக்கு ஆராயப்பட வேண்டியது அவசியம் ஆகிறது....!!!
உண்மையில் சொன்னால் திராவிடர்களை வெற்றி பெற வைக்க அவர்களின் எஜமானர்களான ஆரிய பாஜகவினருக்கு இருக்கும் தீவிரத்தில் பத்தில் ஒரு மடங்கு கூட திராவிடர்களுக்கு இல்லை என்று தான் சொல்ல வேண்டும், அடித்து ஆட வேண்டிய இந்த விஷயத்தில் உண்மையில் என்ன நடக்கிறது என்பது புரியாமல் சம்பிரதாயத்துக்காக ஏதோ ஒரு #கருப்பு சட்டையை அணிந்து, #ஸ்கோர் செய்ய வேண்டிய இடத்தில் கோட்டை விட்டுவிட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும், தற்போதைய நிலையில் வலுவிழந்து கிடக்கும் தனது #நம்பகமான அடிமையான திராவிடத்தை வலுப்படுத்துவதற்காகவே மத்தியில் உள்ளவர்கள் இதை செய்கிறார்கள் என்பதை இந்த திராவிடர்கள் புரிந்து கொள்ளவும் இல்லை, உணரவும் இல்லை....!!
தமிழகத்தில் திராவிடத்தை வலுப்படுத்துவதன் மூலம் அவர்களுக்கு எதிராக வலுவாக தன்னை நிலை நிறுத்திக் கொள்ள முடியும் என்று மத்தியில் உள்ளவர்கள் நினைக்கிறார்கள், அதற்காக மெனக்கிடவும் செய்கிறார்கள். அவர்களின் கணக்கு அதிமுகவை வைத்துக்கொண்டு அடுத்த ஐந்து வருடத்தை ஆளுவது அல்ல, திராவிடத்தை தாங்கி பிடிப்பதன் மூலம் அடுத்த ஆயிரம் வருடங்களுக்கு தமிழர்களை ஆள அவர்கள் ஆசைப்படுகிறார்கள்....!!?
ஆரியர்களும் திராவிடர்களும் இதுபோன்ற ஒரு #கள்ளக்கூட்டில் செயல்படுவதை உணராத பழனிச்சாமி போன்றவர்கள் அடுத்து ஆட்சி நமக்கு தான், சிஎம் நாம தான் என்று கனவில் கிடக்கிறார்கள், பாவம் பழனிச்சாமி...!
தன்னை தேர்ந்த ராஜதந்திரியாக கருதிக் கொள்ளும் பழனிச்சாமி, தான் ஏதோ புத்திசாலித்தனமாக கூட்டணிக் கட்சிகளுக்கு எல்லாம் அவர்கள் வலுவாக இல்லாத இடங்களை ஒதுக்கி விட்டு தான் மட்டுமே வலுவான எண்ணிக்கையில் வென்று விடப் போகிறோம் என்ற கனவில் மிதந்து கொண்டு இருக்கிறார், தன் தலைமையில் ஒரு தேர்தலை கூட வென்றிறாத பழனிச்சாமி தான் சிஎம் மாக இருந்ததை மட்டும் நினைவில் வைத்துக் கொண்டு தன்னை செல்வாக்கு மிக்க தலைவராக, தேர்ந்த ராஜதந்திரியாக நினைத்துக் கொண்டு இருக்கிறார், பாவம் அவர் தென் மாவட்ட இடைத்தேர்தலில் எவ்வாறு தப்பித்தோம் என்பதையும், இந்தியா முழுவதும் ஆட்சியாளர்களை ஆட்டிப்படைக்கும் மத்திய பாஜக தம்மை மட்டும் எப்படி தப்பிக்க அனுமதித்தது என்பதையும் மறந்துவிட்டார், தனக்கு மட்டுமே அரசியல் தெரியும் என்று நினைத்துக் கொண்டார் போலும்....!!!
தற்போது என்னாச்சு இதற்காகவே ஒரு மசோதாவை கொண்டு வந்து மொத்தமாக எதிரணி பக்கம் மக்களை திருப்பி விட்டு விட்டார்கள் திராவிடத்தின் எஜமானர்கள், விளைவு ஏமாற்றப்பட்டார் பழனிச்சாமி...!!!
ஆரியர்களுக்கும் திராவிடர்களுக்கும் இந்தத் தேர்தல் வாழ்வா சாவா தேர்தல், இதில் வென்றால் மட்டுமே அவர்களுக்கு தமிழகத்தில் வலுவான எதிர்காலம் இருக்கிறது, இதில் திராவிடம் வெல்வதன் மூலம் ஆரியமும்,திராவிடமும் ஒருவருக்கொருவர் தாங்கி தங்களை நிலை நிறுத்திக் கொள்ள முடியும் என்பது அவர்களின் அரசியல் கணக்கு, இது தத்தி திராவிடர்களுக்கு வேண்டுமானால் ஆச்சரியமாக இருக்கலாம், ஆனால் ஆரியர்களின் அஜெண்டாவே அதுதான்...!
பழனிச்சாமியை பொறுத்தவரை இது அவருக்கு மிக மிக முக்கியமான தேர்தல், இதில் வென்றால் மட்டுமே அவர் சிஎம் மாக மட்டுமல்ல, கட்சியின் பொதுச் செயலாளராகவும் நீடிக்க முடியும், இல்லாவிட்டால் அரசியல் நெருக்கடியை சமாளிப்பது மட்டுமல்ல உட்கட்சி பூசல்களையும் சமாளிக்க வேண்டிய நிலைமை உருவாகும்! தொடர்ச்சியாக தேர்தல்களில் தோல்வியை மட்டுமே பெற்றுத்தரும் ஒருவரை எவ்வளவு நாள்தான் கட்சிக்காரர்கள் தலைவராக ஏற்று நடப்பார்கள்...???
அவர்களும் சம்பாதிக்க வேண்டும், சம்பாதித்ததை காக்க வேண்டும் என்று விரும்புவார்களா மாட்டார்களா? ஆக இது பழனிச்சாமிக்கும் நெருக்கடியான தேர்தல் தான்....!
மத்திய பாஜக ஏற்படுத்திக் கொடுத்த அழகான வாய்ப்பை உணராத தத்தி திராவிடத்தை போல், இந்தத் தேர்தலில் தான் வென்றே ஆக வேண்டிய அவசியம் இருப்பதையும் உணராமல் கோட்டை விட்டுவிட்டார் #பழனிச்சாமி, கூட்டணிக் கட்சிகளுக்கு பாரபட்சமான தொகுதிகளை ஒதுக்கியதில் துவங்கி புதிய தமிழகம் தலைவர் டாக்டர் #கிருஷ்ணசாமி அவர்களையும் கூட்டணியில் சேர்க்காமல் புறக்கணித்ததோடு, பப்ளிக்கில் அவர்களின் வாக்கு சதவீதத்தை பற்றி உதாசீனப்படுத்தி பேசியதிலும் தமக்குத் தாமே குழி வெட்டி விட்டார், பதிலுக்கு டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள், பழனிச்சாமி தலைமையில் தென் மாவட்டத்தின் அவர் வாங்கிய வாக்கு சதவீதங்களை மீடியாவை அழைத்து படம் போட்டு காட்டியது பழனிச்சாமிக்கு கூடுதல் அடி....!!!
தேர்தல் அரசியலில் ஒவ்வொரு வாக்குகளுமே மதிப்பு வாய்ந்தவை என்பதை பழனிச்சாமி உணர தவறிவிட்டார், கடந்த எம்எல்ஏ தேர்தலில் மிக மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் ஆட்சியை திராவிடத்திற்கு தாரை
வார்த்ததை அவர் மறந்திருக்கலாம், அவர் கட்சிக்காரர்கள் பறந்து இருக்க வாய்ப்பு இல்லை.....!!!
பழனிச்சாமியை பொறுத்தவரை தேர்தலில் வெல்வதைத் தாண்டி கட்சித் தலைவராக நீடித்தாலே போதும் என்று நினைத்து விட்டார் போலும், பாவம் பழனிச்சாமிக்கு தெரியவில்லை, தான் சிஎம் மாக இல்லாவிட்டால் கட்சியின் தலைமை பொறுப்புக்கும் பிரச்சனை வரும் என்று....??!!
ஆரிய திராவிட கட்சிகளை பொறுத்தவரை இது ஆட்சியதிகாரத்தை தங்களுக்குள் பரிமாறிக் கொள்ளும் ஒரு தேர்தல், சாமானிய மக்களை பொருத்தவரை இது தாங்கள் பெறும் ஆயிரம் ஐநூறுகளுக்கு வாக்களிக்கும் ஒரு தேர்தல், ஆனால் இது பள்ளர்களைப் பொறுத்தவரை மிக மிக முக்கியமான தேர்தல், தங்களை உதாசீனப்படுத்தியவர்களுக்கு மத்தியிலும், உதாசீனப்படுத்த காத்திருப்பவர்களுக்கு மத்தியிலும், தங்கள் செல்வாக்கை நிரூபித்து காட்ட வேண்டிய தேர்தல்....!!!
இதை ஏதோ ஒரு கட்சித் தலைவர் தானே செய்தார் என்று அவர்கள் கடந்து போக முடியாது, இதே செயலை நாளை வேறு கட்சியினரும், அரசு அதிகாரிகளும் கூட செய்யக்கூடும்! ஏனெனில் ஜனநாயக தேர்தல் முறை உள்ள ஒரு நாட்டில் #வாக்கு #செல்வாக்கு கொண்ட சமூகங்களுக்கு தான் உரிய #அங்கீகாரம் கிடைக்கும், பள்ளர்கள் தற்போது விழித்துக் கொள்ளாவிட்டால் எதிர்காலத்தில் இதைவிட மோசமான அவமதிப்புகளையும் உதாசினங்களையும் அவர்கள் எதிர் கொள்ள வேண்டியதிருக்கும், இதை டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களுக்கு அல்லது புதிய தமிழகம் கட்சியில் உள்ள பள்ளர்களுக்கு மட்டுமே விடுக்கப்பட்ட விடுக்கப்பட்ட சவாலாக நினைக்க முடியாது, பள்ளர்கள் மற்ற கட்சிகளில் செல்வாக்கு செலுத்த வேண்டும் என்றால் கூட அவர்கள் தங்களின் வாக்கு சதவீதத்தை தனித்து, #தனித்துவமாக #எண்ணிக்கையாக காட்ட வேண்டியது அவசியம், அதுவும் இதுபோல சவால்கள் விடுக்கப்பட்ட பிறகு அவர்கள் ஏனோ தானோ என்று இந்த விவகாரத்தை எடுத்துக்கொண்டு தங்கள் வாக்குகளை பல்வேறு கட்சிகளுக்கு சிதறவிட்டால் நாளை எந்த கட்சியிலும் அவர்களுக்கு மரியாதை இருக்காது, பள்ளர்கள் வேறு கட்சிகளில் ஆளுமை செலுத்த வேண்டும் என்றாலும் கூட இந்தத் தேர்தலில் அவர்கள் தங்கள் வாக்கு சதவீதத்தை உறுதிப்படுத்த வேண்டியது அவசியம்....!!!?
ஒரு படி மேலே போய் சொல்ல வேண்டுமானால் மற்றவர்களுக்கு இது ஒரு சாதாரண தேர்தல் ஆனால் பள்ளர்களை பொறுத்தவரை இது ஒரு #சாதிவாரி வாக்காளர் #கணக்கெடுப்பு, இதில் வரும் எண்ணிக்கையை பொறுத்து அவர்களின் எதிர்கால அரசியல் #சாத்தியங்கள் அமையப்பெறும்....!!!
உங்கள் வாக்கு யாருக்கு சாதகமாக போகும் யாருக்கு எதிராக போகும் என்று சிந்திக்கவே தேவையில்லை, எவனாவது கொத்தடிமை உங்களை குழப்ப நினைத்தாலும் அதற்கு முக்கியத்துவம் கொடுக்க தேவையில்லை, நீங்கள் யாருடைய சாதக பாதகத்திற்கும் வாக்களிக்கவில்லை உங்களுடைய அரசியல் எதிர்காலத்தை வலுவாக நிலைநிறுத்திக்கொள்ள உங்களுக்காக வாக்களிக்கப் போகிறீர்களா, இதில் யார் ஜெயித்தால் என்னவாகும் என்றெல்லாம் யோசிக்கவே தேவையில்லை, இதற்கு முன்பும் உங்களுக்கான பிரதிநிதிகள் இல்லாத போது என்னவானது உங்களுக்கு நீங்கள் தான் அருண், உங்கள் அரசியலுக்கு நீங்கள்தான் ஆதாரம், இந்தத் தேர்தலில் நீங்கள் பெற போகும் ஒவ்வொரு வாக்கும் அரசியல் களத்தில் உங்கள் மதிப்பை உயர்த்தும்....!!!!
இந்தத் தேர்தலில் இந்த விவகாரம் எல்லா கட்சியினராலும் உற்று கவனிக்க கூடிய ஒரு விஷயமாக உருவாகி இருக்கிறது எனும் போது பள்ளர்கள் இதை ஏனோ தானோ என்று எடுத்துக்கொண்டு அப்பாவிகளாக தங்கள் தங்கள் கட்சி தலைமைகளுக்கு தான் விசுவாசம் என்று அப்பாவித்தனமாக செயல்பட்டால் நாளை அவர்களுக்குத்தான் அது ஆபத்தாக போய் முடியும்.....!!!
இப்போது வரை தென் மாவட்டங்களில் நடந்து வரும் கூலிப்படை கொலைகளை எந்த ஆரிய திராவிட கட்சிகளும் கண்டிக்காத நிலையில் புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களும், பள்ளர்களின் பல்வேறு இயக்கங்களுமே அவற்றை எதிர்கொண்டு வந்திருக்கிறது! இதற்குப் பிறகும் தங்கள் தலைமைகளுக்குத்தான் விசுவாமாக கிடப்போம் என்றால் எதிர்காலத்திலும் இந்த நிலை தான் தொடரும், மாற்றாக இந்த தேர்தலில் தங்கள் சமூகத்தின் வாக்கு சதவீதத்தையும், ஒற்றுமையையும், அரசியல் அறிவையும் இந்த #பள்ளர்கள் காட்டுவார்களேயானால் நாளை அவர்களின் வாக்குகளை மொத்தமாக அள்ள வேண்டும் என்ற நோக்கத்திற்காகவாவது அவர்கள் சொல்லுக்கு ஒரு மதிப்பு இருக்கும், உங்களை வளர்த்து விட வேண்டும் என்கிற எண்ணம் இல்லாவிட்டாலும் கூட உங்களை எதிர்க்க எவருக்கும் துணிச்சல் இருக்காது....!?!?
பள்ளர்களைப் பொறுத்தவரை இந்தத் தேர்தல் அவர்களுக்கு கிடைத்திருக்கும் ஒரு பொன்னான வாய்ப்பு, அவர்களின் அரசியல் அறிவையும், வாக்கு வீதத்தையும், சமூகத்தின் செல்வாக்கையும் உலகிற்கு காட்டப் போகும் வாய்ப்பு.....!!
இன்னும் இரண்டு நாள் இருக்கிறது சூழல் எப்போது வேண்டுமானாலும் யாருக்கு சாதகமாக வேண்டுமானாலும் மாறலாம், அதனால் பள்ளர்களுக்கு அந்தக் கேள்வியை இருக்க வேண்டிய அவசியமே இல்லை, அவர்கள் #இலக்கு தெளிவாக குறிக்கப்பட்டு விட்டது, அவர்கள் யாருக்கு வேண்டுமானாலும் வேலை செய்துவிட்டு போகட்டும் ஆனால் வாக்கு என்று வரும்போது அவர்கள் சமூகமாக தற்போதைக்கு தங்களை நிலை நிறுத்திக் கொள்வது அவசியமானது, ஆம் மிக மிக அவசியமானது. இதில் தயவு தாச்சன்யம் பார்க்க வேண்டிய அவசியம் ஏதுமில்லை, தங்களை சமூகமாக தற்காத்துக் கொள்ள தயங்காத மக்களால் தான் அரசியலில் சமூகமாக ஆதிக்கம் செலுத்த முடியும், அரசியலில் ஆதிக்கம் செய்பவர்களால் தான் ஆட்சியாளர்களாக உயர முடியும், ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்கிற பள்ளர்களின் ஒற்றை இலக்கிற்கு எதிராகத்தான் தங்கள் சமூகத்திற்கு எதிராக இப்படியோர் சவால் விடுக்கப்பட்டு இருக்கிறது என்பதை இந்த பள்ளர்கள் புரிந்து கொண்டு அரசியலில் அறிவோடு நடந்து கொள்வார்கள் என்று நம்புவோம்....!!!
இனி எவனும் உங்களை உதாசீனப்படுத்தும் முன் ஆயிரம் முறை யோசிக்க வேண்டும், அதற்குப் பிறகும் கூட உதாசீனப்படுத்த அவன் துணியக் கூடாது....!!
உங்களை உதாசீனப்படுத்தியதற்கான விலையை அவர்கள் கொடுத்தே ஆக வேண்டிய நிலை வரும் என்கிற வரலாறை வலுவாக எழுதுங்கள், தங்கள் நிலையில் வலுவாக இல்லாத எவரும் எதிரிகளின் வெற்றிக்கே பயன்படுவார்கள் என்பதை உணர்ந்து செயல்படுவது அவர்களுக்கு நன்மையை கொண்டு வரும். அரசியல் என்பது விடாப்பிடியாக இருப்பவர்களுக்கும் விட்டுக்கொடுக்க தயாராக இருப்பவர்களுக்கு இடையே நடக்கும் ஒரு போர், இதில் வெல்ல நினைத்தால் என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்....!!!
குல சாமி கோஷங்கள் எல்லாம் உங்களுக்கு ஒரு போதும் அரசியல் செல்வாக்கை பெற்று தராது பள்ளர்களே, ஆதிக்க உணர்வும், தங்கள் நலனை தற்காத்துக் கொள்வதில் உங்களுக்கு உள்ள பிடிவாதமும் தான் உங்களுக்கு அரசியல் அதிகாரத்தையும், #ஆட்சி அதிகாரத்தையும் பெற்றுத் தரும்.....!!!
Comments
Post a Comment